Agriculture
உர நிர்வாகம்

உரப்பயன்பாட்டுத் திறனை அதிகரிக்க உத்திகள்

  1. மண் ஆய்வைப் பொறுத்து உரமிடுதலுக்கான கால அட்டவணை இருக்க வேண்டும்
  2. கார மண்ணுக்கு அமில உரங்களும், அமில மண்ணுக்கு கார உரங்களை அளிப்பது போன்ற மண் எதிர் விளைவைப் பொறுத்து உரங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்
  3. மேலோட்டமாக உரங்களை தெளிக்கக்கூடாது. ஆனால் உரங்களை 3 – 4 செ.மீ அளவுக்கு விதையின் அருகிலோ அல்லது அடியிலோ இட வேண்டும். இதனால் களை வளர்ச்சியைத் தடுக்கலாம்
  4. மணி மற்றும் சாம்பல் சத்து உரங்களை அடி உரமாக இட வேண்டும். ஏனென்றால் இதனுடைய கரைதல் தன்மை குறைவாக இருப்பதில் அடி உரமிடுதல் வேண்டும். ஆகவே இதை வேர் பகுதியில் இட வேண்டும்.
  5. உரக்கலவை அட்டவணைப்படி உரங்களைக் கலக்கி முடிந்த அளவு அதே உரக்கலவையை இட வேண்டும்
  6. கடின மண் வகையில், தழைச் சத்து உரத்தில் பாதி அளவு அடி உரமாக இட வேண்டும் மற்றும் மீதி உள்ள உரத்தை மேல் உரமாக ஒரு பிரிவில் இட வேண்டும்
  7. இலேசான மண் வகையில் தழைச்சத்தை 3 சமபிரிவுகளாக அதாவது 1/3 அளவு அடியுரமாக, 1/3 அளவு விதைப்பிற்கு பின் மற்றும் மீதி 1/3  அளவை 50 – 60 வது நாள் விதைத்த பின் இட வேண்டும்
  8. உரம் இட்ட ஒரு வாரத்திற்குள் அதிகமாக நீர் பாய்ச்சுவதோ அல்லது நீர் தேங்கி இருப்பதோ இருக்கக்கூடாது
  9. நீரை வடித்தப் பிறகு மற்றும் கிளை எடுத்த பின் மேல் உரமிட வேண்டும் இதனால் ஊட்டச்சத்து இழப்பு குறைவாக இருக்கும். நெல் வயல்களில் நடவு செய்வதற்காக சேறு கலக்க வேண்டும். அந்த சமயத்தில் இட்டு கலக்க வேண்டும். இதனால் உரங்கள் ஆழமாக மண்ணில் சென்று சேர முடிகிறது
  10. அமில மண்களை சுண்ணாம்பு பொருள்களுடன் தேவைக்கேற்ப நேர்த்தி செய்ய வேண்டும்
  11. வறண்ட நிலங்களில் தழைச்சத்தை இலை வழியாக தெளிப்பதோ அல்லது ஆழமாக இடும்போதோ மேல் உரமாக இட வேண்டும்
  12. அங்கக உரங்கள் அல்லது பசுந்தாள் உரங்களை இடும் போது 3 – 5 வருடங்களுக்கு ஒரு முறை இட வேண்டும்
  13. நீர் தேங்கியுள்ள மண்கள் அல்லது கால்சியம் அதிகமுள்ள மண்களில் மெதுவாக மணிச் சத்தை வெளியிடும் உரங்களான கந்தக முலாமிட்ட யூரியா, யூரியா B குருணைகள், வேம்பு பூசப்பட்ட அல்லது வேம்பு கலந்த யூரியா இட வேண்டும். இதனால் தழைச்சத்து இழப்பைக் குறைக்கலாம்
  14. மண் உருண்டைகளில் யூரியா உள்ள உரங்களை ஆழ் தண்ணீர் பயிர்களுக்கு இட வேண்டும்
  15. தகுந்த பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் முறையான பண்படுத்தல் முறைகளை செயல்படுத்த வேண்டும். இதனால் பயிர்கள் ஆரோக்கியமாக இருக்கும் மற்றும் நிலத்திலிருந்து ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ள முடியும்

தகவல்: http://www.tarntatt.com/fertilizers.aspx

 
 
Fodder Cholam