Agriculture
தாவர ஊட்டச்சத்து :: முக்கிய தனிமங்கள்

முக்கிய தனிமங்கள்/முக்கியமான தாவர ஊட்டச்சத்துக்கள்

தாவரங்களின் வளர்ச்சிக்கு 16 தனிமங்கள் மிக முக்கியமாகக் கருதப்படுகின்றன. அவையாவன

1.கார்பன்
2.ஹைட்ரஜன்
3.ஆக்ஸிஜன்
4.நைட்ரஜன் (தழைச்சத்து)
5.பாஸ்பரஸ்(மணிச்சத்து)
6.பொட்டாசியம்(சாம்பல்சத்து)
7.கால்சியம்(சுண்ணாம்புச்சத்து)
8.மக்னீசியம்
9.சல்பர்(கந்தகச்சத்து)
10.இரும்பு
11.மாங்கனீசு
12.போரான்
13.துத்தநாகம்
14.தாமிரம்
15.மாலிப்டினம்
16.குளோரின்

மேற்கண்ட 16 தனிமங்களும் தாவரங்களின் முழுமையான வாழ்க்கைச் சுழற்சிக்கு இன்றியமையாததாகும். இது தவிர சோடியம், கோபால்ட், நிக்கல், சிலிக்கன் மற்றும் வளேடியம் போன்றவைகளும் முக்கியப்பங்கு வகுக்கின்றன.

அட்டவணை1: பயிர்களுக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள்

அட்டவணை2: பயிரின் சராசரி சத்துக்களின் நிலவரம்

ஊட்டச்சத்துக்களின் பண்புகள்/ வாழ்வில் விளைவுகள்

பயிர்களில் ஊட்டச்சத்துக்குறைபாடுகளுக்குக் காரணமான மண்ணியல் காரணிகள்

நைட்ரஜன்: கனமான மழை; குறைவான அங்ககப்பொருள்கள், தாவரக்கழிவுகளை எரித்தல்
பாஸ்பரஸ்: மண்ணின் அமிலத்தன்மை;  சுண்ணாம்பு நிறைந்த மண்
பொட்டாசியம்: மணற்பாங்கான நிலம் ; மண் அரிப்பு;  தீவிரபயிர்ச்சாகுடி செய்யப்பட்ட நிலம்
கால்சியம்: அமிலம் மற்றும் காரத்தன்மை வாய்ந்த மண்
மக்னீசியம்: அமிலம் மற்றும் காரத்தன்மை வாய்ந்த மண்
கந்தகம்: குறைவான அங்ககப்பொருட்கள்;  கந்தகச்சத்து உள்ள உரத்தை பயன்படுத்தாமை
இரும்பு: களிமண் மற்றும் சுண்ணாம்பு நிறைந்த மண்;  அதிகமான அளவு அங்ககப்பொருட்கள் உள்ள மண்
துத்தநாகம்: அமிலத்தன்மை;  சுண்ணாம்பு நிறைந்த மண்;  அதிகப்படியான அளவு கால்சியம் மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்த மண்
மாங்கனீசு: களிமண் சுண்ணாம்பு கலந்த மணல் வகை;  அதிகப்படியான சுண்ணாம்பு மற்றும் அங்ககப்பொருட்கள்
போரான்: மணற்பாங்கான நிலம்;  அமிலம் மற்றும் காரத்தன்மை மண்வகை
மாலிப்டினம்: நன்கு வடிந்த சுண்ணாம்பு நிறைந்த மண்வகை
ஆதாரம்

ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டினை கண்டறிதல்

பற்றாக்குறை அறிகுறிகள்

வளர்ச்சியடைந்த இலைகள்                            இளம் இலைகள்

ஊட்டச்சத்து பற்றாக்குறையின் அறிகுறியை அறிய உதவும் தாவரங்கள்

குறைபாடு தாவரங்கள் பயிர்கள்
நைட்ரஜன் சோளம், மக்காச்சோளம், பயறுவகைப்பயிர்கள்
பாஸ்பரஸ் தக்காளி, மக்காச்சோளம், தானியவகைகள்
பொட்டாசியம் மக்காச்சோளம், பருத்தில, உருளைக்கிழங்கு  வாழை, குதிரைமசால்
கந்தகம் தானியவகைகள், டீ, குதிரைமசால்
தாமிரம் எலுமிச்சை ஆரஞ்சு வகைகள்
துத்தநாகம் மக்காச்சோளம், தக்காளி, உருளைக்கிழங்கு பீன்ஸ், எலுமிச்சை ஆரஞ்சு வகை
இரும்பு அலங்காரத் தாவரங்கள், தைலமரம், நெல்லிக்காய், கரும்பு, கருவேல்
போரான் குதிரைமசால், தென்னை, கொய்யா
மாங்கனீசு எலுமிச்சை, ஆரஞ்சு வகை
மாலிப்டினம் காளிப்ளவர், முட்டைகோஸ்
 
 
Fodder Cholam