Agriculture
நீர்த்தேக்க மேலாண்மை

நீர்பிடிப்பு பகுதி மேம்பாட்டு திட்டம்

நீர் தேக்க மேலாண்மைத் திட்டங்கள்:

தமிழ்நாடு நீர்தேக்க மேலாண்மை துறை (தாவ்தேவா) (TAWDEVA)

நீர் தேக்க மேலாண்மைத் திட்டம்

நீர் தேக்க மேலாண்மைத் திட்டம்:

முன்னுரை:

நீர்த்தேக்கம் என்பது நிலத்தில் வடியக் கூடிய நீரை பொதுவான ஒரு இடத்தில் தேக்கி வைத்து நீரை அவ்வப்போது வெளியேற்றும் ஓர் புவிநீர் அமைப்பாகும். நிலத்தின் நீர் மற்றும் தழை வளங்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் திட்டமாக உள்ளது. 1999 – 2000 புள்ளியியல் விவரப்படி, 141.23மி. ஹெக் அளவு மொத்த விளைச்சல் பகுதியில் 84.58 ஹெக் அளவு நிலம் மானாவாரி நிலமாக உள்ளது. நீர்த்தேக்க மேம்பாடு என்பது வேளாண் உற்பத்தியை மானாவாரி, மற்றும் பகுதி மானாவாரி உள்ள நிலங்களிலும் உற்பத்தியை அதிகப்படுத்தும் நோக்கமாகும். நம் நாட்டில் 85மீ ஹெக் அளவு மானாவாரி நிலங்களாக உள்ளன. பசுமைப்புரட்சி வந்த பின் இந்த நிலைமை சற்று மாறியது. நீர் வள மேலாண்மையால் மண் மற்றும் தழை வளர்ப்பு மேலாண்மையை மேம்படுத்துகிறது. நீர்த்தேக்க மேலாண்மை வேளாண் உற்பத்தியை அதிகப்படுத்த உதவும் நிலைகளை மேம்படுத்தவும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் உதவுகிறது.

திட்டத்தின முக்கிய நோக்கங்கள்:

  • இயற்கை வளங்களை பயன்படுத்தி கடுமையான வறட்சியை போக்குதல்
  • நீர்வடிப்பகுதிகளில் வாழும் ஏழை மக்களுக்கு மனித வேலை நாட்களை உருவாக்கி அவர்களின் வருவாயை மேம்படுத்துதல்
  • நில மற்றும் நீர் சம்பந்தப்பட்ட இயற்கை சம நிலையை அடைய செய்வதன் மூலம் விவசாய உற்பத்தியை பெருக்குதல் போன்றவையாகும்.

சுற்றுப்புறச் சூழல் மற்றும் காடுகுள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய தரிசுநில மேம்பாட்டு துறையில் நீர்த்தேக்க மேம்பாடு மேலாண்மை செய்யப்படுகிறது. தற்போது இது ஊரக மேம்பாட்டுத்துறை மற்றும் நில வளத்துறைக்கு கீழ் மாற்றப்பட்டுள்ளது. காடுகள் இல்லாத பகுதிகளில் உள்ள தரிசு நிலங்களின் மேம்பாடு, நில சேதாரமடைவதை கண்காணிக்கவும் தரிசு நிலத்தை நிலைப்பாடக பயன்படுத்தவும், அங்கக உயிர்ப் பொருளை அதிகப்படுத்தவும், எரிபொருள் மரம், தீவனத் தேவைகளையும் சுற்றுப்புற சூழலை நல்ல நிலைமையில் வைத்துக் கொள்ளுவதுமே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும். எனவே நீர்த்தேக்க மேம்பாடு என்பது அந்தப் பகுதியில் உள்ள பலத்தரப்பட்ட செயல்களை ஒருங்கிணைப்பதே ஆகும். தற்பொழுது, ஊரக மேம்பாட்டுத்துறை மற்றும் நில வள ஆதாரத்துறை டி.பி.ஏ.பி, டி.டி.பி மற்றும் ஒருங்கிணைந்த தரிசுநிலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இயங்கும் நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டத்திற்கு நிதி உதவி செய்கிறது. இந்த திட்டம் மானாவாரி மற்றும் வறட்சி நிலவும் பகுதிகளில் முக்கியமாக எஸ்.சி / எஸ்.டி மக்கள் தொகை நிறைந்த இடங்களிலும், தரிசு நிலம் அதிகமாக உள்ள இடங்களிலும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டத்தில் ஆறு முக்கிய திட்டங்கள் உள்ளன.

