உர நிர்வாகம்
|
|
கரும்பு அடியுரமாக அங்கக உரங்கள் இடுதல் தோட்டக்கால் நிலங்களில் கடைசி உழவிற்கு முன்னதாக தொழுஉரம் 12.5 டன்/ எக்(ஆழ் குப்பை உரம் 25 டன்/ எக்(அ) ஆலை அழுக்கு 37.5 டன்/ எக் என்ற அளவில் இட வேண்டும். களி மண் நிலங்களில் மேற்கண்ட அங்கக உரங்களை நடவு சால்களில் இட்டு நன்கு கலந்து விடவேண்டும். அடியுரமாக இரசாயன உரங்கள் இடுதல்
மேலுரமிடுதல் மண்ணில் இடுதல்
தழைச்சத்து சேமிப்பு வேப்பம்புண்ணாக்கு கலந்த யூரியா 67.5 கிலோ தழைச்சத்து/ எக் ரூ.27.5 கிலோ வேப்பம்புண்ணாக்கினை நடவு செய்த 30, 60 மற்றும் 90 நாட்களில் இட வேண்டும். குறிப்பு: வேப்பம்புண்ணாக்கு கலத்தல் தேவையான அளவு வேப்பம்புண்ணாக்கினைப் பொடி செய்து அதனை யூரியா உரத்துடன் நன்கு கலந்து 24 மணி நேரத்திற்கு வைத்து பின்னர் உபயோகிக்கலாம். இதன் மூலம் 75 கி தழைச்சத்து/எக் மிச்சமாகிறது. அசோஸ்பைரில்லம் 12 பொட்டலம் (2400 கிராம்/ எக்) அசோஸ்பைரில்லம் அல்லது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நுண்ணுயிர் கலவை எண் 1 உடன் 25 கிலோ தொழு உரம் மற்றும் 25 கிலோ மண் கலந்து நடவு செய்த 30வது நாள் கரும்புப் பயிர் குத்துக்களுக்கு அருகே இட வேண்டும். இதே போல் கரும்பு நட்ட 60வது மற்றும் 90வது நாட்களில் இதே அளவில் இடுதல் வேண்டும். (கிணற்று நீர்ப்பாசனமுடைய இடங்களுக்கு) தொடராக இடுதல் கரும்புப் பயிர் வரிசைக்கு பக்கவாட்டில் களைக் கொத்தி கொண்டு சுமார் 5 செ.மீ. ஆழசால் அமைத்து அதில் உரங்களை தொடராக இட்டு பின்னர் மண் கொண்டு மூட வேண்டும். ஆழ்துளை முறையில் இடுதல் 255 கிலோ தழைச்சத்தினை யூரியா மற்றும் பொட்டாஷ் சேர்த்து 15 செ.மீ. ஆழத்தில் கரும்புப் பயிரின் ஒவ்வொரு குத்துக்கு அருகே 20 கிலோ தழைச்சத்தினை இடுவதன் மூலம் கரும்பின் மகசூல் பாதிக்காத வகையில் சேமிக்கலாம். நுண்ணூட்டச்சத்து உரங்கள்:
பொதுவான நுண்ணூட்டச்சத்து கலவை: கரும்பிற்கு எக்டருக்கு 50 கிலோ நுண்ணூட்டச்சத்துக் கலவையை அளிக்க வேண்டும். நுண்ணூட்டச்சத்துக் கலவை 20 கிலோ ஃபெரோஸ் சல்பேட், 10 கிலோ மாங்கனீசு சல்பேட், 10 கிலோ துத்தநாக சல்பேட், 100 கிலோ மக்கிய தொழுவுரத்துடன் கலந்த 5 கிலோ போராக்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவை நடவிற்கு முன்னர் மண்ணில் அளிக்க பரிந்துரைக்கப்படுகிறது. நுண்ணூட்டச்சத்து மற்றும் பேரூட்டச்சத்தின் பரிந்துரைக்கப்பட்ட அளவு பேரூட்டச்சத்து
கரும்பிற்கான உயிர் உரம் அசோஸ்பைரில்லம் என்பது கரும்பு வேர்களுக்கு ஊட்டமளிக்கும் பொதுவான தழைச்சத்தாகும் மற்றும் வருடத்திற்கு ஒரு ஏக்கருக்கு 50 முதல் 75 கிலோ வளிமண்டல தழைச்சத்தை நிவர்த்தி செய்கிறது. தற்சமயம் பயிரில் வாழும் பாக்டீரியம் (குலுகன்அசிடோபேக்டர் டைஅசோட்ராபிகஸ்) கரும்பில் அசோஸ்பைரில்லமை விட அதிகமாக தழைச்சத்தை நிலை நிறுத்துகிறது. இவை கரும்பு பயிர் முழுவதிற்கும் தழைச்சத்தை எடுத்துச் செல்கிறது மற்றும் தழைச்சத்தின் அளவை அதிகரிக்கிறது. மண்ணில் பாஸ்பேட், இரும்பு மற்றும் துத்தநாக சத்தை வேர் வரை கொண்டு செல்கிறது. இது பயிர் வளர்ச்சியை அதிகரிக்கிறது மற்றும் கரும்பின் மகசூலையும் சாறில் இனிப்புத் தன்மையையும் அதிகரிக்கிறது. இது அசோஸ்பைரில்லத்தைவிட அதிக செயல்திறன் வாய்ந்தது. த.வே.ப.கழக பயோபெர்ட் -1 பாஸ்போபாக்டீரியாவை பாஸ்பரஸ் கரைப்பானாக கரும்பு பயிருக்கு பரிந்துரைக்கப்படுகிறது. குலுகன்அசிடோபேக்டர் டைஅசோட்ராபிகஸ் கொண்டு கரணை நேர்த்தி செய்தல் கரணைகளை நடுவதற்கு முன் எக்டருக்கு 10 பாக்கெட் (2 கிலோ) குலுகன்அசிடோபேக்டர் டைஅசோட்ராபிகஸை 250 லிட்டர் தண்ணீரில் கலந்து நேர்த்தி செய்ய வேண்டும். குலுகன்அசிடோபேக்டர் டைஅசோட்ராபிகஸ் கொண்டு அடியுரமிடுதல் எக்டருக்கு 12 பாக்கெட் (2.4 கிலோ) விதைத்த 30, 50 மற்றும் 90-ம் நாள் நீர்ப்பாய்ச்சிய நிலையில் அடியுரமாக அளிக்க வேண்டும். அதே முறையில் பாஸ்போ பாக்டீரியா அளித்தல்
மறுதாம்புப் பயிர் நிர்வாகம்
விதை நாற்றங்கால்
Updated on : December 2013 |
|
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2013 | |