|   | |
| உர நிர்வாகம்  | |
| கேழ்வரகு இறவைப் பயிர் நடவு வயலை தயார் செய்தல் ஹெக்டருக்கு 12.5 டன்  தொழுவுரம் அல்லது  மட்கிய நார் உரம் உழுவதற்கு முன் இடவேண்டும். நாட்டுக்கலப்பை கொண்டு உரங்களை  மண்ணுடன் ஒருங்கிணைத்தல் வேண்டும். குறிப்பு :  உரங்கள் வயலில் நன்றாக பரப்பவில்லையென்றால் ஊட்டச்சத்துகள்  வீணாகும். உர பயன்பாடு 
 நுண்ணூட்டக் கலவை அளித்தல் 
 பிராதான நில நிர்வாகம் வேர்களை நனைக்க அசோஸ்பைரில்லம் சேற்றுக் குழம்பு தயாரிக்க, அசோஸ்பைரில்லம் 5 பாக்கெட்டுகள் (1000 கிராம் /ஹெக்டர்) மற்றும் பாஸ்போபாக்டீரியா 5 பாக்கெட்டுகள் மற்றும் அசோபாஸ் 10 பாக்கெட்டுகள் இவற்றை 40 லிட்டர் தண்ணீரில் கலந்து சேற்று குழம்பு தயார் செய்தல் வேண்டும். இச்சேற்றுக் குழம்பில் நாற்றுகளை நடுவதற்கு முன் 15 -30 நிமிடம் நனைக்க வேண்டும். மானாவாரி கேழ்வரகு உரமிடுதல்  மானாவாரி  கேழ்வரகு பயிரில் உரமிடுதல் குறிப்பாக தழைச்சத்து மற்றும் மணிச்சத்து சரியான  முறையில் அளிக்க வேண்டும். பரிந்துரைக்கப்படும் உரபயன்பாடு மாநிலத்திற்கு மாநிலம்  வேறுபடுகின்றது. பொதுவாக பரிந்துரைக்கப்படும் அளவு  தழைச்சத்து/மணிச்சத்து/சாம்பல்சத்து முறையே 40:20:20  கிலோ/ஹெக்டர். பரிந்துரைக்கப்பட்ட மணிச்சத்து மற்றும் சாம்பல்சத்து  முழுவதும் விதைத்தவுடனும், தழைச்சத்து அளவை 2 அல்லது 3 ஆக பிரித்து ஈரப்பதத்தை பொறுத்து அளிக்க  வேண்டும். நல்ல மழையளவும் ஈரப்பதமும் உள்ள பகுதிகளில் பரிந்துரைக்கப்பட்ட  தழைச்சத்தில் 50% விதை விதைக்கும் போதும் மீதி உள்ள 50%  இரண்டு சம பகுதியாக பிரித்து விதைத்த பிறகு 25-30 மற்றும் 40-45 நாட்களில் அளிக்க வேண்டும். குறைந்த  மழையளவு உள்ள பகுதியில், 50% விதை விதைக்கும் போதும் மீதி  உள்ள 50% விதைத்த பிறகு 35 நாட்களில்  அளிக்க வேண்டும். உயிர் உரங்கள்  ஒரு  கிலோ விதைக்கு 25 கிராம் அசோஸ்பைரில்லம்  ப்ரேசில்லன்ஸ் மற்றும் ஆஸ்பர்ஜில்லஸ் அவமோரியை கொண்டு  விதை  நேர்த்தி செய்ய வேண்டும். விதை நேர்த்தி ரசாயனத்தில் விதைகளை முதலில் விதைநேர்த்தி  செய்து பிறகு உயிர் உரக்கலவையில் விதைநேர்த்தி செய்ய வேண்டும்.  உயிர் உரங்களைக் கொண்டு விதை நேர்த்தி செய்தல் 
 Updated on : December 2013 | |
| முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2013 | |