| ||||||
தாவர ஊட்டச்சத்து :: தாவர வளர்ச்சி ஊக்கிகள்
|
||||||
எத்திலின் எத்திலின் என்பது எளிமையானதொரு வாயு ஹார்மோனாகும். இது மிகவும் நுண்ணிய அளவிலேயே இருக்கிறது. முதுமை நிலையை அடையும் திசுக்களால் அதிக அளவில் எத்திலின் உற்பத்திசெய்யப்பட்டு, அது இயற்கையான தாவர வளர்ச்சி ஹார்மோன்கள் செயல்படுகிறது. எத்தீலினுடைய வாழ்வியல் விளைவுகள் தண்டு மற்றும் வேர் ஆகியவற்றின் நீள்வாட்ட வளர்ச்சியை எத்திலின் தடைசெய்கிறது. அதே சமயத்தில் திசுவானது குறுக்குவாட்டத்தில் விரிவடைவதால், தாவரத்தின் பாகங்கள் தடிப்புறுதல் போன்ற செயல்களை துண்டுகிறது. வேர்கள் தரைநோக்கி வளைந்து வளர்வதை எத்திலின் ஊக்குவிக்கிறது. இது பட்டாணி நாற்றுக்களில். பக்கவாட்டு மொட்டுக்களின் வளர்ச்சியைத் தடைசெய்கிறது. கனிகள் பழுப்பதில் எத்திலின் பங்காற்றுகிறது. இது இலைகள், மலர்கள் மற்றும் கனிகளில் பிரியும் பகுதி உருவாவதை ஊக்கப்படுத்துகிறது. இதனால் இவை முதிர்ச்சியுறும் முன்னரே உதிர்ந்தவிடுகின்றன. பைன் ஆப்பிள் மற்றும் மா ஆகியவற்றில் எத்தலின் âத்தலைத் துண்டுகிறது. தாவரத் துண்டுப்பதியன்களில் வேர்கள் உண்டாதல், பக்கவாட்டு வேர்கள் உண்டாதல் மற்றும் வேர்த்àவிகளின் வளர்ச்சி ஆகியவற்றையும் எத்திலின் துண்டுகிறது. மொட்டுக்கள் மற்றும் விதைகளின் உறக்க காலத்தை எத்திலின் நீக்குகிறது.
|
||||||
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014 | ||||||