Agriculture
உர நிர்வாகம்

கம்பு

நாற்றங்கால்

தொழு உர பயன்பாடு

750 கிலோ தொழுஉரம் இட்டு உழுதல் வேண்டும். 500 கிலோ தொழுவுரம் கொண்டு விதைகளை மறைக்க வேண்டும்.

நிலத்தை தயார் செய்தல்

உரம் அல்லது தொழுவுரம் இடுதல்

ஹெக்டருக்கு 12.5 டன்  தொழுவுரம் அல்லது மட்கிய உரம் மட்கிய நார் உரம் உழுவதற்கு முன் இடவேண்டும். நாட்டுக்கலப்பை கொண்டு உரங்களை மண்ணுடன் ஒருங்கிணைத்தல் வேண்டும். ஹெக்டருக்கு அசோஸ்பைரில்லம் 10 பாக்கெட்டுகள் மற்றும் பாஸ்போபாக்டீரியா 10 பாக்கெட்டுகள் (அல்லது) அசோபாஸ் 20 பாக்கெட்டுகளை 25 கிலோ மண் மற்றும் 25 கிலோ தொழுவுரத்துடன் கலந்து இட வேண்டும்.

உரங்கள் பயன்பாடு

மண் பரிசோதனையின் பரிந்துரைப்படி NPK உரங்களை அளிக்கலாம். மண்பரிசோதனை செய்யவில்லையென்றால் அனைத்து வகையான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பால் சத்து/ஹெக்டர் 70:35:35 என்ற அளவில் இட வேண்டும். கலப்பினம் என்றால் தழைச்சத்து 80 கிலோ, மணிச்சத்து 40 கிலோ மற்றும் சாம்பல் சத்து 40 கிலோ ஒரு ஹெக்டருக்கு கொடுக்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்தினை மூன்றாக பிரித்து ஒரு சென்டிற்கு 25:50:25 என்ற அளவில் விதைக்கும் முன், விதைத்த 15 நாள் மற்றும் விதைத்த 30 நாளில் இட வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட மணிச்சத்து மற்றும் சாம்பல்சத்தினை அடியுரமாக அளிக்க வேண்டும். மானாவாரி பயிர்களுக்கு அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியம் அல்லது அசோபாஸை பரிந்துரைக்கப்பட்ட அளவில் 75 சதவீத தழைச்சத்து மற்றும் மணிச்சத்தினை சேர்த்து இட வேண்டும்.

பயன்படுத்தும் முறை

நாற்று நடுவதற்கு வரப்பின் அடியிலிருந்து 5 செ.மீ ஆழத்தில் (அடியிலிருந்து 1/3 இடைவெளியில்), உரத்தை இட்டு மூட வேண்டும். நேரடி விதைப்பு பயிரில், படுக்கையிலிருந்து 45 செ.மீ இடைவெளி விட்டு 5 செ.மீ ஆழத்தில் குழி அமைக்க வேண்டும். 5 செ.மீ ஆழத்தில் உரத்தை வைத்து பின் விதைப்பதற்கு முன் 2 செ.மீ வரை மேல் மண் அணைக்க வேண்டும். தானியங்களை ஊடுபயிர் செய்ய படுக்கையிலிருந்து 30 செ.மீ இடைவெளிவிட்டு 5 செ.மீ ஆழத்தில் குழி அமைக்க வேண்டும். கம்பு வைத்த பிறகு உரம் வைத்து 2 செ.மீ வரை மண் அணைக்க வேண்டும். அசோஸ்பைரில்லம் உட்புகுத்தி விதைகளை விதைக்கும் போது தழைச்சத்து 50 கிலோ/ ஹெக்டர், கலப்பின ரகத்திற்கு 60 கிலோ/ஹெக்டர், மண் பரிசோதனையின் பரிந்துரைப்படி தழைச்சத்தை 25 சதவீதம் குறைவாக அளிக்கலாம்.

நுண்ணூட்டச்சத்து கலவையின் பயன்பாடு

வேளாண்மை துறை வழிகாட்டுதல்படி 12.5 கிலோ /ஹெக்டர் நுண்ணூட்டக் கலவையை அளிக்கலாம். நுண்ணூட்டக் கலவையை போதுமான மண் கொண்டு 50 கிலோவாக செய்து கொள்ள வேண்டும். பிறகு விதைப்பதற்கு முன் / பின்பு விதைகளை மூடும்விதமாக நுண்ணூட்டக்கலவை அளிக்க வேண்டும். நுண்ணூட்டக் கலவை கிடைக்கவில்லையென்றால் 25 கிலோ துத்தநாக சல்பேட்டு ஒரு ஹெக்டேருக்கு அளிக்க வேண்டும். மேலே கூறியவற்றை போதுமான மண் கொண்டு 50 கிலோவாக கலந்து அளிக்க வேண்டும்.

நிலத்தை மேலாண்மை செய்தல் 

வேரை உயிர் உரங்களில் நனைத்தல் :  அசோஸ்பைரில்லம் 5 பாக்கெட்டுகள் (1000 கிராம்) /ஹெக்டர் மற்றும் பாஸ்போபாக்டீரியா 5 பாக்கெட்டுகள் அல்லது (1000 கிராம்) /ஹெக்டர் அசோபாஸ் 10 பாக்கெட்டுகள்  (2000 கிராம்) /ஹெக்டர் இவற்றை 40 லிட்டர் தண்ணீரில் கலந்து சேற்று குழம்பு தயார் செய்தல் வேண்டும். இச்சேற்றுக் குழம்பில் நாற்றுகளை நடுவதற்கு முன்  15 -30 நிமிடம்  நனைக்க வேண்டும்.

மேலுரமிடுதல்

  • நாற்று நட்டு அல்லது நேரடி விதைத்த 15 மற்றும் 30 நாட்களில் தழைச்சத்தினை மேலுரமாக இட வேண்டும் 
  • நாற்று நடுதலாக இருந்தால் ஒரு குச்சியினால் 5 செ.மீ ஆழத்திற்கு ஒரு குழியை தோண்டி அதன் அடியில் உரத்தை வைத்து மூடவேண்டும்.
  • நேரடி விதைத்தலில் உரத்தை பட்டையில் இட வேண்டும். ஊடுபயிராக தானியம் விதைத்திருந்தால் உரத்தை கம்பிற்கு மட்டும் இட வேண்டும்.
  • உரம் வைத்த பிறகு பாசனம் செய்ய வேண்டும்.
 
Fodder Cholam