ஆக்சின்
முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட தாவர ஹார்மோன்கள் ஆக்சின், தொடக்கத்தில் மனித சிறுநீரிலிருந்து ஆக்சின் பிரித்தெடுக்கப்பட்டது. பொதுவாக இன்டோல் அசிடிக் அமிலத்திற்கும், ஆக்சின்போன்ற அமைப்புடைய, வளர்ச்சியை ஒழுங்குபடுத்தும் இயற்கையான மற்றும் செயற்கையான பொருட்களுக்கும் ஆக்சின் என்ற பெயர் கொடுக்கப்பட்டது. பொதுவாக, தாவரங்களின் தண்டு, வேர் மற்றும் வளர் நுனிகளில் உற்பத்தியாகி தாவரத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன. ஐறறமற்றும் (பினைல் அசிடிக் அமிலம்) ஆகியவை இயற்கை ஆக்சின்கள் எனப்படும். செயற்கை ஆக்சின்கள் ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கப்படுபவையாகும். இவை தாவர வளர்ச்சி ஒழுங்கு படுத்திகள் எனப்படும். எ.கா.நாப்தலீன் அசிடிக் டைகுளோரோ பினாக்சி அசிடிக் அமிலம்.
ஆக்சினுடைய வாழ்வியல் விளைவுகள்
- தண்டு மற்றும் முளைக்குருத்து ஆகியவை நீண்டு வளர்வதில் ஆக்சின்கள் பங்கு கொள்கின்றன. தண்டில் உள்ள செல்களை, குறிப்பாக நுனி ஆக்குத்திசுவுக்குக்கீழே உள்ள செல்களை இது நீட்சியடையச் செய்கிறது.
- உயரமான தாவரத்தில் அதன் நுனிமொட்டு இருக்கும்போது, பக்கவாட்டு மொட்டுகளின் வளர்ச்சி ஆக்சினால் தடை செய்யப்படுகிறது.
- நுனிமொட்டானது அது உற்பத்தி செய்யும் ஆக்சின் மூலம் பக்கமொட்டின் வளர்ச்சியைத்ததடை செய்வது நுனி ஆதிக்கம் அல்லது முனை ஆதிக்கம் எனப்படும். நுனிவளர்ச்சியைத் àண்டும் ஆக்சின், கீழே இறங்கும் போது, கீழ்பகுதிமொட்டின் தடுத்து நிறுத்துகிறது.
- கேம்பியத்தில் செல்பகுப்பைத் துவக்கி ஊக்குவிப்பது ஆக்சினாகும். சல்பகுப்பை ஊக்குவிக்கும் பண்பு ஆக்சினுக்கு உள்ளதால், திசுவளர்ப்பிலும், காலஸ் திசுவைத் தோற்றுவிப்பதிலும் ஆக்சின் பயன்படுத்தப்படுகிறது.
- ஆக்சின் அளவு மிகவும் குறைவாக இருக்கும்போது மிக மிக நுண்ணிய செறிவில், வேரின் வளர்ச்சி ஊக்கப்படுத்தப்படுகிறது. அதன் செறிவு அதிகமாக இருப்பின் எப்போதும் வேரின் வளர்ச்சி தடைசெய்யப்படுகிறது.
- இலைகளும், கனிகளும் முதிர்வடைந்தபின் தாவரத்திலிருந்து உதிர்ந்து விடுகின்றன. இது பிரிதல் எனப்படும் இதை ஆக்சின் தடைசெய்கிறது.
- தக்காளி, ஆப்பிள் தாவரங்களில் மலர்கள் மீது ஆக்சினை தெளிந்து விதையிலாக்கனிகள் உற்பத்தி செய்யப்படுத்தப்படுகிறது.
 |

|
 |
Preventing fruit abscission |
Tissue culture: Callus growth and Shoot multiplication |
|