உர நிர்வாகம்
|
|
கொள்ளு உயிர் உரத்துடன் விதை நேர்த்தி விதைகளை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயாரிக்கப்பட்ட ரைசோபியல் பயிர் வளர்ப்பு ஒரு பாக்கெட் (200 கிராம்/எக்டர்) அல்லது பாஸ்போ பாக்டீரியாவை (200 கிராம்/எக்டர்) கொண்டு அரிசி கஞ்சியுடன் சேர்த்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதை நேர்த்தி செய்யவில்லை என்றால், 10 பாக்கெட் ரைசோபியம் மற்றும் 10 கிலோ பாஸ்போ பாக்டீரியாவை 25 கிலோ தொழுவுரம் மற்றும் 25 கிலோ மண்ணுடன் கலந்து விதைப்பிற்கு முன் வயலில் இட வேண்டும். ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை உரமிடுதல் விதைப்பதற்கு முன் அடியுரமாக எக்டருக்கு 12.5 மக்கிய குப்பை உரம் அல்லது தொழு உரம் இடவும். இவை தவிர தழைச் சத்து எக்டருக்கு 12.5 கிலோ மற்றும் மணிச்சத்து 25 கிலோ மற்றும் 12.5 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக் கூடிய இரசாயன உரங்களை இட வேண்டும். விதை உற்பத்தி குறிப்பு : இலைகள் வெளிர்ந்து காணப்படும் அறிகுறிகளுக்கு மெக்னீசியம் குளோரைடை 6 கிராம்/லி என்ற அளவில் விசை தெளிப்பான் கொண்டு 2-3 முறை 5 நாள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். Updated on : December 2013 |
|
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2013 | |