Agriculture
உர நிர்வாகம்

பருத்தி

இயற்கை உரமிடல்

எக்டருக்கு 12.5 டன் தொழு உரம் (அ) மக்கிய உரம் (அ) 2.5 டன் மண்புழு உரத்தை உழுவதற்கு முன் மண்ணின் மீது பரப்பி உழவு செய்யவேண்டும். அசோபோஸ் 2கிகி/எக்டர் அல்லது அசோஸ்பைரில்லம் + பாஸ்பரஸில் கரைக்கக்கூடிய பாக்டீரியா + இளஞ்சிவப்பு நிறமுடைய நிலைமாறும் மெத்திலோடிராபிக் எக்டருக்கு 2.2 கிகி ஒவ்வொரு முறையும் அடியுரமாக அளிக்க வேண்டும்.

இரசாயன உரமிடுதல்

மண் பரிசோதனைக்கு ஏற்ப தழை, மணி மற்றம் சாம்பல் சத்துக்களை இடவேண்டும். இல்லையெனில் கீழ்க்கண்டவாறு உர அளவை இடவேண்டும்.

இரகங்கள்/ வீரிய ஒட்டு இரகங்கள் உரஅளவு (கி/எக்டர்)
தழை மணி சாம்பல்
எம்.சி.யு 5, எம்.சி.யு 5 விடி, எம்.சி.யு 12, எம்.சி.யு 13, எஸ்.வி.பி.ஆர் 2 80 40 40
எம்.சி.யு 7, எஸ்.வி.பி.ஆர் 3 60 30 30
வீரிய ஒட்டு இரகங்கள் 120 60 60
  • அடியுரம் இட இயலாத சூழ்நிலையில்களில், விதைத்த 25  நாளில் உரமிடலாம்.
  • இரகங்களுக்கு 50 சத தழைச்சத்தும், சாம்பல் சத்து,மணி சத்தை முழுமையாகவும் அடியுரமாக இடவேண்டும். எஞ்சியுள்ள தழை மற்றும் சாம்பல் சத்தை 40-45ம் நாளில் இடவும். வீரிய ஒட்டு இரகங்களுக்கு தழைச்சத்தை மூன்று முறையாக அடியுரம்,  45 மற்றும் 60 நாளில் இடவும்.
    இலைத் தெளிப்பாக 2% டி.ஏ.பி + 1% பொட்டாசியம் குளோரைடு அல்லது பாலிபீடு மற்றும் மல்டி பொட்டாசியத்தை அளிப்பதன் மூலம்  பருத்தி மகசூலை அதிகரிக்கலாம்.
  • உரங்களை பட்டையாக மூன்றில் இரண்டு பங்கு உயரத்தில் மேலிருந்து இட்டு மண்ணுடன் கலந்திடவேண்டும்.

நுண்ணூட்டம் இடுதல்

தமிழ்நாடு நுண்உரக் கலவையை இரகங்களுக்கு எக்டருக்கு 12.5கிகி கலப்பினமாக இருந்தால் 15கிகி ஊட்டமேற்றிய தொழுவுரமாக அளிக்க வேண்டும். ஊட்டமேற்றிய தொழுவுரம் தயாரிக்க 1:10 என்ற விகிதத்தில் நுண்உரக் கலவை மற்றும் தொழுவுரத்தை சேர்த்து தகுந்த ஈரப்பதத்தில் ஒரு மாதம் நிழலில் உலர்த்த வேண்டும்.  அடிப்படை இலைவழித் தெளிப்பாக 2% மெக்னீசியம் சல்பேட் + காய் உருவாகும் பருவத்தில் 1% யூரியாவும் தெளிக்க வேண்டும்.
எக்டருக்கு 12.5 கிராம் நுண்ணூட்டக் கலவையை சுமார் 50 கிலோ மணலுடன் கலந்து விதைச் சாலில் தூவவேண்டும்.

ஊட்டச்சத்துக் குறைபாடுகள்

  • துத்தநாகக் குறைபாடுள்ள நிலங்களுக்கு எக்டருக்கு 50 கிராம் துத்தநாக சல்பேட் இடவேண்டும். பயிர் வளர்ச்சியின் போது குறைபாடு தென்பட்டால் 0.5 சத துத்தநாக சல்பேட் கரைசலை விதைத்த 45,60 மற்றும் 75 நாட்களில் தெளிக்கவேண்டும். 
  • மக்னீசியம் குறைபாடு உள்ள நிலங்களுக்கு எக்டருக்கு 20 கிராம் மக்னீசியம் சல்பேட்டு இடவேண்டும்.
  • அடிப்படை இலைவழித் தெளிப்பாக 2% மெக்னீசியம் சல்பேட் + காய் உருவாகும் பருவத்தில் 1% யூரியாவும் தெளிக்க வேண்டும்.