  • மானாவாரி பகுதிகளுக்கான தேசிய நீர்த்தேக்க மேம்பாட்டு திட்டம்
  • இடமாற்றச் சாகுபடி பகுதிகளில் நீர்த்தேக்க மேம்பாடு
  • வறட்சி நில மேம்பாட்டுத்திட்டம் (டி.பி.ஏ.பி)
  • வறட்சி மேம்பாட்டுத்திட்டம் (டி.டி.பி)
  • ஒருங்கிணைந்த தரிசுநில மேம்பாட்டுத்திட்டம் (டபிள்யூ.டி.பி)
  • வேலை வாய்ப்பு உறுதித்திட்டம் (இ.ஏ.எஸ்)

இந்த 6 திட்டங்களும் நீர்த்தேக்க திட்டத்தின் கீழ் வருகிறது. 70 சதவீத நிதி உதவியும் இந்த திட்டம் தருகிறது. பலதரப்பட்ட நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம், 30 மி.ஹெக் நிலம் 9343 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. 10வது ஐந்தாண்டுத்தினட போது 11.4 மி.ஹெக் நிலத்தை, 7440 கோடி நிதி உதவியுடன் மேம்படுத்த திட்டதிடப்பட்டது. அதுமட்டுமல்லாமல் 1.24 மி.ஹெக் நிலப்பகுதி, 1872 கோடி நிதி உதவியுடன் மற்றத் துறைகளின் உதவியுடன் இடபங்கும் திட்டங்களின் மூலம், தரிசு நில திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும்.

நீர்வடிப்பகுதி

பெய்கின்ற மழைநீரானது ஒரு வடிகாலில் வந்து சேரும் பொழுது, அந்த வடிகாலுக்கு எங்கிருந்தெல்லாம் தண்ணீர் வருகின்றதோ அந்தப்பகுதியையே நீர்வடிப்பகுதி எனலாம். இந்த நீர் வடிப்பகுதிகள் அதன் பரப்பளவை வைத்து பெரிய நீர் வடிப்பகுதி, நடுத்தர நீர் வடிப்பகுதி மற்றும் சிறிய நீர் வடிப்பகுதி என வகைப்படுத்தப்படுகிறது.

நீர் வடிப்பகுதி தேர்வுக்காரணிகள்

  • தேர்வு செய்யப்படும் நீர் வடிப்பகுதிகளில் குடி தண்ணீர் பற்றாக்குறை இருத்தல் வேண்டும்
  • அதிகமான தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள் வாழும் பகுதி இருக்க வேண்டும்
  • புறம்போக்கு மற்றும் திசு நிலங்கள் நிறைந்தாக இருக்கவேண்டும்
  • அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச வேலையாட்கூலியை விட இப்பகுதியில் கூலி குறைவாக இருக்க வேண்டும்
  • ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட பகுதியை ஒட்டிய பகுதியாக இருக்க வேண்டும்
  • ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு பணிகள் மேற்கொண்ட பகுதியாக இருக்கக்கூடாது
  • ஒன்றுக்கு மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய நீர்வடிப்பகுதியாக இருந்தாலும் தேர்வு செய்யலாம்

நிர்வாக அமைப்பு

இத்திட்டம் மாவட்ட அளவில, ஊரக வளர்ச்சி முகமையில் மாவட்ட நிர் வடிப்பகுதி மேம்பாட்டுக் குழுத் தலைவராகிய மாவட்ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்பின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையும் திட்ட செயல் முகமையான அரசுத் துறைகளும் இணைந்து மக்களின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நீர் வடிப்பகுதிகளில் நீர்பிடிப்புச் சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நீர் வடிப்பகுதியிலுள்ள ஊராட்சித்தலைவர் மற்றும் உறுப்பிபனர்களைக் கொண்டு இச்சங்கம் அமைக்கப்ட்டு அரசு விதிமுறைகளின்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சங்கமே இத்திட்டத்தின் முக்கிய அங்கமாகும். அனைத்து திட்டப்பணிகளும் இச்சங்கத்தின் அறிவுரைப்படி செயல்படுத்தப்படவேண்டும்.

