Agriculture
சாதகமற்ற சூழ்நிலை :: களர்/உவர் தன்மை

பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூலைப் பாதிப்பதில் இந்த உவர்த்தன்மை மிகப் பெரும் பங்கு வகிக்கின்றது. அதிகப்படியான உப்புக்கள் மண்ணில் இருக்கும் பொழுது, தாவரங்களுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. எனவே பயிர்களின் வளர்ச்சி தடைபடுகிறது.  

அதிகப்படியான கால்சியம், மக்னீசயம், சோடியம் மற்றும் சல்பேட், நைட்ரேட், கார்பனேட் மற்றும் கை கார்பனேட், குளோரின் ஆகிய தாதுக்கள் மண்ணில் படியும் போது, மண் உவர்த்தன்மையை அடைகிறது.      

சோடியத்தின் அளவு நிலத்தில் அதிக அளவு காணப்பட்டால், அவ்வகை மண் உவர் மண் என்றழைக்கப்படுகிறது.

காரணங்கள்

  • பாசன நீர்
  • மண் வகை

வகைகள்

உவர் மண்

  • மின் கடத்தும் திறன் (EC) 4 டெசி சீமன் என்ற அளவினை மிஞ்சிக் காணப்படும்.
  • மண்ணின் கார அமில நிலை (pH) 8.5 க்கு மிகாமவல் அமைந்திருக்கும்.
  • மண்ணின் சோடிய அயனிகளின் பரிமாற்றத்தின் அளவ 15 விழுக்காடுகளுக்கு கீழ் இருக்கும்.

களர் மண்

மின் கடத்தும் திறன் (EC) 4 டெசி சீமனுக்கு குறைவாக இருக்கும். ஆனால் அமில காரத்தன்மை (pH) 8.5 க்கு மேல் இருக்கும். மாறும் தன்மையுள்ள சோடியம் (Esp) 15 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கும்.

உவர் களர் மண்      

நீரில் கரையும் உப்புக்கள் அதிகமாகவும், சோடியம் அயனிகளின் பரிமாற்றுத் திறன் 15 சதவீதத்திற்கு அதிகமாகவும் இருக்கும்.

 
Fodder Cholam