பருத்தி (காசிபியம் இனம்)
பருவம் மற்றும் இரகங்கள்
மாவட்டம் / பருவம் |
இரகங்கள் / கலைபினங்கள் |
இறவை |
குளிர்கால இறவை (ஆகஸ்ட் – செப்டம்பர்) |
கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, திண்டுக்கல், தேனி |
MCU 5, MCU 5 VT, சுவின், TCHB 213*, MCU 12, |
MCU 13, சுரபி |
தர்மபுரி |
MCU 5, TCHB 213*, MCU 12, MCU 13, சுரபி |
சேலம், நாமக்கல் |
MCU 5, சுவின், TCHB 213*, MCU 12, MCU 13, சுரபி |
கடலூர், விழுப்புரம் |
LRA 5166, SVPR 2, SVPR 4, சுரபி, |
கோடைகால – இறவை (பிப்ரவரி – மார்ச்) |
ஈரோடு |
MCU 5, MCU 5 VT, MCU 12, MCU 13, சுரபி |
மதுரை, திண்டுக்கல், தேனி |
MCU 5, MCU 5 VT, SVPR 2, SVPR 4, சுரபி |
இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, |
MCU 5, MCU 5 VT, SVPR 2, SVPR 4, சுரபி |
திருநெல்வேலி, தூத்துக்குடி |
மானாவாரி (செப்டம்பர் – அக்டோபர்) |
மதுரை, திண்டுக்கல், தேனி |
LRA 5166, K11, KC 2, SVPR 2,KC 3 |
இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை |
LRA 5166, K 11, KC 2, SVPR 2,KC 3 |
திருநெல்வேலி, தூத்துக்குடி, தர்மபுரி |
LRA 5166, K 11, KC 2, SVPR 2,KC 3 |
நெல்தரிசு |
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி பகுதிகள், பெரம்பலூர், கரூர், கடலூர் மற்றும் விழுப்புரம் |
MCU 7, SVPR 3, அஞ்சலி |
பருத்தி இரகங்களும் அதன் சிறப்பியல்புகளும்
இரகங்கள் |
தோற்றம் |
பருவம் |
இறவை,மானாவாரி |
மகசூல்,
(கி.ஹெ) |
சிறப்பியல்புகள் |
எம்.சி.யு 5 |
பல இரகங்களை ஒட்டு சேர்த்து உருவாக்கப்பட்ட கம்போடியா பருத்தி |
ஆடி, தை |
இறவை |
1850 |
70ஆம் நெம்பர் நூல் நூற்கக்கூடிய திறன் உடையது. |
எம்.சி.யு 5 வீடி |
எம்.சி.யு 5லிருந்து மறுதேர்வு செய்யப்பட்டது. |
ஆவணி - புரட்டாசி, ஆடி, தை. |
இறவை |
2000 |
வெர்ட்சிலியம் வாடல் நோய் எதிர்ப்பு மிக நீண்ட இழை நீளம் |
எம்.சி.யு 7 |
எல் 1143 இஇ – எக்ஸ்ரே கதிர்களைக் கொண்டு சடுதி மாற்றம் செய்யப்பட்டது. |
தை |
நெல்தரிசு |
1330 |
நடுத்தர இழை நீளம் 40ம் நெம்பர் நூல் நூற்க ஏற்றது. கருங்கிளை நோயைத் தாங்கி வளரக்கூடியது. |
எம்.சி.யு 12 |
எல்.ஆர்.ஏ 5166 - எம்.சி.யு 11 ஒட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டது. |
ஆவணி - புரட்டாசி |
இறவை |
2000 |
நீண்ட இலை பருத்தி இரகம், அரவைத் திறன் 34.8, எம்.சி.யு 5 விடக் குறைந்த வயதுடையது. |
எம்.சி.யு 13 |
பல இரகங்களை ஒட்டு சேர்த்து உருவாக்கப்பட்ட கம்போடியா பருத்தி |
ஆவணி - புரட்டாசி
ஆடி, தை |
இறவை |
2200 |
குறைந்த வயது, 50 ஆம் நம்பர் நூற்புத்திறன். |
எல்.ஆர்.ஏ 5166 |
லட்சுமி, ரெபா பி 50, ஏசி 122 ஆகிய மூன்று இரகங்களை சேர்த்து உருவாக்கப்பட்டது. |
ஆவணி - புரட்டாசி
தை, மாசி |
இறவை மானாவாரி |