நீர் வடிப்பகுதி சங்கம்

ஒருகிராமத்தில் உள்ள நீர் வடிப்பகுதிக்கு அந்த கிராம நிர்வாக சபை அல்லது ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய குழுவே நீர் வடிப்பகுதி சங்கம் என அழைக்கப்படும். ஒரு கிராம எல்லைக்கு மேற்பட்ட பகுதிகளில் நீர் வடிப்பகுதி அமைந்தால் அந்த நீர் வடிப்பகுதியினால் பயன்பெறும் பகுதியிலுள்ள சமுதாய மக்களின் உறுப்பினர்களையும் உள்ளடக்கி நீர் வடிப்பகுதி சங்கம் அமைக்கப்படவேண்டும். இந்த சங்கம் அரசின் வரையறுக்கப்பட்ட சங்க விதிகளின்படி முறையாக பதிவு செய்யப்படவேண்டும். இந்த நீர் வடிப்குதி சங்கம் ஆண்டிற்கு இருமுறையாவது கூட்டப்பட்டு நீர் வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்டங்களை விவாதித்து அவற்றின் செயல்பாடுகளை முறைப்படுத்தி கண்காணித்து திட்டச் செயலவுகளை அங்கீகரித்து சுய உதவிக்குழு மற்றும் பயனாளிகள் குழுவை அமைத்து சங்க உறுப்பினர்கள் மற்றும் குழுக்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளை களைந்து திட்ட செயலாக்கத்திற்கும் சங்கத்தின் நிதி வளர்ச்சிக்கும் தக்க ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இச்சங்கம் உதவ வேண்டும். செயல் முறைகளில் தவறு நேராமல் கவனித்துக் கொள்ளவும் தவறு நேரிட்டால் தக்க ஒழுங்குமுறை நடவடிக்கைகள் எடுப்பதற்கும் இச்சங்கம் முதன்மையாக செயல்பட வேண்டும். நீர் வடிப்பகுதி சங்கத் தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் நீர் வடிப்பகுதி குழுவின் தலைவராகவும் செயல்படலாம். நீர் வடிப்பகுதி செயலரே இவருக்கும் உதவி செய்ய வேண்டும்.

நீர் வடிப்பகுதி குழு

நீர்வடிப்பகுதி சங்கத் தலைவரே இக்ககுழுவின் தலைவராகச் செயல்படுவார். நீர்வடிப்பகுதி குழுவில் 10-12 உறுப்பினர்களை நீர் வடிப்பகுதி சங்கம் நியமிக்கலாம். சுய உதவிக்குழுவின் தலைவர்கள் உறுப்பினர்கள், பயனாளிகள் குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் என்ற நீர் வடிப்பகுதி குழுவில் இடம் பெறலாம். இக்குழு நீர் வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் தினசரி அலுவல்களையும் செயல்படுத்த வேண்டும். இக்குழுவில் மூன்றில் ஒரு பங்கு மகளிர் உறுப்பினர்கள் இருக்குமாறு நியமிப்பது அவசியம், தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கும் இக்குழுவில் போதிய வாய்ப்பு அளிக்கப்பட்ட வேண்டும். நீர்வடிப்பகுதி குழுவே நீர்வடிப்பகுதி சங்கம், ஊராட்சி மன்றம், நீர்வடிப்பகுதி மேம்பாட்டுக்குழு மற்றும் அரசுத் துறைகளுடன் சுமுக உறவை வளர்த்து திட்டப்பணிகள் செவ்வனே நடைபெற முழு ஒத்துழைப்பையும் தர வேண்டும்.

நீர் வடிப்பகுதிகளில் நீர் பிடிப்புக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும். இதில் ஊராட்சித் தலைவர் அல்லது வேறு உறுப்பினர் தலைவராக நியமிக்கப்படுவார்கள், சுய உதவிக்குழு மற்றும் பயனாளிகள் குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி உறுப்பினர் என மூன்று பேர் நீர் வடிப்பகுதி மேம்பாட்டுக் குழுவில் இடம் பெறுவர். இக்குழுவே அனைத்து திட்டப்பணிகளையும் நீர் வடிப்பகுதி சங்கத்தின் கீழ் செயல்படுத்த வேண்டும். நீர்வடிப்பகுதி செயலர் ஒருவர் முழுநேர ஊழியராக தேர்வு செய்யப்பட்டு நீர் வடிப்பகுதியின் அனைத்து ஆவணங்களையும் நீர் வடிப்பகுதி சங்கத்தின் கண்காணிப்பில் பராமரிக்க வேண்டும். இவர் திட்டப் பணிகளின் முழு விபரங்கள், பணிகளின் நிலை, செலவு உட்பட அனைத்து தகவல்களையும் சேகரித்து கணக்கில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் நீர் வடிப்பகுதி சங்கத்தின் பரிந்துரைகள் கூட்ட நடவடிக்ககைள், பயனாளிகள் குழு கூட்டங்கள் சுய வேலைககுழு கூட்டங்கள் பற்றிய விவரங்களும் தனித்தனி பதிவேடுகளில் பதிவு செய்யப்பட வேண்டும். நீர்வடிப்பகுதி தன்னார்வலர் ஒருவர் அவருக்கு உதவியாக முழுநேர ஊழியராகத் தேர்வு செய்யப்படுவார். இவர்கள் இணைந்து நீர்வடிப்பகுதியில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டப்பணிகளையும் கண்காணிக்க வேண்டும். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் இத்திட்டமானது நீர் வடிப்பகுதி மேம்பாட்டுக்குழு (தொழில் நுட்ப வல்லுனர்கள்) ஒத்துழைப்புடன் அந்தந்த கிராம நீர் வடிப்பகுதி சங்கங்களை கலந்தாலோசித்து நீர்வடிப்பகுதி குழு மூலம் சுயவேலைக்குழு மற்றும் பயனாளிகள் குழுக்களை அழைத்து செயல்பட்டு திட்டப்பணிகளை மேற்கொள்கிறது.

