| மக்காச்சோளம்
 இறவை மக்காச்சோளம்
 தொழு உரம் இடுதல் 
 ஒரு எக்டருக்கு 12.5 டன் தொழு உரம்  அல்லது மக்கிய தொழு உரம் அல்லது மக்கிய தேங்காய் நாரைச் சமமாகக் கடைசி உழவிற்கு  முன் சீராக இட்டு, அதனுடன் 10 பாக்கெட்  (2000 கிராம் எக்டர்) அசோஸ்பைரில்லம் கலந்து பரப்பி நன்கு  உழவு செய்யவும்.
 உரமிடுதல் 
        மண் பரிசோதனைக்கு       ஏற்ப தழை, மணி, சாம்பல்       சத்துக்களை இடுதல் வேண்டும். இல்லையெனில் பொதுப் பரிந்துரையான 135,       62.5, 50 கிலோ/ எக்டர் அளவில் தழை,       மணி மற்றும் சாம்பல் சத்துக்களைப் பொதுவாக அளிக்கவேண்டும்.அடியுரமாக கால் பகுதி       தழைச்சத்து, முழு அளவு மணி மற்றும் சாம்பல் சத்து       விதைப்பதற்கு முன் இடவும்.பார்களில்       கீழிலிருந்து 2/3 பகுதிக்கு 6 செ.மீ       ஆழத்திற்கு குழியெடுத்து உரங்களை போட்டு 4 செ.மீ வரை       மண் கொண்டு மூடவும்.பாத்திகளில் 6 செ.மீ ஆழத்திற்கும், 60 செ.மீ இடைவெளி விட்டும் குழியெடுத்து உரக்கலவையை இட்டு 4 செ.மீ வரை மண்கொண்டு மூடவும்.உரக்கலவையை பார்களின்       ஓரத்தில் இடவேண்டும். 4 செ.மீ       ஆழத்திற்கு மண்ணால் மூடவேண்டும்.அசோஸ்பைரில்லம்       நுண்ணுயிர் உரத்தைப் பயன்படுத்தினால் 100 கிலோ தழைச்சத்து மட்டும் அளித்தால் போதும். நுண்ணூட்டச்  சத்து இடுதல் 
        தமிழ்நாடு வேளாண்       துறை உருவாக்கிய நுண்உரக் கலவையை 12.5 கிலோ மணலுடன் கலந்து மொத்த அளவு 50 கி /       ஹெக்டர் அளிக்க வேண்டும்.எக்டருக்கு 30 கிலோ தமிழ்நாடு நுண்ணூட்டக் கலவையை       ஊட்டமேற்றிய தொழுவுரமாக அளிக்க வேண்டும். (ஊட்டமேற்றிய தொழுவுரம் தயாரிக்க 1:10       என்ற விகிதத்தில் நுண்ணூட்டக்கலவை மற்றும் தொழுவுரத்தை கலக்க       வேண்டும். தகுந்த ஈரப்பதத்தில் கலந்து ஒரு மாதம் நிழலில் வைக்க வேண்டும்). (அல்லது) 5 கிலோ       துத்தநாகம் + 40 கிலோ கந்தகம் + 1.5 கிலோ போரானை பற்றாக்குறை உள்ள மண்ணில் இட வேண்டும்.துத்தநாக பற்றாக்குறை       உள்ள மணலில் கலப்பின மக்காச்சோளத்திற்கு ஏக்கருக்கு 37.5 கி துத்தநாக சல்பேட்       பரிந்துரைக்கப்படுகிறது.பார் முறை நடவில், கலவையை மூன்றில் இரண்டு பங்கு வரப்பு       மேலயும், வாய்க்காலிலும் தூவ வேண்டும்.பாத்தி முறை       பின்பற்றும்பொழுது, குழித்து நுண்ணூட்டக் கலவையை இட       வேண்டும்.நுண்ணூட்டக் கலவையை       மண்ணில் இணைக்க வேண்டாம்.  விதை  நேர்த்தி 
