சோளம்
நாற்றாங்கால்
தொழுஉரம் இடுதல்
நன்கு மக்கிய தொழு உரம் 750 கிலோவை நிலத்தில் இட்டு நன்கு உழவேண்டும். நாற்றங்காலில் விதைத்தபிறகு 500 கிலோ மட்கிய தொழு உரம் கொண்டு விதையை மூடிவிடவேண்டும்.
நடவு வயல்
தொழு உரம் இடுதல்
12.5 டன்/ எக்டர் தொழு உரம் பரப்பவேண்டும். அதை நாட்டு கலப்பையைக் கொண்டு உழவேண்டும் மற்றும் 10 பொட்டலம் அசோஸ்பைரில்லம் (2000 கிராம்/எக்டர்) மற்றும் 10 பொட்டலம் (2000 கிராம்/எக்டர்) பாஸ்போபேக்டீரியா அல்லது 20 பொட்டலம் அசோபாஸ் (4000 கிராம்/ எக்டர்) கலந்து மண்ணில் இடவேண்டும்.
உரங்களின் பயன்பாடு
நடவு பயிர்
- மண் பரிசோதனை பரிந்துரைப்படி தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல்சத்து இட வேண்டும். மண் பரிசோதனை பரிந்துரைகள் இல்லையென்றால் பொதுப்பரிந்துரையாக எக்டருக்கு 90 கிலோ தழைச்சத்து, 45 கிலோ மணிச்சத்து, மற்றும் 45 கிலோ சாம்பல் சத்து என்ற அளவில் இட வேண்டும் மற்றும் முழு அளவு மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து நடுவதற்கு முன் அளிக்க வேண்டும்.
- விதைத்த 0, 15 மற்றும் 30-ம் நாளில் நைட்ரஜன் 50:25:25 % அளிக்கவும் மற்றும் முழு அளவு மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து நடுவதற்கு முன் அளிக்க வேண்டும்.
- வரப்புப் பயிரில் 5 செமீ ஆழத்தில் வரப்பின் ஓரத்தில் பள்ளம் தோண்டி குழித்து உரக் கலவையை இட்டு 2 செ.மீ அளவுக்கு மண் கொண்டு மூட வேண்டும்.
- நடவு வயலில் 10 பாக்கெட் (2 கிலோ/ எக்டர்) அசோஸ்பைரில்லம் மற்றும் 10 பாக்கெட் (2000 கிராம்/ எக்டர்) பாஸ்போ பாக்டீரியா அல்லது 20 பாக்கெட் (4000 கிராம்/ எக்டர்) அசோபோஸை 25 கிலோ தொழுவுரம் + 25 கிலோ மணலுடன் கலந்து விதைத்தல் / நடவிற்கு முன் இட வேண்டும்.
நேரடி விதைப்பு பயிர்
- மண் பரிசோதனை பரிந்துரைப்படி தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல்சத்து இட வேண்டும். மண் பரிசோதனை பரிந்துரைகள் இல்லையென்றால் பொதுப்பரிந்துரையாக எக்டருக்கு 90 கிலோ தழைச்சத்து, 45 கிலோ மணிச்சத்து, மற்றும் 45 கிலோ சாம்பல் சத்து என்ற அளவில் இட வேண்டும் மற்றும் முழு அளவு மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து நடுவதற்கு முன் அளிக்க வேண்டும்.
- விதைத்த 0, 15 மற்றும் 30-ம் நாளில் நைட்ரஜன் 50:25:25 % அளிக்கவும் மற்றும் அடிஉரமிடல் சாத்தியமில்லை என்றால் 24 மணி நேரத்திற்குள் மணலின் மேல் அளிக்க வேண்டும்.
- படுக்கை முறை நடவில் விதைப்பதற்கு முன் வரப்பிலிருந்து 45 செ.மீ இடைவெளி விட்டு 5 செ.மீ ஆழத்திற்கு குழி எடுக்க வேண்டும். உரக் கலவையை 5 செ.மீ குழியில் வைத்து 2 செ.மீ அளவிற்கு மண் கொண்டு மூட வேண்டும்.
- சோளத்திற்கு கலப்புப் பயிராக பயறுவகை பயிர் இருந்தால் (உளுந்து, பாசிப்பயறு மற்றும் தட்டைப் பயறு) 30 செ.மீ இடைவெளி விட்டு 5 செ.மீ ஆழத்திற்கு குழி எடுக்கவும்.
- உரக் கலவையை சோளத்தின் இரண்டு வரிசைகளில் வைத்து 2 செ.மீ மணல் கொண்டு மூட வேண்டும்.
