உவர்த் தன்மையைத் தாங்கும் திறன் கொண்ட தாவரங்கள்
உவர்த்தன்மையைத் தவிர்த்து வாழ்பவை
- இவ்வகைத் தாவரங்கள், உப்புக்களை நிலைநிறுத்தாமல், அவற்றைத் தவிர்த்து வளர்கின்றன.
உப்புக்களை உட்புகாமல் தடுத்தல்
- சில வகைத் தாவரங்கள், உப்புக்களை வேரின் சவ்வினுள் புக விடாமல் தடுக்கிறது.
எ.கா சிகப்பு சதுப்பு நிலக்காட்டு மரங்கள்
உப்புக்களை வெளியேற்றுதல்
- சில வகைத் தாவரங்கள் உப்புக்களை இலைகளிலுள்ள பைகளில் சேகரித்து பின்பு வெளியேற்றுகிறது.
எ.கா ஆர்ட்ரிப்ளெக்ஸ், டேமரிக்ஸ்
|
|
|
Chenopodium quinoa salt glands |
Salt glands of white mangroove |
Close-up of epidermal bladder cells along the stems of Mesembryanthemum |
உப்பின் அடர்த்தியைக் குறைத்தல்
- சிலவகைத் தாவரங்கள் அதிக நீர்ச்சத்துடன் காணப்படும். இதனால் உப்புக்களின் அடர்த்தி நிலை குறைக்கப்படுகிறது.
கம்கார்ட்மென்டேசன் - அயனிகள்
- உப்புக்கள் / அயனிகள் அதிக அளவில் தண்டை விட வேரில் காணப்படுகிறது. இது போல் செல்லில், சைட்டோ பிளாசத்தை விட செல் வெற்றிடத்தில் உப்புக்கள் அளவு சேமிக்கப்படுவதால், தாவரம் உவர்த்தன்மையை தாங்கி வளர்கிறது.
உவர் நிலையைத் தாங்கி வளரும் செயல் திறன்
- சவ்வூடு அழுத்த சமநிலை
- அப்சிசிக் அமிலம் உற்பத்தியாதல்
உவர் நிலையைத் தாங்கி வளரும் தாவரங்கள்
தானியங்கள் மற்றும் சிறு தானியங்கள்
- சோளம், கோதுமை, ஓட்ஸ், பார்லி முதலியன பயிர்களின் நாற்றுக்கள் பொதுவாக உவர்த்தன்மையால் மிகவும் பாதிக்கப்படும். பயிர்களின் தூர்களின் எண்ணிக்கை மற்றும் இனப்பெருக்கம் தொடர்பான பாகங்கள் மற்றும் பகுதிகள் பாதிக்கப்படுகிறது.
காய்கறிப் பயிர்கள்
- அஸ்பகராகஸ் மற்றும் ரெட் பீட் போன்றவை ஓரளவு உவர்த் தன்மையைத் தாங்கி வளரும். பெரும்பாலான காய்கறிப்பயிர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
பழப்பயிர்கள்
- சோடியம், குளோரின் போன்ற அயனிகள் இலைகளில் அதிகம் காணப்பட்டால், பழப்பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூல் பாதிக்கப்படுகிறது.
- குளோரின் தொடர்ந்து அதிக அளவில் காணப்பட்டால், இலைகள் உதிர்தல், தண்டு பின்னோக்கி கருகல் மற்றும் தீவிரமான நிலையில் செடிகள் அழிந்து விடுதல் போன்ற சூழ்நிலை ஏற்படும்.
மரங்கள், பூக்கள் மற்றும் அலங்காரத் தாவரங்கள்
- சாமந்தி, கார்னேசன் போன்றவை உவர் நிலையை மிதமாகத் தாங்கி வளரும தன்மை கொண்டவை.
|