கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்
தொழு உரம் இடுதல்
எக்டருக்கு 25 டன்
உரமிடுதல்
- மண் பரிசோதனையின் படி உரமிடவும், மண் பரிசோதனை செய்யாவிடில்
எக்டருக்கு 150: 50 :40 கிலோ தழை, மணி , சாம்பல் சத்து இடவும்.
- முழுஅளவு மணி மற்றும் சாம்பல் சத்து 50 சதம் தழைச்சத்து உரங்களை அடியுரமாக இட வேண்டும். 50 சதம் தழைச்சத்தை நட்ட 30 வது நாளில் மேலுரமாக இடவேண்டும்.
- ஒவ்வொரு அறுவடைக்கு பின்னரும் 75 கிலோ தழைச்சத்தை அடியுரமாக இடுவதால் மகசூலை நிலை நிறுத்தலாம்.
- இட வேண்டிய தழை மற்றும் மணிச் சத்தின் அளவில் 75 சதத்துடன் அசோஸ்பைரில்லம் (எக்டருக்கு 2000 கிராம்) மற்றும் பாஸ்போபாக்டீரியா (2000 கிராம்) அல்லது அசோபாஸ் (4000 கிராம்) கலந்து கலவையாக இடும் போது விளைச்சலை அதிகரிப்பதுடன் 25 சதம் இட வேண்டிய உர அளவினைக் குறைக்கிறது.
Updated on : December 2013 |