உர நிர்வாகம்
|
|
தீவன மக்காச்சோளம் தொழு உரம் இடுதல் எக்டருக்கு 25 டன் என்ற அளவில் தொழு உரம் அல்லது மட்குடன் 10 பாக் அசோஸ்பைரில்லம் (2000 கிராம்) மற்றும் 10 பாக் பாஸ்போபாக்டீரியா (2000 கிராம்) அல்லது 20 பாக் அசோபாஸ் (4000 கிராம்) ஆகியவற்றை உழும்போது வயலில் இட்டு உழவேண்டும். 2 முதல் 3 முறை உழவு செய்து நிலத்தைப் பண்படுத்தி 60 செ.மீ இடைவெளியில் பார் அமைக்க வேண்டும். உரமிடுதல் மண் பரிசோதனையின் படி உரமிடவும், மண் பரிசோதனை செய்யாவிடில் (எக்டருக்கு) அடியுரமாக 30: 40 : 20 கிலோ தழை, மணி , சாம்பல் சத்து இடவும். விதைத்து 30 வது நாளில் மேலுரம் (எக்டருக்கு) 25 கிலோ தழைச் சத்தை இடவும். விதைப்பு விதைப்புக்கு முன் மூன்று பாக்கெட்டுகள் அசோஸ்பைரில்லம் (எக்டருக்கு 600 கிராம்) உயிர் உரத்தைக் கொண்டு விதை நேர்த்தி செய்யவும். விதை உற்பத்தி உரமிடுதல்
Updated on : December 2013 |
|
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2013 | |