இளர்/உலர்தன்மை பாதிப்பு
|
இளர்/உலர்த் தன்மையால் பயிர்களில் ஏற்படும் இரண்டு முக்கியமான விளைவுகள் 1. சவ்வூடு பரவல் விளைவு அல்லது நீர் பற்றாக்குறை பாதிப்பு
பயிரின் நீர் உறிஞ்சும் சக்தியைக் குறைப்பதால் பயிர்கள் வளர்ச்சிக் குன்றிக் காணப்படும். இந்த விளைவு இளர் உலர்த் தன்மையால் ஏற்படும். 2. உப்பினால் ஏற்படும் விளைவு அல்லது இரும்பு சத்து அதிகரிப்பால் ஏற்படும் விளைவு
பயிர்களில் உப்புகள் உள்ளே நுழைவதால், அதனுடைய சுவாசப்பகுதி பாதிக்கும். இதனால் இலைகளின் பாதிப்பு ஏற்பட்டு, வளர்ச்சிக் குன்றும். 1. முளைப்பு திறன்
இளர் / உலர் தன்மையால் முளைப்புத் திறன் மூன்று விதத்தில் பாதிக்கப்படும். 2. தாவர வளர்ச்சி
மண் மற்றும் வேர்ப் பகுதிகளில் அதிகளவு அயன்கள் இருப்பதால் பயிர்களில் நீரை உறிஞ்ச முடியாது. ஆகவே பயிர்களில் நீர்ப் பற்றாக்குறை நிலைமை தோன்றும். இதையே வினையியல் வறட்சி என்கிறோம். 3. ஒளிச்சேர்க்கை
பயிரில் சோடியம் மற்றும் குளோரினின் அளவு அதிகரிப்பதால், ஒளிச் சேர்க்கை தடுக்கப்படுகிறது. ஒளிச் சேர்க்கை எலக்ட்ரான் பரிமாற்றம் உப்புகளுக்கு சாதகமாக இல்லாமல் இருந்தாலும், கார்பன் வளர்ச்சிதை மாற்றம் அல்லது ஒளிச்சேர்க்கையும் பாதிக்கப்படும். சோடியம் குளோரைடு இருப்பதால் ஒளிச்சேர்க்கை நொதி அல்லது கார்பன் சேர்பிற்கான நொதியும் மிகவும் பாதிக்கப்படும். 4. இனப்பெருக்க வளர்ச்சி மற்றும் விளைச்சல்
இளர் / உலர் தன்மை நிலையில், பூப்பது தாமதமாகும். இனப்பெருக்க அமைப்புகளான, பூக்களின் எண்ணிக்கை / கதிரின் எண்ணிக்கை அளவு குறையும். உப்புகளின் படிவு அதிகம் இருப்பதால், வளர்சிதை மாற்றங்களான புரோடீன் இணைப்பு, அமினோ அமிலங்கள், சர்க்கரை, ஸ்டார்ச், மற்றும் இதர அங்ககப் பொருட்களிலும் மாற்றம் ஏற்படும். இயல்பான வளர்சிதை மாற்றத்தில் இடர்பாடு ஏற்படுவதால் வளர்சிதை மாற்ற காரணிகள் உற்பத்தி செய்யப்படும் இடத்திலிருந்து இனப்பெருக்க வளர்ச்சிக்கான இடத்திற்கு செல்வதற்கான போக்குவரத்து தடைபடும். இதனால் பயிர்விளைச்சல் மிக அதிகஅளவு குறையும். ஊட்டச்சத்துக்களின் அளவு சரிசமமாக இல்லாமல் இருந்தால், ஹார்மோன் சோர்வு தடைபடும். இதனால் பயிர் உற்பத்தியின் அளவும், தரமும் குறையும். இளர் / உவர் தன்மைக்கேற்ற பயிரின் அமைப்புகள் உப்புகளின் அதிக அடர்த்தியைப் பொறுத்து, 2 உபரிய பகுதிகளாக பயிர்கள் பிரிக்கப்பட்டுள்ளது.
1. ஹாலோபைட் அதிக இளர் / உலர் தன்மை உள்ள நிலைகளில் வளரக்கூடிய பயிர்களை உப்புத் தன்மையைத் தாங்கக் கூடிய பயிர்கள் என்றழைக்கிறோம். அவை இளர் / உலர் தன்மையை இயற்கையாகவே கொண்டவை. 2.கிளைக்கோபைட்டுகள் அல்லது ஹாலோபைட் அல்லாதவை
இளர் / உலர் தன்மை உள்ள நிலங்களில் வளர முடியாதவை மற்றும் மிகவும் பாதிப்புக்குள்ளாபவை. இவற்றையே கிளைக்கோபைட்டுகள் என்கிறார்கள். இதனால் இலையின் நிறம் மாறும். உலர் எடை குறையும். |
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014 |