1800
725 |
நடுத்தர இலை நீளம், 40ஆம் நெம்பர் நூற்புத்திறன், அரவைத்திறன் 36.20 |
சுப்பிரியா |
எம்.சி.யு 5 × சி 1998 |
ஆவணி - புரட்டாசி
ஆடி, தை |
இறவை |
2000 |
வெள்ளை ஈ தாக்குதல் எதிர்ப்புத்திறன் |
அஞ்சலி |
எல்.ஆர்.ஏ 5166 × (கந்வா 2 × ரீபா பி 50) |
தை |
இறவை |
1800 |
குறைந்த உயரம், ஓரளவு அடர்த்தியான சிம்போடியாக்களைக் கொண்டது. |
சுரபி |
எம்.சி.யு வீடி × (எம்.சி.யு × கா மெக்சியானம்) |
ஆவணி - புரட்டாசி |
இறவை |
2200 |
மிக நீண்ட இழைப்பருத்தி, வெர்டிசிலியம் வாடல் நோயைத் தாங்கும் சக்தியைக் கொண்டது. |
சுமங்களா |
சிடபில்யு 134 × ரீபாபி 150 × கந்வா 2 |
புரட்டாசி, தை |
இறவை மானாவாரி |
2000
1200 |
மானாவாரிக்கு ஏற்றது. |
சுருதி |
70இ × ஆர் எஸ்.பி 4 |
புரட்டாசி,
தை |
இறவை |
2500 |
குறைந்த பருவம் |
கே 11 |
(0794 - 1 - டீ × (0794- 1 – டீ × எச் 450) போன்ற இரகங்களை ஒட்டு சேர்த்து உருவாக்கப்பட்டது. |
புரட்டாசி |
மானாவாரி |
1100 |
கருங்கண்ணி இரகம், பூச்சி நோய் எதிர்ப்புத்திறன், சிறந்த இழை நூற்புத்திறன் உடையது. வறட்சியை தாங்கி வளரும் தன்மை. |
சுவின் |
சுஜாதா × எஸ். வின்சென்ட் இரகங்களை ஒட்டு சேர்த்து உருவாக்கப்பட்டது. |
ஆடி |
இறவை |
1020 |
நீண்ட இழைப்பருத்தி 28 சதம் அரவைத்திறன், 100 ஆம் நெம்பர் நூற்புத்திறன். |
டி.சி.எச்.பி 213 |
இருவேறு இன பருத்தி இரகங்களை ஒட்டு சேர்த்து உருவாக்கப்பட்டது. |
ஆடி |
இறவை |
2215 |
அதிக மகசூலும், தரமுள்ள பஞ்சைக் கொண்டது. 165-170 நாட்களில் அறுவடைக்கு வரும். இலைப்புள்ளி நோய்க்கு எதிர்ப்புத்திறன். |
எஸ்விபிஆர் 2 |
டி.எஸ்.டி 22 × ஜே.ஆர் 36 ஒட்டிலிருந்து தேர்வு |
மாசி, புரட்டாசி. |
கோடைக்கால இறவை, குளிர்கால மானாவாரி |
2000 |
150-160 நாட்கள் அரவைத்திறன் 36.4 சதம், நடுத்தர இழை நீளம் |
எஸ்விபிஆர் 3 |
எல்.எச்.900 × 1301 டிடி ஒட்டிலிருந்து தேர்வு |
தை |
நெல் தரிசு |
1800 |
135-140 நாட்கள் அரவைத் திறன் 35.2 சதம் |
கே.சி 2 |
எம்.சி.யு 10 × கே.சி 1 ஒட்டிலிருந்து தேர்வு. |
புரட்டாசி |
மானாவாரி |
1000 |
135-140 நாட்கள் வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை 40ம் நெம்பர் நூல் நூற்கும் திறன். தத்துப்பூச்சியின் தாக்குதலை எதிர்த்து வளரும் தன்மை. |
கே.சி 3 |
கலப்பின வகை
of TKH 97x KC1 |
செப்- அக் |
மானாவாரி |
1080 |
தத்துப்பூச்சியின் தாக்குதலை எதிர்த்து வளரும் தன்மை.
பருத்தி – 26.4 mim, தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கு ஏற்றது.
|
எஸ்.வி.பி.
ஆர் 4 |
கலப்பின வகை MCU 5x S 4727 |
பிப்-மார்ச் செப்- அக் |
பாசனம் மானாவாரி |
1800 |
சிறந்த நார் சத்து கொண்ட உயர்தர மத்திய இலை பருத்தி. 40வது இரக நூல் நூற்பதற்கு தகுந்தது. |
Updated on : 20.11.2013
|