|   | |||||||||||||||||
| உர நிர்வாகம்  | |||||||||||||||||
| கொண்டைக்கடலை  விதை  நேர்த்தி  விதைகளிலிருந்து  பரவும் நோய்களான வேர் அழுகல் நோய்,  வாடல் நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் ஒரு கிலோ விதையுடன் கார்பெண்டாசிம் 2 கிராம் அல்லது திரம் 4 கிராம் அல்லது 4 கிராம் ட்ரைகோடர்மா விரிடி அல்லது 10 கிராம்  சூடோமோனஸ் புளுரோசன்ஸ் கலந்து 24 மணி நேரம் கழித்து  விதையுடன் 3 பொட்டலாம் ரைசோபியம் நுண்ணுயிர் கலக்க வேண்டும்.  விதைப்பு விதைகளை ஒரு சதவீத பொட்டாசியம் டைஙைட்ரஜன் பாஸ்பேட் கரைசலில் 4 மணி நேரம் ஊறவைத்து நிழலில் உலர்த்தி பின் விதைக்க வேண்டும் நுண்ணுயிர்  கலத்தல்  விதைகளை  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயாரிக்கப்பட்ட ரைசோபியல் பயிர் வளர்ப்பு  ஒரு பாக்கெட் (200 கிராம்/எக்டர்) அல்லது  பாஸ்போ பாக்டீரியாவை (200 கிராம்/எக்டர்) கொண்டு அரிசி  கஞ்சியுடன் சேர்த்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதை நேர்த்தி செய்யவில்லை  என்றால், 10 பாக்கெட் ரைசோபியம்   (2 கிலோ / எக்டர்) மற்றும் 10 கிலோ பாஸ்போ பாக்டீரியாவை  (2 கிலோ / எக்டர்) 25 கிலோ தொழுவுரம்  மற்றும் 25 கிலோ மண்ணுடன் கலந்து விதைப்பிற்குமுன் வயலில் இட  வேண்டும். ஒருங்கிணைந்த  ஊட்டச்சத்து இடவேண்டும்  உரஅளவு அடியுரமாக ஒரு எக்டருக்கு மானாவாரிப் பயிராக இருந்தால் 12.5 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து, மற்றும் 12.5 கிலோ சாம்பல் சத்து, இறவைப்பயிராக இருந்தால் 25 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து மற்றும் 25 கிலோ சாம்பல் சத்து தரக்கூடிய இரசாயன உரங்களை இடவேண்டும். 
 குறிப்பு: மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட் உரம் மூலம் இடவில்லை எனில் ஜிப்சம் மூலமாக கந்தகத்தை இடவும் Updated on : December 2013 | |||||||||||||||||
| முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2013 | |||||||||||||||||