Agriculture
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு
இளர்/உலர்தன்மை பாதிப்பு

நிலத்தின் உவர்த் தன்மையால் பயிர்களின் ஏற்படும் பாதிப்புக்கள்

  • உப்பு அழுத்தம் (அ) நீர் பற்றாக்குறையினால் ஏற்படும் விளைவு
  • உப்பு அல்லது அதிகப்படியான அயனிகளினால் ஏற்படும் விளைவு

பயிர்களின் வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்புகள்

1. விதை முளைத்தல்

  • நீர் உறிஞ்சும் தன்மை பாதிப்படைவதால், நீர் விதையினுள் நுழைவது தடுக்கப்படுகிறது.
  • சில வகையான உப்புக்கள் விதையின் நீர் மற்றும்  நாற்றுக்களை கடுமையாக பாதிக்கிறது.
  • உப்புத்தன்மையானது, பயிர்களினுடையது நொதிகளின் (என்சைம்) செயல்கள், விதைகளிலுள்ள கரையும் நைட்ரஜன் போன்றவற்றை பாதிக்கிறது. நியூக்ளிக் அமிலங்கள், ஆர்என்ஏஸ் என்சைம் மற்றும் பிற என்சைம்களின் செயல்திறனை பாதிக்கிறது.

2. தழைப்பருவம்

  • இலைத்துளைகள் மூடிவிடுவதால், கார்பன்டைஆக்ஸைடின் உட்கிரிகை மற்றும் நீராவிப் போக்கின் தன்மை பாதிப்படைகிறது. இலையின் வளர்ச்சித் திறன் தடைபடுகிறது. ஒளிச்சேர்க்கை பாதிக்கப்பட்டு, சுவாசச் செயல் துரிதப்படுத்துவதால், பயிர்களின் வளர்ச்சி வீதம் மற்றும் எடை பெரிதும் பாதிப்படைகிறது.

3. ஒளிச்சேர்க்கை

  • அதிகப்படியான சோடியம் மற்றும் குளோரிக் காணப்படுவதால் ஒளிச்சேர்க்கை பாதிக்கப்படுகிறது.

4. இனப்பெருக்க வளர்ச்சி மற்றும் மகசூல்

       பூக்கும் பருவம் தாமதமாகிறது. புரதம், அமினோ அமிலங்கள், சர்க்கரை, மாவுப் பொருள் போன்றவற்றின் தன்மை மாறுபாடு அடைகின்றது. எனவே பயிரின் வேதிச் செயல்கள் பாதிக்கப்படுவதால், இனப்பெருக்க நிலை பாதிப்படைவதோடு மகசூலும் குறைகிறது.

உவர்த்தன்மைக்கேற்ப பயிரின் வகைகள்

ஹாலோபைட்ஸ்

  • அதிக அளவு உவர்த்தன்மை இருந்தாலும், பயிர்கள் நன்கு வளரும்.

கிளைக்கோபைட்ஸ்

  • இவ்வகைத் தாவரங்கள் உவர்த்தன்மை கொண்ட நிலத்தில் வளர இயலாது.

 
Fodder Cholam