மேலுரமிடல்

  • இரகங்களுக்கு 50 சத தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து விதைத்த 45ம் நாள் இடவேண்டும்.
  • வீரிய ஒட்டு இரகங்களுக்கு மூன்றில் ஒரு பங்கை 45 ஆம் நாளும் மற்றொரு பங்கை 65 ஆம் நாளும் இடவேண்டும்.

நெல் தரிசு பருத்தி

உரமிடுதல்

  • மண் பரிசோதனைக்கு ஏற்ப தழை, மணி மற்றம் சாம்பல் சத்துக்களை இடவேண்டும். இல்லையெனில் கீழ்க்கண்டவாறு உர அளவை இடவேண்டும். 60:30:30 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து/எக்டர் 
  • 50 % தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து மற்றும் 100 % மணிச்சத்தினை விதைத்த 35 வது நாளில் பழைய டெல்டா பகுதிகளில் இட வேண்டும். மீதமுள்ள உர அளவினை 55 வது நாளில் பருத்தி செடியின் வரிசையில் இட வேண்டும்.

புதிய டெல்டா பகுதிகளில், 100 % மணிச்சத்து மற்றும் 1/3 பகுதி தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்தினை விதைத்த 20 வது நாளிலும் மற்றும் 2/3 பகுதி தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்தினை விதைத்த 40 வது நாளிலும் இட வேண்டும்.

நுண்ணூட்டச்சத்து இடுதல்

வேளாண்மைத் துறை தயாரித்த நுண்ணூட்டக் கலவை எக்டருக்கு 12.5 கிலோவை அடியுரமாக இட வேண்டும். பருத்தி இலை சிவப்பாகுதலை தடுக்க 20 கிலோ மெக்னீசியம் சல்பேட்டை அடியுரமாக இட வேண்டும்.

மானாவாரி பருத்தி

இயற்கை உரமிடல்

  • எக்டருக்கு 12.5 டன் தொழு உரம் (அ) மக்கிய உரம் (அ) 2.5 டன் மண்புழு உரத்தை உழுவதற்கு முன் மண்ணின் மீது பரப்பி உழவு செய்யவேண்டும்.

இரசாயன உரமிடுதல்

  • மண் பரிசோதனைக்கு ஏற்ப தழை, மணி மற்றம் சாம்பல் சத்துக்களை இடவேண்டும்.
  • இல்லையெனில் பருத்தி இரகங்களுக்கு கீழ்க்கண்டவாறு உர அளவை இடவேண்டும்.
இரகங்கள் உர அளவு (கிலோ/எக்டர்)
தழை மணி சாம்பல்
கே11 20 0 0
எஸ்.வி.பி.ஆர் 2 40 20 40
கே.சி  2 40 20 40

நுண்ணூட்டம் இடுதல்

தமிழ்நாடு வேளாண்மைத் துறை நுண்உரக் கலவையை இரகங்களுக்கு எக்டருக்கு 12.5கிகி கலப்பினமாக 50 கிகி மணல் கலந்து இட வேண்டும் அல்லது எக்டருக்கு 7.5 கிலோ தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக நுண்ணூட்டக் கலவையை ஊட்டமேற்றிய தொழுவுரமாக இடவும். (ஊட்டமேற்றிய தொழுவுரம் தயாரிக்க 1:10 என்ற விகிதத்தில் நுண்உரக் கலவை மற்றும் தொழுவுரத்தை சேர்த்து தகுந்த ஈரப்பதத்தில் ஒரு மாதம் நிழலில் உலர்த்த வேண்டும்.)
விதைத்த பிறகு உரத்தினை வரப்புகளில் தூவி, விதைகளை மூட வேண்டும்.
உரங்களை மண்ணுடன் கலக்க கூடாது.

மானாவாரி பி.டி பருத்தியில் சிவப்பாகுதலை குறைத்து, மகசூலை அதிகரித்தல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நுண்ணூட்டக் கலவை மற்றும் பி.ஜி.ஆர் இலை தெளிப்பு கரைசலை 1.5 % என்ற அளவில் காய் உருவாகும் பருவத்தில் பரிந்துரைக்கப்பட்ட உர அளவுடன் அளிப்பதன் மூலம் சிவப்பாகுதலை குறைத்து, விதை மகசூலை அதிகரிக்கலாம்.

இலைவழி உரமிடுதல்    

0.5 % யூரியா மற்றும் 1% பொட்டாசியம் குளோரைடை விதைத்த 45 மற்றும் 65 வது நாளில் தகுந்த ஈரப்பதத்தில் இலை மேல் தெளிக்க வேண்டும்.

Updated on : December 2013

 
Fodder Cholam