Agriculture
இயற்கை வளங்கள் :: மண்வளம்

மண்வள அட்டை

மண்வள அட்டை என்றால் என்ன?

மண்ணின் தன்மை, பாசன நீர், பயிர் மற்றும் பிற உயிரியல் பண்புகளின் அடிப்படையில் மண்ணின் வளத்தையும் தரத்தையும் இந்த மண்வள அட்டை நிர்ணயிக்கிறது. விவசாயிகள் சொந்த அனுபவத்தையும், அறிவுத்திறனையும் கொண்டு மண்வளத்தைக் கண்காணிக்கவும், மேம்படுத்தவும் இந்த அட்டை ஒரு கருவியாகப் பயன்படுகிறது. காலப்போக்கில் மண்வளத்தில் ஏற்படும் மாற்றங்களையும் அதற்கான மேம்பாட்டு முறைகளையும் இந்த அட்டையில் பதிவு செய்து கொள்ளலாம். ஒரே நபர் இந்த அட்டையை தொடர்ந்து பூர்த்தி செய்து வந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த அட்டையின் மூலம் நிர்ணயிக்கும் மண்வளத்தின் தரம் பெரும்பாலும் விவசாயிகளின் அனுபவத்தைப் பொருத்ததேயன்றி எந்த ஆய்வகப் பரிசோதனையையும் அடிப்படையாகக் கொண்டதல்ல. ஒரு இடத்திலுள்ள மண்ணின் தரத்தினை மற்றொரு இடத்திலுள்ள மண்ணின் தரத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பது இந்த அட்டையின் நோக்கமல்ல. ஆனால், ஒரு மண் எந்த அளவுக்கு பயிர் உற்பத்தித் திறன் கொண்டது என்பதை இந்த அட்டையைக் கொண்டு அறிய முடியும்

மண்வள அட்டையை உபயோகிப்பது எப்படி?

  • மண்வகைகள், வயலின் சரிவு, பயிர் சுழற்சி, உர மேம்பாடு ஆகியவற்றை பொறுத்து ஒரு பண்ணையில் உள்ள நிலங்களை தனித்தனியே பிரித்து ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு அட்டையைப் பயன்படுத்தவும்
  • ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு அல்லது மூன்று பொருத்தமான இடங்களை தேர்வு செய்து மண்ணின் பண்புகளை ஆய்வு செய்யவும்
  • பின் அட்டையில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களின் அடிப்படையில் மண்ணின் தரத்தினை வளமானது, சுமாரான வளம், வளம் குன்றியது என்று தரம் பிரித்து அதற்கான கட்டத்தில் குறியிட்டு நிரப்பவும்
  • மண்ணில் வேறு ஏதாவது குறைபாடுகள் இருப்பின் அவைகளை குறிப்புப் பகுதியில் விபரமாக எழுதவும்

பதிவிறக்கங்கள்:

த.நா.வே.ப.க. மண்வள அட்டை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

த.நா.வே.ப.க. மண் பரிசோதனை அட்டவணை

தமிழ்நாடு அரசு வேளாண் துறை – மண் வள அட்டை -1

தமிழ்நாடு அரசு வேளாண் துறை – மண் வள அட்டை -2

 

 
Fodder Cholam