Agriculture
உர நிர்வாகம்

ஆமணக்கு

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

உரமிடுதல்

உழவு செய்யப்படாத நிலத்தில் 12.5 டன்/எக்டர் அல்லது மக்கிய தென்னை நார்க்கழிவு பரப்பி உழவேண்டும். மண் பரிசோதனைப் படி உரங்கள் இடவேண்டும். மண்பரிசோதனை செய்யாவிட்டால் கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றவேண்டும்.
கடைசி உழவின் போது எக்டருக்கு 30 கிலோ கந்தகத்தை ஜிப்சம் மூலம் இடுவதால் அதிக மகசூல் பெறலாம். மண் பரிசோதனை படி பரிந்துரைக்கப்பட்ட உரங்களை இட வேண்டும். இல்லையெனில் பொதுவான பரிந்துரையின்படி உரங்கள் அளிக்க வேண்டும்.

பரிந்துரைக்கப்பட்ட NPK கிலோ/ எக்டர்
மானாவாரி
இரகங்கள் 45 : 15 : 15 NPK கிலோ / எக்டர்
கலப்பினங்கள் 60 : 30 : 30 NPK கிலோ / எக்டர்
இறவை
இரகங்கள் 60 : 30 : 30 NPK கிலோ / எக்டர்
கலப்பினங்கள் 90 : 45 : 45 NPK கிலோ / எக்டர்
  • மானாவாரி பகுதிகளில் 100% மணிச்சத்து மற்றும் 50% தழை மற்றும் சாம்பல் சத்தினை அடியுரமாக இட வேண்டும். மீதம் உள்ள அளவுகளை ஒன்று (அ) இரண்டு முறை தகுந்த  ஈரப்பதத்தில் மேலுரமாக இடவேண்டும்.
  • இறவை பகுதிகளில், 100% மணிச்சத்து மற்றும் 50% தழை மற்றும் சாம்பல் சத்தினை அடியுரமாக இட வேண்டும். மீதம் உள்ள தழை மற்றும் சாம்பல் சத்து உரங்களை இரண்டு சம பாகங்களாக பிரித்து விதைத்த 30 மற்றும் 60 வது நாளில் இட வேண்டும்.
  • எக்டருக்கு 12.5 கிலோ துத்தநாக சல்பேட்டும் 25 கிலோ பெரஸ் சல்பேட்டும் இட வேண்டும்.

விதை உற்பத்தி

உரமிடுதல்

  • எக்டருக்கு 60 : 60 : 20 கிலோ தழை, மணி, சாம்பல் சத்தினை அடியுரமாக இட வேண்டும்.

கலப்பின விதை உற்பத்தி

உரமிடுதல்

  • எக்டருக்கு 90:70:70 கிலோ தழை, மணி, சாம்பல் சத்தினை இட வேண்டும்.

Updated on : December 2013

 
Fodder Cholam