உர நிர்வாகம்
|
||||||||||||||||||||||||||
சூரியகாந்தி ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
நுண்ணுயிர் உரம் உயிர் உரம் மண்ணில் இடுதல் 10 பாக் (2000 கிராம் / ஹெ) அசோஸ்பைரில்லம் மற்றும் 10 பாக் (2000 கிராம் / ஹெ) பாஸ்போபாக்டீரியம் அல்லது 20 பாக் அசோபாஸ் (4000 கிராம், ஹெ) உடன் 25 கி.தொழுஉரம் மற்றும் நுண்ணூட்டம் இடுதல் 12.5 கிலோ நுண்ணூட்டக் கலவையை 40 கிலோ மணலுடன் கலந்து விதைக்கு முன் சாலில் இட்டு பின்னர் விதைப்பு செய்ய வேண்டும். மாங்கனீசு பற்றாக்குறை உள்ள நிலத்திற்கு 0.5% கரைசலை விதைத்த 30, 40 மற்றும் 50ஆம் நாட்களில் தெளிக்க வேண்டும். கந்தக உரமிடுதல் அமோனியம் சல்பேட் அல்லது சிங்கிள் சூப்பர் சல்பேட் மூலம் எக்டருக்கு 20 கிலோ கந்தகத்தை இட வேண்டும் அல்லது எக்டருக்கு 200 கிலோ ஜிப்சத்தை அடியுரமாக இட வேண்டும். போரான் தெளிப்பு பூக்கொண்டைகளில் வெளிவட்ட மஞ்சள் பூக்கள் மலர ஆரம்பிக்கும் சமயத்தில் வெண்காரத்தை (போரான்) 0.2 (2கி.லிட்.தண்ணீர்) கலந்து பூக்கொண்டைகள் நனையுமாறு தெளிக்கவும், இது மணிகள் நன்றாக பிடிக்க உதவும். விதை உற்பத்தி உரங்கள்
இலைத் தெளிப்பு விதை உருவாவதை அதிகரிக்க 0.5 % போராக்ஸை பூ விரியும் பருவத்தில் தெளிக்க வேண்டும். Updated on : December 2013 |
||||||||||||||||||||||||||
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2013 | ||||||||||||||||||||||||||