சுயஉதவிக்குழுக்கள்:

திட்ட செயல் முகமையாக செயல்படும் துறையினர் நீர்வடிப்பகுதியில் சுய உதவிக் குழுக்களை அமைக்க  வேண்டும். நேர் முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ நீர் வடிப்பகுதியைச் சார்ந்துள்ள மக்களில் 50 சதவிகிதம் பேர்குறைந்த பட்சம் ஒரு சுய உதவிக்குழுவிலாவது உறுப்பினர்களாக்கப்பட வேண்டும். பெண்கள், தாழ்த்தப்பட்ட பழங்குடியினர், விவசாயக் கூலிகள், ஆடுமாடு மேய்ப்போர் இவர்களுக்கென தனித்தனியாக சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். சுய உதவிக்குழுக்கள் கீழ்கண்ட பணிகளை செய்யும் வகையில் இருக்க வேண்டும்.

  • மாதம் ஒருமுறை சந்தித்து உறுப்பினர்களின ஆலோசனைகளை கலந்து பேசி முடிவு செய்தல்
  • 50 சதவிகித மூலப்பொருட்களை உறுப்பினர்களிடமிருந்தே பெற்று பணிகளை செய்தல்
  • 80 சதவிகித வரவேண்டிய பாக்கிகளைச் சரியான நேரத்தில் வசூலித்தல்
  • கணக்கு வழக்குகளை முறையாக பராமரித்தல்

இக்குழுமக்கள் தங்களுக்கென தனிவங்கிக் கணக்கும் தனி முதலீடும் முதலில் அமைக்க வேண்டும்

பயனாளிகள் குழு :

நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ்பயன்பெறும் நிலமுள்ள விவசாயிகள் நிலமற்ற விவசாயக் கூலிகள் மற்றும் அனைத்து பயனாளிகளும் பயனாளிகள் குழுவில் உறுப்பினராக சேர்க்கப்படவேண்டும். நீர் வடிப்பகுதியிலுள்ள குடும்பத்தினரில் 50 சதவிகித குடும்பங்களின் உறுப்பினர்களாவது பயனாளிகள் குழுவில் இடம்பெறும் வகையில் இக்குழு அமைக்கப்பட வேண்டும். நீர் வடிப்பகுதியின் திட்ட வேலைகள் பயனாளிகள் குழுவினரால்  செய்யப்பட வேண்டும். குறைந்த பட்சம் 80 சதவிகித மேம்பாட்டு வேலைகள் இக்குழுவினரின் செயல்பாட்டில் முடிக்கப்பட வேண்டும்.

இக்குழு மாதம் ஒரு முறை கூடி முடிவுகளை உறுப்பினர்களிடையே கலந்தாலோசித்து முடிவு செய்ய வேண்டும். நீர்வடிப்பகுதி கட்டுமானப் பணிகள் மற்றும் திட்டங்களுக்கு பயனாளிகள் குழு பணமாகவோ அல்லது பொருளாகவோ அல்லது வேலையாகவோ உதவி செய்தல் வேண்டும் தங்கள் கணக்கு வழக்குகளை நீர் வடிப்பகுதி மேம்பாட்டுக் குழு உறுப்பினர்களிடமோ அல்லது திட்டமேம்பாட்டுக் குழுவிடமோ சமர்பிக்க வேண்டும். திட்டத்தில் உருவாக்கப்பட்ட நீர்வடிப்பகுதியின் பொதுச் சொத்து மூலப்பொருட்கள் மீதான அல்லது முடிக்கப்பட்ட சமுதாயப் பணிகளின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு பணிகளை பயனாளிகள் குழுவே கவனித்து வரவேண்டும். பயனாளிகள் குழுவிற்கு இதற்கென தொழில் நுட்ப பயிற்சிகளும் திட்ட செயல்பாடுகள் குறித்த பயிற்சியும் நீர் வடிப்பகுதி திட்ட முகமை நடக்கிறது. சுய உதவிக்குழுக்களுக்கும் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.

