உர நிர்வாகம்
|
|
சர்க்கரை வள்ளிக் கிழங்கு இயற்கை மற்றும் செயற்கை உரங்கள் சர்க்கரைக் கிழங்கிற்கு ஹெக்டேருக்கு 12.5 டன் தொழு உரத்தை கடைசி உழவின் போதும் மேலும் அடியுரமாக ஹெக்டேருக்கு 75 கிலோ தழைச்சத்து, 75 கிலோ மணிச்சத்து மற்றும் 75 கிலோ சாம்பல் சத்தும் கடைசி உழவின் போது அல்லது விதைக்கும் முன்பு இடவேண்டும். உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபேக்டீரியா ஒவ்வொன்றும் 10 பொட்டலங்கள் (2 கிலோ) மண்ணில் இடவேண்டும். மேலுரமாக 37.5 கிலோ தழைச்சத்தை விதைத்த 20-25 வது நாளிலும் மீண்டும் ஒருமுறை 37.5 தழைச்சத்தை 50வது நாளிலும் இடவேண்டும். Updated on : December 2013 |
|
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2013 | |