Agriculture
களை மேலாண்மை

இரசாயன முறை

வேதிப்பொருட்களைப் பயன்படுத்தி களைகளை அழிப்பது களைக்கொல்லியாகும்.

அளிப்பு முறை
மண் அளிப்பு                     

தழை அளிப்பு

மண் அளிப்பு:

மண் மேற்பரப்பு அளிப்பு:

களைக் கொல்லிகளை மண் மேற்பரப்பில் ஒரே மாதிரியாக தெளிக்க வேண்டும். குறைவான கரை திறன் உள்ளதால் அளிக்கப்பட்ட களைக் கொல்லிகள் மண்ணின் சில சென்டிமீட்டர் ஆழம் வரை மட்டுமே போகிறது. மேற்பரப்பில் முளைக்கும் களைகள் களைக்கொல்லிகளை உறிஞ்சுவதால் மடிகின்றன.
Eg. டிரையாசன்ஸ், யூரியாஸ், அனிலைட்.

Agriculture Weed Management

மண் பரப்புதல்:

சில களைக் கொல்லிகள் மண்ணின் மேற்பரப்பில் தெளித்து மண்ணுடன் பண்படுத்துதல் முறை அல்லது பாசன முறை மூலம் பரப்ப வேண்டும்.

ஆவியாகும் திறனுள்ள களைக் கொல்லிகளான அனிலைன் மற்றும் கார்பமேட்

மண் அடிப்பரப்பில் அளித்தல்டு பல்லாண்டு களைகளான சைப்ரஸ் ரொட்டான்டஸ் மற்றும் சைனாடான் டாக்லைன் கட்டுப்படுத்த மண்ணின் அடிப்பரப்புக்கு போகக் கூடிய களைக் கொல்லியை தெளிக்க வேண்டும்

வேரைச் சுற்றி அளித்தல்: களைக்கொல்லிகளை பயிரின் வேர்ப்பகுதியில் தெளிக்க வேண்டும். பயிர் வரிசையின் இடையில் உள்ள களைகளை இடை உழவு அல்லது வேரைச் சுற்றி அளிக்க வேண்டும்.

எங்கெல்லாம் ஆட்கள் அதிகம் தேவைப்படுகிறார்களோ அங்கு இந்த முறை பயன்படுகிறது. இடை உழவு செய்யும் இடங்களிலும் இந்த முறை பயன்படுகிறது.

தழை அளிப்பு:

பொதுவான அளிப்பு: முழு இலைப்பகுதியிலும் படுமாறு தெளிக்க வேண்டும். தேர்ந்தெடுத்த களைக்கொல்லிகள் இந்த முறையில் பயன்படுத்தப்படுகிறது.

Weed Management - Chemical Method

நேரடி அளிப்பு: களைக் கொல்லிகள் நேரடியாக பயிர்களின் இடையே உள்ள களைகளின் மீது பயிரின் தழைப் பகுதியைத் தவிர்த்து தெளிக்க வேண்டும்.
பயிரின் மீது களைக் கொல்லி விழாதவாறு கவனத்துடன் தெளிக்க வேண்டும்.

Weed Management - Chemical method Weed Management - Chemical method

Eg. பருத்தியில் கடைசிப்பருவத்தில் வரும் களைகளை தேர்ந்தெடுக்காத களைக் கொல்லிகளை நேரடியாகத் தெளிப்பதால் கட்டுப்படுத்தலாம்.
குறிப்பிட்ட இடத்தில் அளித்தல்: களைக் கொல்லிகளை களை இருக்கும் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் தெளிக்கவும். இதனால் களைக் கொல்லி பயன்பாடு குறைகிறது

வேதியியல் முறையின் நன்மைகள்:

  1. பயிர் சாகுபடி எங்கு இயலாமல் போகிறதோ பயிரின் இடை வரிசைகளில் உள்ள களைகளையும் இந்த முறையில் கட்டுப்படுத்தலாம்
  2. முளைமுன் களைக்கொல்லிகளால் பருவத்தின் முன்பே வம் களைகளைக் கட்டுப்படுத்தலாம்
  3. உழவு முறைகளால் களை எடுக்கும்போது வேரில் ஏற்படும் தாக்கங்களை இந்த முறையின் மூலம் கட்டுப்படுத்தலாம்
  4. பயிரிடுவதற்கு முன் பண்படுத்துதலுக்கான தேவையை களைக்கொல்லிகள் குறை்ககின்றன
  5. பல்லாண்டு களைகளை இந்த முறையில் கட்டுப்படத்தலாம்

Eg. சைப்ரஸ் வகைகள்
Eg. நெல் சூழ்நிலை அமைப்பு:
பென்டி மெத்தலின் 1.0 கிலோ / ஹெக் 5 நாள் விதைப்பிற்கு பின் அல்லது சேப்னர் (மிருதுவானது) 0.45 கிலோ / ஹெக் மழை பெய்தவுடனே தெளிக்க வேண்டும். தொடர்ந்து 30 முதல் 35 நாள் விதைப்பிற்கு பின் ஒரு தடவை களை எடுக்க வேண்டும்.

 
 
Fodder Cholam