Agriculture
உர நிர்வாகம்

தீவன சோளம்

இறவைச் சோளம்

தொழுவுரம் இடுதல்

எக்டருக்கு 12.5 டன் தொழு உரம் அல்லது கம்போஸ்ட் 10 பாக் அசோஸ்பைரில்லம் (2000 கிராம்) மற்றும் 10 பாக் பாஸ்போபாக்டீரியா (2000 கிராம்) அல்லது 20 பாக் அசோபாஸ் (4000 கிராம்) கலந்து இட வேண்டும். பின்னர் 2 முதல் 3 முறை உழுது பண்படுத்தப்பட்ட நிலத்தில் 6 மீ நீளமும் 60 செ.மீ இடைவெளியும் கொண்ட பார்கள் அமைக்க வேண்டும்.

உர அளவு

கோ 27

  • மண் பரிசோதனை பரிந்துரைப்படி தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து உரங்கள் அளிக்க வேண்டும். மண் பரிசோதனை பரிந்துரை இல்லையென்றால் பொதுவான பரிந்துரையாக தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து முறையே 60:40:20 என்ற அளவில் அளிக்க வேண்டும்.
  • விதைப்பதற்கு முன் பாதி அளவு தழைச்சத்து மற்றும் முழு அளவு மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தை அடிப்படையாக அளிக்க வேண்டும்.
  • மேலுரமிடல் : விதைத்த பின் 30-ம் நாளில் எக்டருக்கு 30 கிகி தழைச்சத்து அளிக்க வேண்டும்.
  • மறுதாம்பு பயிர்களுக்கு அறுவடை முடிந்தபின் அல்லது நீர்ப்பாய்ச்சியவுடன் எக்டருக்கு 30 கிகி தழைச்சத்து அளிக்க வேண்டும்.

கோ (எஃப் எஸ்) 29 (மறுதாம்பு பயிர்)

  • அடியுரமாக எக்டருக்கு 45:40:40 என்ற அளவில் தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து அளிக்கவும் மற்றும் மேலுரமாக விதைத்த 30-ம் நாளில் தழைச்சத்து 45 கிகி அளிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு முறை வெட்டும்போதும் எக்டருக்கு 45 கிகி தழைச்சத்து அளிக்க வேண்டும். நான்காவது வெட்டிற்குப் பிறகு 40 கிகி தழைச்சத்து மற்றும் 40 கிகி சாம்பல் சத்தை 45 கிகி தழைச்சத்துடன் சேர்த்து அளிப்பதன் மூலம் தீவனப்பயிரின் விளைச்சல் மற்றும் தரத்தை அதிகரிக்கலாம்.
  • அசோஸ்பைரில்லம் (2000கி/எக்டர்) மற்றும் பாஸ்போ பாக்டீரியம் (2000கி/எக்டர்) கலவையை அளிக்க வேண்டும். அசோபோஸ் (4000கி/எக்டர்) பரிந்துரைக்கப்பட்ட 75 சதவிகித தழைச்சத்து மற்றும் மணிச்சத்து அளிப்பது மகசூலை அதிகரிக்கிறது மற்றும் 25% உரஅளவை சேமிக்கிறது.

மேலுரம் எக்டருக்கு

விதைத்த 30 நாட்கள் கழித்து எக்டருக்கு தழைச்சத்து 45 கிலோ மற்றும் ஒவ்வொரு முறையும் அறுவடை செய்து பின் 45 கிலோ மணிச்சத்து அளிக்க வேண்டும். நான்காவது அறுவடையின் பொழுது எக்டருக்கு 45 கிலோ தழைச் சத்துடன் 40 கிலோ மணிச் சத்து மற்றும் 40 கிலோ சாம்பல் சத்தையும் அளிக்க வேண்டும். இட வேண்டிய தழை மற்றும் மணிச் சத்தின் அளவில் 75 சதத்துடன் அசோஸ்பைரில்லம் (எக்டருக்கு 2000 கிராம்) மற்றும் பாஸ்போபாக்டீரியா  (எக்டருக்கு 2000 கிராம்) அல்லது அசோபாஸ் (எக்டருக்கு 4000 கிராம்) ஆகியவற்றுடன் கலந்து கலவையாக இடும்போது விளைச்சலை அதிகரிப்பதுடன் 25 சதம் இட வேண்டிய உர அளவினைக் குறைக்கின்றது.

மானாவாரி தீவன சோளப்பயிர்

உர அளவு

 

செம்மண் நிலம்

கருமண்நிலம்

தழைச் சத்து   

30 கிலோ / எக்டர் 

40 கிலோ / எக்டர்   

மணிச் சத்து  

20 கிலோ / எக்டர்  

20 கிலோ / எக்டர்  

சாம்பல் சத்து

20 கிலோ / எக்டர்  

-

Updated on : December 2013

 
Fodder Cholam