நவாப்ர திட்டம்
மானாவாரி பகுதிகளுக்கான தேசிய நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் என்பது வேளாண்மை மற்றும் கூட்டுறவுத் துறையால் அமல்படுத்திய பதிணொன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் வேளாண்மை பேரளவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் இயங்கும் திட்டமாகும். திருந்திய வேளாண் பேரளவு மேலாண்மைத்திட்டத்தின் வழிமுறைகள் 2008 – 09 நிதி ஆண்டிலிருந்து அழுல்படுத்தப்படுகிறது.
நவாப்ரா 1990 – 91 ம் ஆண்டு 25 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து 9 வது திட்டத்திலும் அழுல்படுத்தப்பட்டது. 9 வது திட்டத்தின் போது, 2.25மி.ஹெக் நிலத்தை 103.00 கோடி நிதி உதவியுடன் செயல்படுத்த திட்டமிடப்பட்டது.
நோக்கங்கள்:
- இயற்கை வளங்கள் மற்றும் அதன் பயன்பாடுகளை பாதுகாத்தல், மேம்படுத்துதல் மற்றும் நிலையான மேலாண்மையை ஏற்படுத்துதல்
- வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை நிலையான முறையில் அதிகப்படுத்துதல்
- மானாவாரி பகுதிகளில் உள்ள சிதைவுறும் நிலையில் உள்ள பகுதிகளில் மரங்கள், குறுமரங்கள் மற்றும் புற்களை வளர்ப்பதன் மூலம் பாதுகாத்தல்
- பாசன மற்றும் மானாவாரிப் பகுதிகளில் உள்ள வேறுபாடுகளைக் குறைத்தல்
- நிலையான வேலை வாய்ப்பு சந்தர்ப்பங்களை ஊரக சமுதாயம் மற்றும் நில மற்றவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தல்
வழிமுறை நெறிகள்:
நவாப்ராத் திட்டத்தில் வரும் தொடர்ச்சியான செயல்பாடுகளும் செயல்முறை அமைப்புகளும் சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் மாறுபடும். நிலம் நீர்குலைதல் தேர்ந்தெடுக்கப்பட்ட நீர்த் தேக்கங்களில் முன்பே இருக்கக்கூடிய பண்ணை அமைப்பு முறைகள் மற்றும் நீர்த்தேக்க சமூகத்தால் அமைக்கப்படும் செயல்பாடுகளின் முன்னுரிமைகளைப பொறுத்து வேறுபடும். ஆகவே, வேறுபட்ட சூழலில் வேறுபட்ட மட்டங்களில் மாற்றி அமைத்துக் கொள்ளுமாறு வழிமுறைகள் எளிமையாக உள்ளன. இந்த வழிமுறைகளும் வாரசா அனாசாபகாட்டா வழிமுறைகள், நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டங்களுக்கான பொதுவான வழிமுறைகளை வழங்கிய தேசிய மானாவாரி பகுதி அதிகாரத்தில் அடங்கியுள்ளது. இவை வேளாண்மையின் பேரளவு மேலாண்மை திட்டத்தால் ஆவணம் செய்யப்பட்டது.
திட்ட செயல்கள்:
- விளைநிலம் இல்லாத பகுதிகளில் மண் மற்றும் ஈரப்பதம் பாதுகாத்தல் காடு வளர்ப்பு, தோட்டக்கலை மற்றும் புல்வெளி மேம்பாட்டின் மூலம் அங்கக உயிர்ப் பொருள் உற்பத்தி
- விளைநிலப் பகுதிகளில் மண் மற்றும் ஈரப்பதத்தை மேலும் பாதுகாத்தல் மற்றும் உற்பத்தியை அதிகப்படுத்தும் விலை மலிவான நிலையான பயிர் சாகுபடி முறைகளை மிதமான கட்டமைப்பு மற்றும் மண் பாதுகாத்தல் முறைகளை பயன்படுத்துதல்
- நிலத்தை மாற்றி வேறு விதமாகப் பயன்படுத்துவதன் மூலம் அதிக ஆழத்திற்கு உழவு செய்வதைத் தடுக்கலாம். இதனால் நீர் வழிந்தோடுவதைக் குறைக்கலாம். மண் அரிப்பைத் தடுக்க தோட்டக்கலை மர வளர்ப்பு, புல வளர்ப்பு செய்யலாம்
- நீர் வளங்களை மேம்படுத்தி, தரைமட்ட நீரை அதிகப்படுத்தச் செய்யலாம்.
- மிகச் சிறிய மற்றும் சிறிய விவசாயிகளின் வருமானத்தை அதிகப்படுத்தலாம். நிலமில்லாத குடும்பங்களுக்கு வேளாண் மற்றும் பால் பொருட்களை விற்பதன் மூலம் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் பணப்பயிர்களான காய்கறிப் பயிர்களை வளர்ப்பதன் மூலம் அவர்களின் பொருளாதார நிலையை உயரச் செய்யலாம்.
- நீர்த்தேக்கப் பகுதிகளில் வாழும் மக்களின் சமூக அந்தஸ்து மற்றும் வாழ் நிலையை மாற்றலாம்
|