Agriculture
களை மேலாண்மை


களை மேலாண்மை முன்னுரை

களைகள் என்பது நில மற்றும் நீர் வளங்களை பயன்படுத்துவதற்கு இடையூறாக வேண்டத்தகாத செடிகள் ஆகும். இதனால் மனித நலம் மிக மோசமாக பாதிக்கப்படுகிறது.
பயிர் நிலங்கள், காடுகள், நீர் நலைகள் மற்றும் இதர அமைப்புகளில் களைகள் ஆக்ரமித்து, பயிரிடப்படாக பகுதியான தொழிற்சாலை இடங்கள், சாலை இரயில் பாதைகள், நிழலூட்டும் செடிகளில், நீர் தொட்டிகள், நீர் நிலைகள் மற்றும் இதர இடங்களில் களைகள் மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கின்றன.

நீர் மற்றும் நில வளங்களின் மேலாண்மையில் களை முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் வேளாண்மையில் இதன் விளைவுகள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. வேளாண் பூச்சிகளால் வரும் அழிவை விட களையினால் வரும் அழிவு அதிகமாக இருக்கின்றது. வேளாண் பொருள் உற்பத்தியின் மொத்த வருட இழப்பில், களைகளால் 45 சதவீதமும், பூச்சிகளால் 30 சதவீதமும், நோயினால் 20 சதவீதமும், மற்ற பூச்சிகளால் 5 சதவீதமும் இழப்பு ஏற்படுகிறது.

வேளாண் உற்பத்தியில் மொத்த வருட இழப்பு (சதவீதத்தில்)

 

 
 
Fodder Cholam