மண் வளத்தில் அங்ககப் பொருளின் பங்கு
அங்ககப் பொருள் மிகக் குறைவாக இருந்தாலும், முக்கியமான பங்கு வகிக்கிறது. இறந்த பயிரின் வேர்கள், பயிர் குப்பைகள், பல்வேறுபட்ட அங்கக உரங்களான பண்ணை எரு, மட்கு எரு, பசுந்தாள் உரம், பூஞ்சான், பாக்டீரியா, புழுக்கள் மற்றும் பூச்சிகளிலிருந்து இது பெறப்படுகிறது.
அங்ககப் பொருளின் செயல்கள்:
- அங்ககப் பொருள் மண்ணின் இயல்புத் தன்மை, முக்கியமாக மண் அமைப்பை மேம்படுத்துகிறது.
- பாக்டீரியா, பூஞ்சான் மற்றும் இதர உயிரிகளுக்கான உணவுப் பொருளில் அங்ககப் பொருள் செயல் படுகிறது.
- அங்ககப் பொருள் இருப்பதால், கரையாத மண் ஊட்டங்களை கரைய வைத்து பயிர்களுக்கு கிடைக்கும் வகையில் செய்கின்றன.
- மண்ணின் ஊட்டச்சத்து வழங்கும் திறனில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனென்றால், அதில் அதிக அளவு நேர் அளனி பரிமாற்றம் இருக்கின்றது.
- மண்ணின் நீர் கொள்ளும் திறனை முக்கியமாக மணல் கலந்த மண்ணில் அதிகப்படுத்துகிறது.
- கடின மண்களில் காற்றோட்டம் மற்றும் நீர் ஊடுருவும் திறனை மேம்படுத்துகிறது.
- நீர் மற்றும் காற்று அரிப்பினால் ஏற்படும் மண் இழப்பைக் குறைக்கிறது.
- சில பயிர்களின் உணவுப் பொருளின் (தழை, மணி, சாம்பல், முதலியன) முக்கிய ஆதாரமாக செயல்படுகிறது.
- அங்ககப் பொருளின் இருப்பால் பூச்சிக் கொல்லிகளைக் கொல்லி மற்றும் இதர கடின உலோகங்களின் கழிவுக் குப்பை மேலாண்மையில் நன்மைத் தரக் கூடியதாக கருதப்படுகிறது.
|