Agriculture
நீர் பாசனத்தின் ஆதாரமும் அதன் தேவையும்


தண்ணீரின் ஆதாரம் மற்றும் தேவை

மழைத் தண்ணீரின் முதன்மை ஆதாரம், ஆனால் மழை வருடம் முழுவதும் வருடந்தோறும் பொழிவதில்லை. எனவே மழை நீரை அணைகள் மூலம் சேமித்துப் பயின் தேவையேற்பின் பாசனத்திற்க உபயோகிக்கலாம்.


அ. மேல்மட்ட நீர் :

மேல் மட்ட நீரானது ஏரி, குளம் மற்றும் அணைகளிலிருந்து வரும் நீராகும்.

ஆ. நிலத்தடி நீர் :

நீர்ப்பாசனத்தின் குறிக்கோள்கள்

  • நுண்ணூட்டத்திற்கும் மற்றும் பயிரின் வளர்ச்சிக்கும் நீர்ப்பாசனம் தேவைப்படுகிறது.
  • மண்ணில் உள்ள அங்ககப் பொருள்களின் மக்கும் நன்மையை துரிதப்படுத்துவதற்கும், மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் செயல்திறனை துரிதப்படுத்துவதற்கும் நீர்ப்பாசனம் இன்றியமையாததாகும்.
  • பயிரின் வறட்சி நிலையை அகற்றுவதற்கும்
  • தீமை விளைவிக்கும் உப்பினை நீர்க்கரையோட்டம் மூலம் அகற்றவதற்கும்.
  • மண்ணிலுள்ள தீமை விளைவிக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கும்
  • மண்ணின் ஈரப்பதம் மற்றும் வெப்பநிலையை நிலைப்படுத்துவதற்கும்
  • தரிசு நிலத்தினை பயன்படுத்துவதற்கும்.
  • மண்ணை உழுவதற்கு ஏதுவான சூழ்நிலை ஏற்படுத்துவதற்கு

நீர்ப்பாசனத்தின் தேவை

நிலையில்லாத பருவமழை

இந்தியாவில் 80 சதவிகிததம் பருவ காலங்களில் பொழிகிறது. ஆனால் பருவ மழை நிலையில்லாததாக உள்ளது. எனவே பயிர்களின் வளர்ச்சிக்கு நீர்ப்பாசனம் இன்றியமையாததாகும்.

மழை தொடர்ச்சியின்மை

மழை தொடர்ச்சியின்மை காரணமாக பயிர்களுக்கு இடைப்பாசனம் தேவைப்படுகிறது.

அதிக மகசூல் தரும் பயிர்களுக்கு

அதிக மகசூல் தரும் பயிர்களுக்கு அதிக நீர் தேவைப்படுகிறது எனவே நீர்ப்பாசனம் இன்றியமையாததாகும்.

மண்ணின் நீர் பிடிப்புத்திறன்

  • களிமண் - அதிக  நீர் பிடிப்புத்திறனுடையது.
  • மணற்பாங்கான மண் - குறைந்த நீர்ப்பிடிப்பு திறன் கொண்டது. எனவே அதிக நீர்ப்பாசனத் தேவை ஏற்படுகிறது
 
 
Fodder Cholam