Agriculture
உர நிர்வாகம்

சோயா மொச்சை

நுண்ணுயிர் கலத்தல்

தமிழ்நாடு வேளாண்மை பல்கழைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட ரைசோபியம் (COS1) 3 பாக்கெட் (600 கிராம் / எக்) மற்றும் பாஸ்போபாக்டீரியா 3 பாக்கெட் (600 கிராம் / எக்) உடன் கஞ்சி கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும். விதைநேர்த்தி செய்யாவிட்டால், 10 பாக்கெட் ரைசோபியம் (2000 கிராம் / எக்) மற்றும் 10 பாக்கெட் (2000 கிராம் / எக்) பாஸ்போபாக்டீரியா உடன் 25 கி.கி. தொழு உரம் மற்றும் 25 கி.கி உரம் மற்றும் 25 கி.கி மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன்னால் இடவேண்டும். பாக்டீரியாவால் விதைநேர்த்தி செய்யப்பட்ட விதைகளை 15 நிமிடத்திற்கு உலர்த்த வேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

உரநிர்வாகம்

ஒரு எக்டருக்கு 20 கிலோ தழைச்சத்து, 80 கிலோ மணிச்சத்து, 40 கிலோ சாம்பல் சத்து மற்றும் 40 கிலோ கந்தகச்சத்து கொடுக்கக்கூடிய உரங்களை அடி உரமாக இடவேண்டும். விதைத்த 40வது நாளில் இலைமூலம் 2 சதவீதம் டிஏபி கரைசல், தெளிப்பதன் மூலமும், சாலிசிலிக் அமிலம் 100 பிபிஎம் (50 கிராம்/ 500 லி/எக்டர்) இலை மூலம் விதைத்த 30வது மற்றும் 40வது நாளில் தெளிப்பதன் மூலமும் அதிக மகசூல் பெறலாம்.

மானாவாரி சோயாமொச்சை

பூசணகொல்லி மற்றும் உயிர் உரங்களுடன் விதை நேர்த்தி 

  • விதைகளை விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னர் ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டாசிம் அல்லது திரம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும் அல்லது ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைகோடிடர்மா விரிடி (அ) 10 கிராம் சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
  • ஒரு எக்டர் விதைப்பிற்கு தேவையான விதைகளை 3 பாக்கெட்  ரைசோபியம் மற்றும் 3 பாக்கெட் பாஸ்போபேக்டீரியா கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

உரமிடுதல்

  • மண் பரிசோதனை மூலம் பரிந்துரைக்கப்பட்ட உரங்களை இட வேண்டும் இல்லையெனில் பொதுவாக பரிந்துரைக்கப்பட்ட எக்டருக்கு 20:40:20:20 கிலோ தழை, மணி, சாம்பல் மற்றும் கந்தக சத்தினை போதுமான ஈரப்பதத்தில் இட வேண்டும்.
  • அனைத்து தழை, மணி, சாம்பல் மற்றும் கந்தக சத்தினை அடியுரமாக இடவேண்டும்.

 

Updated on : December 2013

 
Fodder Cholam