        தண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்த ஒரு கிலோ விதையை குளோர்பைரிபாஸ் 20 ஈசி அல்லது மோனோகுரோட்டாபாஸ் 36 டபிள்யூ எஸ்சி       அல்லது பாசோலோன் 35 ஈசி (4 மிலி +       0.5 கிராம் கோந்து + 20 மிலி       தண்ணீர்) அல்லது இமிடாகுளோபிரிட் 10 கிராம் / கிலோ என்ற       அளவில் விதை நேர்த்தி செய்யவேண்டும்.அடிச்சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த மெட்டாலாக்ஸில்       அல்லது திரம் 2 கிராம் / கிலோ என்ற அளவில் விதை       நேர்த்தி செய்யவேண்டும்.பூஞ்சாண விதை நேர்த்தி செய்த விதைகளை விதைப்பதற்கு       முன் மூன்று பாக்கெட் அசோஸ்பைரில்லம் (600 கிராம்/ எக்டர்) கொண்டு விதை நேர்த்தி       செய்யவேண்டும். தழைச்சத்து  மேலுரம் இடுதல் 
        விதைத்த 25வது நாளில், தழைச்சத்தில் பாதி அளவு உரத்தை       இட்டு மண்ணால் மூடவேண்டும்.மீதம் உள்ள கால் பகுதி தழைச்சத்தை விதைத்த 45வது நாளில் இடவேண்டும். மானாவாரி மக்காச்சோளம்
 தொழு உரம் இடுதல் 
 ஒரு எக்டருக்கு 12.5 டன் தொழு உரம்  அல்லது மக்கிய தொழு உரம் அல்லது மக்கிய தேங்காய் நாரைச் சமமாகக் கடைசி உழவிற்கு  முன் சீராக இட்டு, அதனுடன் 10 பாக்கெட்  அசோஸ்பைரில்லம் கலந்து பரப்பி நன்கு உழவு செய்யவும்.
 உரமிடுதல் 
 மண் பரிசோதனைக்கு ஏற்ப தழை, மணி,  சாம்பல் சத்துக்களை இடுதல் வேண்டும். இல்லையெனில் மணற்பாங்கான  நிலத்திற்கு 60:30:30 கிலோ எக்டர் அளவிலும், களிமண் நிலத்திற்கு 40:20:00 கிலோ / எக்டர் என்ற  அளவில் தழை,மணி, சாம்பல் சத்துக்களை  அளிக்கவேண்டும்.ஏக்கருக்கு 7.5 கிலோ தமிழ்நாடு வேளாண்மை  பல்கலைக்கழக நுண்ணூட்டக் கலவையை ஊட்டமேற்றிய தொழுவுரமாக அளிக்கவும். (ஊட்டமேற்றிய  தொழுவுரம் தயாரிக்க 1:10 என்ற விகிதத்தில் நுண்ணூட்டக் கலவை  மற்றும் தொழுவுரம் சேர்க்க வேண்டும். தகுந்த வெப்பநிலையில் ஒரு மாதத்திற்கு  நிழலில் வைக்க வேண்டும்.
 
 நுண்ணுயிர்  உரத்துடன் விதை நேர்த்தி 
 பூஞ்சாண விதை நேர்த்தி செய்த விதைகளை விதைப்பதற்கு முன் மூன்று  பாக்கெட் அசோஸ்பைரில்லம் 1600 கிராம் / எக்டர் கொண்டு  விதை நேர்த்தி செய்யவேண்டும்.
 கலப்பின  மக்காச்சோளம்
 உரமிடுதல் 
 எக்டருக்கு 150: 75: 75 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து இடவும். 
 பிற ஊட்டச்சத்து மேலாண்மை முறைகள்  மக்காச்சோளம் இரகங்களில் பின்பற்ற படுபவை போன்றதே. Updated on : December 2013 |