- பயறுவகை பயிர் வளர்ந்த மூன்றாவது வரிசையை தவிர்க்கவும் மற்றும் உரக் கலவையை அடுத்த இரண்டு வரிசைகளில் வைத்து 2 செ.மீ மணல் கொண்டு மூட வேண்டும்.
- உயிர் உர பயன்பாடு : பாசன சோளத்தில் அசோஸ்பைரில்லம் அளித்திருந்தால் பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்தில் 75% போதுமானது.
- மண் பரிசோதனை அடிப்படையிலான உர பரிந்துரை மேற்கு மற்றும் வட மேற்கு மண்டலம் அதாவது அல்பிசால், இன்செப்டிசால் மற்றும் வெர்டிசால் போன்றவை குறிப்பிட்ட உற்பத்தி இலக்குகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
நுண் உரக் கலவை பயன்பாடு
நடவு பயிர்
- எக்டருக்கு 12.5 கிலோ வேளாண் துறை, தமிழ்நாடு நுண்உரக் கலவையை போதுமான மணலுடன் கலந்து 50 கிலோ அளவு வரப்பின் ஓரத்தில் அளிக்க வேண்டும்.
- நுண்உரக் கலவை இல்லையென்றால், 25 கிலோ துத்தநாக சல்பேட்டுடன் மணல் கலந்து மொத்த அளவு 50 கிலோ வரப்பில் அளிக்க வேண்டும்.
நேரடி விதைப்புப் பயிர்
- வேளாண் துறை, தமிழ்நாடு நுண்உரக் கலவையை எக்டருக்கு 12.5 கிலோவுடன் போதுமான அளவு மணல் மொத்த அளவு 50 கிலோ வரும் வரை கலக்கவும்.
- வரப்பில் கலவையை சமமாக பரப்பவும்.
- பற்றாக்குறை மணலில் அடியுரமாக எக்டருக்கு 25 கிலோ துத்தநாக சல்பேட் அல்லது எக்டருக்கு 12.5 கிலோ துத்தநாக சல்பேட் + தொழுவுரத்தை துத்தநாக பற்றாக்குறை மணலில் அளிக்கவும்.
- இரும்பு பற்றாக்குறை உள்ள மணலில் அடியுரமாக இரும்பு சல்பேட் எக்டருக்கு 50 கிலோவை எக்டருக்கு 12.5 டன் தொழுவுரத்துடன் கலந்து அளிக்கவும்.
மானாவாரி சோளம்
நுண்ணுயிர் உரங்கள் விதைநேர்த்தி
ஒரு எக்டருக்கு தேவையான விதைகளை 3 பொட்டலம் (600 கிராம்) அசோஸ்பைரில்லம் மேலும் 3 பொட்டலம் (600 கிராம்) பாஸ்போ பாக்டீரியா அல்லது 6 பொட்டலம் (1200 கிராம்) அசோபாஸ் கொண்டு விதைநேர்த்தி செய்யவேண்டும். இவ்வாறு செய்வதால் விண்ணிலுள்ள தழைச்சத்தைக் கிரகித்து பயிர்களுக்கு அளிக்கிறது.
நிலத்தில் இடுவதாக இருந்தால் ஒரு எக்டருக்கு 10 பொட்டலம் (2000 கிராம்) அசோஸ்பைரில்லம் மற்றும் 10 பொட்டலம் (2000 கிராம்) பாஸ்போ பாக்டீரியாவுடன் அல்லது 20 பொட்டலம் (4000 கிராம்/ எக்டர்) அஸோபாஸை 25 கிலோ மணல் மற்றும் 25 கிலோ தொழு உரம் கலந்து தூவவேண்டும்.
உர நிர்வாகம்
ஒரு எக்டருக்கு 12.5 டன்கள் மக்கிய தென்னை நார்க்கழிவு இடவேண்டும். இரசாயன உரங்களை மண்பரிசோதனை சிபாரிசிபடி இடவேண்டும். அல்லது பொதுப்பரிந்துரைப்படி எக்டருக்கு 40: 20 : 0 என்ற அளவில் தழை, மணி, சாம்பல் சத்துக்களை இடவேண்டும்.
மறுதாம்பு சோளம்
ஒரு எக்டருக்கு 100 கிலோ தழைச்சத்தை இரண்டாகப் பிரித்து 50 கிலோ மணிச்சத்துடன் மறுதாம்புப் பயிராக விட்ட 15வது நாளில் இடவேண்டும். மீதம் உள்ள தழைச்சத்தை 45வது நாளில் இடவேண்டும்.
Updated on : December 2013 |