| ||||||
தாவர ஊட்டச்சத்து :: தாவர வளர்ச்சி ஊக்கிகள் | ||||||
ஜிப்ரலின்கள் ஜப்பானைச் சார்ந்த குருசோவா என்பவரால் ஜிப்ரலின் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. அவருடைய வயலில் நெல் நாற்றுக்கள் சில, மற்றவற்றைக் காட்டிலும் மிகவும் நெட்டையாக வளர்ந்திருப்பதைக் கண்டார். இது குறித்து மேலும் ஆய்ந்தபோது. அத்தகைய நெட்டைப்பயிர்களின் கணுவிடைப் பகுதிகள் இயல்புக்குமாறாக மிகவும் நீண்டிருப்பதைக் கண்டறிந்தார். இந்த வகை கணுவிடைப்பகுதி நீட்சி பக்கானே அல்லது நெல்லின் கோமாளித்தனநோய் ----- என அழைக்கப்படுகிறது. இதன் பொருளால் ஏற்படுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பொருளானது âஞ்சையிலிருந்து வெற்றிகரமாக தனியே பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த தாவரஹார்மோன்கள் அனைத்துப் பிரிவு தாவரங்களிலும் உள்ளன. ஜிப்ரலின்களின் வாழ்வியல் விளைவுகள் அசாதாரணமானவகையில் தண்டு நீட்சி ஜிப்ரலின்களால் ஏற்படுகிறது. செல்பிரிதல் மற்றும் செல் நீட்சி ஆகியவற்றால் தண்டு நீள்கிறது. இவற்றை ஜிப்ரலிக் அமிலம் ஜிப்ரலின்கள் வியப்âட்டும் விளைவுகளின் மிகமுக்கியமானது மரபியல் ரீதியாக குட்டையாக இருக்கும் தாவரங்களின் குட்டைத் தன்மையை நீக்குவதாகும். எடுத்துக்காட்டாக, சர்க்கரை பீட். தாவரத்தில் கணு இடைப்பகுதிகள் மிகவும் குட்டையாக இருப்பதால் இலைகள் நெருக்கமாக வடிவில் அமைந்திருக்கும். ஜிப்ரலிக் அமிலத்தைப் பயன்படுத்திய பின்னர், கணுவிடைப்பகுதிகள் குறிப்பிடத்தக்க வகையில் நீட்சியுற்று இயல்பான நிலையை தாவரம் அடைகிறது. நெருங்கிய இலை அடுக்கம் கொண்ட தாவரங்களில் கணுவிடைப்பகுதிகள் அதிக வளர்ச்சியை அடைகின்றன. இந்த வகையில் திடீரென தண்டு நீள்வதும் அதைத்தொடர்ந்து மலர்தல் நிகழ்வதும் போல்டிங் என அழைக்கப்படுகிறது. தாவரமானது குட்டையான வளர்ச்சி நிலையில் இருக்கும்போது,அதில் ஜிப்ரலிக் அமிலத்தைப் பயன்படுத்தும்போது தாவரத்தின் வளர்ச்சி மற்றும் மலர்தல் ஊக்குவிக்கப்படுகின்றன. பெரும்பாலான ஈராண்டுத் தாவரங்களில், இரண்டாவது ஆண்டு வளர்ச்சிக் காலத்தில் தான் மலர்தல் நடைபெறுகிறது. மலர்கள் உருவாவதற்கு, இத்தாவரங்கள் குளிர்ப்பதனத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும். ஜிப்ரலின்களைப் பயன்படுத்தினால் இந்தத் தாவரங்கள், குறைந்த வெப்ப நிலைக்கு உட்படுதத்ப்படாமலேயே, முதலாம் ஆண்டிலேயே மலர்களைத் தோற்றுவிக்கும். பல தாவரங்களில் கருவுறுதல் நிகழாமலேயே, ஜிப்ரலின்களைப் பயன்படுத்தி விதையிலாக்கனிகளைப் பெறலாம், எ.கா. தக்காளி, ஆப்பிள், வெள்ளரி முதலியவை. ஒயினால் பாதிப்படையும் விதைகளை, ஜிப்ரலின்களைக்கொண்டு முழு இருளியலேயே முளைக்கும்படி செய்யலாம், எ.கா. பார்லி, உருளைக்கிழங்கில் வளர்வடக்கத்தை ஜிப்ரலின் நீக்குகிறது.
|
||||||
©தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014 | ||||||