Agriculture
நீர்த்தேக்க மேலாண்மை

மழைநீர் சேகரிப்பு

மழைநீர் சேகரிப்பு

மழைநீர் சேகரிப்பு மற்றும் செயற்கை முறையில் நிலத்தடி நீரை அதிகப்படுத்துதல்

மழைசேகரிப்பு என்றால் என்ன?

மழை பெய்யக் கூடிய பகுதிகளில் வடியும் நீரைசேகரித்து, சேமித்தலே இதன் முக்கிய நோக்கமாகும். முன்பிருந்த பழைய முறையே இப்பொழுது புதிய வழியில் பின்பற்றப்படுகிறது. பாலஸ்தீன் மற்றும் கீரிஸில் 4000 வருடங்களுக்கு முன்பே இந்த முறை வழக்கத்தில் இருந்தது. பழங்கால ரோம் நகரத்தில், குடியிருப்புகளில் தனித்தனியாக நீர் பிடிப்பு குழிகள் கட்டப்பட்டுள்ளன. பாகிஸ்தான் மற்றும் கட்ச் பகுதிகளில் உள்ள விவசாயிகள் மழை நீரை சேகரித்து, பாசனத்திற்கு பயன்படுத்தினர்.

நிலத்தடி நீரை செயற்கை முறையில் அதிகப்படுத்துதல் செயற்கை முறையில் நிலத்தடி நீரை அதிகப்படுத்துவது என்பது நிலத்தடி நீர் மட்டத்தை இயற்கை சூழ்நிலையில் அதிகப்படுத்துவது.நீர்த்தேங்கக்கூடிய பகுதிகளில் மனிதனால்  ஏற்படுத்தபடுத்தப்பட்ட அமைப்பும் செயற்கை முறையில் நிலத்தடி நீரை அதிகப்படுத்துவதாகும்.

மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம்

நில மேற்பரப்பு நீர் நம்முடைய தேவைகளுக்கு போதுமானவையாக இல்லை. ஆகவே நாம் நிலத்தடி நீரை சார்ந்து இருக்க வேண்டி உள்ளது.

நகரமயமாதலல், நிலத்தடி நீரின் அளவும் வேகமாக குறைகிறது. அதனால் நிலத்தடிநீரின் மட்டத்தை உயர்த்தி வேண்டியுள்ளது.

இந்தியாவில் இது போன்ற பல அமைப்புகள் அமைக்கப்பட்டு சி.ஜி. டயிள்யூ  பி.வால் பராமரிக்கப்படுகிறது

மழைசேகரிக்கும் முறைகள்

2 முக்கியமான முறைகளில் மழை நீரை சேமிக்கலாம்

  1. நிலத்தின் மேல் வழிந்தோடும் நீரை எதிர்காலப் பயன்பாட்டிற்காக சேமித்தல்
  2. நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துதல்

வழிந்தோடும் மழைநீரை சேமித்தல் என்பது பராம்பரிய முறையாகும். நிலத்தடித் தொட்டிகள், குட்டைகள், தடுப்பணைகள் போன்றவை இதில் அடங்கும் நிலத்தடிநீர் மட்டத்தை உயிர்த்துதல் என்பது புதிய முறையாகும் அவையாவன

குழிகள் : தாழ்வான பகுதிகளில் 1-2 மீட்டர் அளவு அகலம் 3 மீ ஆழமுள்ள புதிய குழிகளை சிறு கற்கள் கொண்டு சுற்றியும் அடியில்  மணல் நிரப்பியும் அமைக்க வேண்டும்.

அகழிகள்

நீர் உட்செல்லும் போது, மிகக் குறைவான ஆழத்தில் அகிழிகள் அமைக்கப்படுகின்றன. இந்த அகிழிகள் நீரின் அளவை 0.5  பொறுத்து 1 மீ.அகலம், 1.5 மீ ஆழம், 10-20 மீ நீளம் என்ற அளவில் அமைக்கப்படுகின்றன. இதுவும் சுற்றியும் இல் கொண்டு, அடியில் மணல் நிரப்பி அமைக்கப்படுகிறது.

கிணறுகள் : முன்பே இருக்கின்ற கிணறுகளை இதற்குப் பயன்படுத்தலாம். கிணற்றில் நீரை விடுவதற்கு முன் வடிகட்டியின் மூலம் செலுத்தி பிறகு விடவேண்டும்.

கைப்பம்புகள் : முன்பே இருக்கின்ற கைப்பம்புகளை நிலத்தடி நீரை அதிகப்படுத்துவதற்கு பயன்படுத்தலாம். கைபம்பிற்க நீரை விடுவதற்கு முன், நீரை வடிகட்டும் ஊடகம் வழியாக செலுத்தி, பின் கைப்பம்பில் விட வேண்டும்.

 
Fodder Cholam