Agriculture
உர நிர்வாகம்

மொச்சை

பாக்டீரியா பயிர் வளர்ப்புடன் விதை நேர்த்தி

பூசணக் கொல்லியுடன் விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை பாக்டீரியா பயிர் வளர்ப்புடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும். இரண்டு விதை நேர்த்திக்கும் இடையே குறைந்தட்சம் 24 மணி நேர இடைவெளி இருக்க வேண்டும். ஒரு எக்டருக்கு தேவையான விதைகளை விதை நேர்த்தி செய்ய மூன்று பாக்கெட் பாக்டீரியா பயிர் வளர்ப்பு போதுமானதாகும். இந்த பாக்டீரியா பயிர் வளர்ப்பினை அரிசி கஞ்சியுடன் சேர்த்து தயாரிக்க வேண்டும். நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை 15 நிமிடங்கள் நிழலில் உலர்த்த வேண்டும்.

உரமிடுதல்

உரங்களை விதைப்பிற்கு முன் அடியுரமாக இட வேண்டும்.

மானாவாரி : 12.5 கிலோ தழைச்சத்து + 25 கிலோ மணிச்சத்து + 12.5 கிலோ சாம்பல்சத்து +10 கிலோ கந்தகச்சத்து*/எக்டர் 

இறவை : 25 கிலோ தழைச்சத்து + 50 கிலோ மணிச்சத்து + 25 கிலோ சாம்பல்சத்து + 20 கிலோ கந்தகச்சத்து*/எக்டர்

*குறிப்பு : மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட் உரம் மூலம் இடவில்லை எனில் ஜிப்சம் மூலமாக கந்தக சத்தை இடவும்.

அடியுரமாக இறவைப் பயிருக்கு எக்டருக்கு 25 கிலோ ஜிங் சல்பேட் இடவும்

Updated on : December 2013

 
Fodder Cholam