திட்டப் பணிகள் செயல்படுத்தும் முறை:

திட்டப்பணிகள் உள்ளூர் மக்களால் மட்டுமே நிறைவேற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தக்காரர்களுக்கு அனுமதியில்லை. தேவையான தொழில்நுட்ப உதவிகள், அரசுத்துறை மூலமாகவும் மேம்பாட்டுக் குழுவினராலும் வழங்கப்படுகிறது. பணிகள் சம்மபந்தப்பட்ட செலவினங்கள் நீர்வடிப்பகுதி குழுவினரின் உதவுியுடன் பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இதற்கென ஒவ்வொரு நீர்வடிப்பகுதியில் உள்ள செயலரும் தன்னார்வாலர் ஒருவரும் நியமிக்கப்படுவர். திட்டப்பணிகளுக்கான நிதியை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை நேரடியாக நீர்பிடிப்புச் சங்கங்களுக்கு அளிக்கும். இந்த நிதியிலிருந்து சமுதாய அமைப்புச் செலவுகள், நிர்வாகம், பயிற்சி முதலியவற்றிற்கு ஊரக வளர்ச்சி முகமையே செலவு செய்கின்றது. திட்டப்பணிகளுக்கான செலவினை அந்நத்நத நீர் வடிப்பகுதி குழுத்தலைவரும் ஒரு மேம்பாட்டுக்குழு உறுப்பிணரும் இணைந்து கையொப்பபமிட்டு வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. எல்லா செலவினங்களுக்கும் நீர் வடிப்பகுதி குழுத் தலைவர் மற்றும் மேம்பாட்டுக் குழுவினரும் இணைந்து செயல்பட வேண்டும்.

இத்திட்டம், மக்களின் முழு பங்கேற்புடன், திட்டத்தின பல்வேறு காலகட்டங்களிலும் (திட்டமிடுதல், செயல்படுதல், ஆய்வு செய்தல் மற்றும் சொத்துக்களை பராமரித்தல்) மக்களை கலந்தமாலோசித்து செயல்படுத்தப்பட வெண்டும். இத்திட்டத்திற்கு தேவையான பணிகளை வழிகாட்டி நெறிமுறைகளின்படி மக்களே தேர்வு செய்வர், இவ்வாறு தேர்ந்தெடுக்கப்ட்ட திட்ட பணிகள் நீர்வடிப்பகுதி சங்கத்தால் பரிந்துரைக்கப்படுகிறது. மாவட்ட வளர்ச்சி முகமையால் அங்கீகரிக்கப்பட்ட மக்களே திட்டப்பணிகளை செய்து கொள்வர். அவர்களுக்குத் தேவையான தொழில் நுட்ப ஆலோசனைகளை நீர்வடிப்பகுதி மேம்பாட்டுக் குழுவினரும் அரசுத்துறை அலுவலரும் அளிப்பர். திட்ட காலம் முடிந்தபின் நீர்வடிப்பகுதி வளர்ச்சி நிதியிலிருந்து செயலவு செய்து மக்களே பராமரிப்பர். மேறகண்ட அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கண்காணிப்பில் ஒருங்கிணைக்கபட்டு செயல்படுத்தப்படுகிறது.

நீர்ப்பிடிப்புப் பகுதி மேம்பாட்டுத்திட்டத்தில் மழைநீர் சேகரிப்பின் நன்மைகள்

யோமுத்தூர் மாவட்டத்தில் நீர்பிடிப்புப்பகுதி மேம்பாட்டுத்த திட்டத்தின் கீழ் அன்னூர், அவினாசி, சூலூர், பல்லடம் மற்றும் திருப்பூர் ஆகிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெரிய மற்றும் சிறிய தடுப்பணைகள், கசிவுநீர்க் குட்டைகள் ஆகியன அமைக்கப்பட்டு மழைநீர் சேமிக்கப்படுகிறது. இவ்வமைப்புகளின் மூலம் ஒவ்வொரு நீர்பிடிப்புப் பகுதிகளிலும் சராசரியாக 92 எக்டர் செ.மீ அளவிற்கு கூடுதல் மழைநீர் சேமிக்கப்படுகிறது. இவ்வாறு சேமிக்கப்படும் மழைநீர் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும். கால்நடைகள் மற்றும் இதர நீர்தேவைகளைப் பூர்த்தி செய்யவும் பயன்படுகின்றது.

 
Fodder Cholam