Agriculture
வேளாண்மைத் துறை

 

வேளாண்மைக்கென ஒரு தனித்துறை இந்திய பஞ்சம் ஆணையத்தின் (1880) பரிந்துறையின் பேரில் 1882 –ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 1904 –ஆம் ஆண்டு வேளாண்மைக்கென தனி இயக்குநருடன் சில முக்கிய அலுவலர்களும் நியமிக்கப்பட்டனர். 1905 – ஆம் ஆண்டு வேளாண்மைக் கல்லூரி பொதுத்துறை இயக்குநரகத்திலிருந்து வேளாண்மைத்துறையின் கீழ் மாற்றப்பட்டது.


மாநில, மாவட்ட, தாலுக்கா வாரியாக வேளாண் அமைப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டது. அடிப்படை ஆராய்ச்சி மற்றும் கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் 1971 – ஆம் ஆண்டு புதிதாக கோவையில் துவங்கப்பட்ட வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டன. 1977 – 78 ல் வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துதல் தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் வேளாண் விற்பனை இயக்குநரகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. இது முதலில் திருச்சியில் தொடங்கப்பட்டு பின் தற்போது சென்னையில் இயங்கி வருகிறது. இதேபோல் 1979 – 80 ஆம் ஆண்டு விதைச் சான்றளித்தல், தோட்டக்கலை மற்றும் மலைத் தோட்டப்பயிர்கள் எனும் இரண்டு பாடவாரியான துறைகள் தனியே உருவாக்கப்பட்டன.


1980 – 81 ல் எண்ணை வித்துக்கள் மற்றும் வேளாண் பொறியியல் துறை எனப்படும் புதிய இரு துறைகள் தோன்றின. 1981 – 82 ல் ஆராய்ச்சி நிலையங்கள், விரிவாக்க செயல்கள், இடுபொருடகள் வழங்கல், தரக்கட்டுப்பாடு, மண் பரிசோதனை போன்ற மாநிலத்தின் பிற துறைகள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டன. 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் எண்ணை வித்துத் துறை வேளாண்மைத் துறையுடன் இணைக்கப்பட்டது.

தகவல்: http://www.agriculture.tn.nic.in/aboutus.html

 
Fodder Cholam