Agriculture
களை மேலாண்மை

பிரச்சனைக்குரிய மற்றும் ஒட்டுண்ணி களைகள் கட்டுப்பாடு

I. சைனோடன் டேக்டைலான் 1 அருகு மற்றும் சைப்ரஸ் ரொட்டான் டஸ் (கோரை):

பல்லாண்டு வாழும் களைகாளான சைனோடன் டேக்டைலான் மற்றும் சைப்ரஸ் ரொட்டான்டஸ் கட்டுப்படுத்த கிளைபோசேட் 10 மி.லி + ஏ.ஜி.எப். தூண்டுபவை 2 மி.லி / லிட்டர் தண்ணீர் அல்லது கிளைபோசேட் 15 மி.லி + 20 கிராம் அம்மோனியம் சல்பேட் / லிட்டர் தண்ணீர் ஆகியவற்றை தெளிக்க வேண்டும்.

அணுகு முறை : முளை பின், மொத்த, இடம்மாற்றக் களைக் கொல்லி
களையின் நிலை: பயிரின் வளர்ச்சி பூத்தலுக்கு முன்தைய நிலை
தெளிப்பான் : காற்றழுத்த முறையில் இயங்கும் முதுகில் சுமக்கும் தெளிப்பான்
தெளிப்பு முனை : டபிள்யூ. எப். என். 24 மற்றும் யூ. எல். வி. 50 30 பி.எஸ்.ஐ. எடன்
தெளிப்பு கொள்ளளவு : 250 – 300 லி / ஹெக்டர்.

Cynodon dactylon

அளிப்பு தொழில்நுட்பம்

பயிரில்லாத நிலையில் பொதுவான அளிப்பு முறை
பயிரிருக்கும் நிலையில் விதைக்கும் முன் / பயிரிடும் போது – விதைப் படுக்கை (பொதுவான அளிப்பு முறை)
பயிர் வளர்ந்த நிலையில்: நேரடி அளிப்பு
குறிப்பு: மழையில்லாத காலம் / காத்திருக்கும் காலம் : 48 மணி நேரம்.


பார்தினியம் கிஸ்டிரோபோரஸ் (பார்த்தீனியம் நச்சு செடி)

  • பார்த்தீனியம் செடிகளின் பூத்தல் நிலைக்கு முன் கையுறை / இயந்திரம் மூலம் அகற்றி அழிக்க வேண்டும் (அல்லது)
  • முளைமுன் களைக் கொல்லியான அட்ரசன் 4கி / லிட்டர் 500 லிட்டர் தண்ணீர் / ஹெக் கரைத்து தெளிக்க வேண்டும் அல்லது
  • சோடியம் குளோரை 200 கி + 2மிலி சோப்பு எண்ணெய் /லிட்டர் தண்ணீரில் கரைத்து அரே மாதிரியாக தெளிக்க வேண்டும்
  • 2,4 – டி சோடியம் உப்பு 8 கி அல்லது கிளைபோசேட் 10 மிலி + 20 கிராம் அம்மோனியம் சல்பேட் + 2மிலி சோப்புக் கரைசல் / லிட்டர் தண்ணீரில் கரைத்து விதைப்பிற்கு முன் தெளிக்க வேண்டும் (அல்லது)
  • முளை பின் களைக் கொல்லியான மெட்ரிபூஜின் 3 கிராம் / லிட்டர் தண்ணீரில் கரைத்து பயிரில்லாத நிலையில் தெளிக்க வேண்டும்
  • கேசியா செரிசியா மற்றும் அபுடில்லான் இண்டிக்கம் செடிகளை பயிரில்லாத நிலத்தில் பார்த்தீனியம் செடிகளை அகற்ற பயிரிட வேண்டும்
  • மெக்சிகன் வண்டு, பூஞ்சான், நூற்புழுக்களை உயிரியல் முறையில் கட்டுப்படுத்த வேண்டும்.

குறிப்பு: பார்த்தீனியம் பூர்ப்பதற்கு முன சிதைவுரச் செய்து அங்கக உரமாக பயன்படுத்தப்படுகிறது.

பிரச்சனைக்குரிய களைகள் மற்றும் ஒட்டுண்ணி கட்டுப்பாடு பார்த்தினியம் ஹில்ஸ்டிரோ போராஸ்

Parthenium natchu chedi)

சொலானம் எலேக்னிபோலியம்
(காட்டு கண்டங்கத்திரி)

முளை பின் களைக் கொல்லியான 20 மி.லி தனியாக அல்லது 10 மிலி 2,4 – D சோடியம் உப்புடன் (6கிராம் / லிட்டர்) கலந்து தெளிக்க வேண்டும்.

Solanum elaegnifolium   ஐபோமியா கார்னியா
(நெய்வேலி காட்டாமணக்கு)

2,4 – டி சோடியம் உப்பு 8 கிராம் + யூரியா 20கி + சோப்பு எண்ணெய் 2 மி.லி / லிட்டர் தண்ணீரில் கரைத்து தழைத் தெளிப்பு செய்ய வேண்டும். பிறகு காய்ந்து போன களைகளை அகற்றி அழிக்க வேண்டும்.

குறிப்பு: ஐபோமியா கார்னியா செடிகள் அங்கக உரங்களாக நெல் வயல்களில் பயன்படுத்தலாம்

EIpomoea carnea
எக்கோர்னியா கிரேஸிப்ஸ்
(ஆகாயத் தாமரை)

  • கையால் / கருவியைக் கொண்டு களைகளை அகற்றி காய விட வேண்டும்
  • 2,4 – டி சோடியம் உப்பு 8 கிராம் + யூரியா 20 கிராம் அல்லது பாராகுட் 6 மி.லி / தண்ணீரில் கரைத்து தெளிக்க வேண்டும்.

குறிப்பு: மண்புழு உரம் மற்றும் ஆகாயத் தாமரையின் காய்ந்த பகுதிகளின் மட்கிய உரத்தை அங்கக உரங்களாக நஞ்சை நிலத்தில் பயன்படுத்தலாம்.

Eichhornia crassipes   போர்ட்லாக்கா க்வாடிரிபிடா (சிறு பாசரி)

கிளைபோசேட் 10 மி.லி / லிட்டர் + 2,4 – டி சோடியம் உப்பு 5 கிராம் / லிட்டர் களைபின் கொல்லியாக நேரடியாக வயலில் தெளிக்கலாம்

குறிப்பு: அகலமான இலைகளை உடைய பயிர்களான பருத்தி மற்றும் வெண்டை பயிர்களுக்கு இதைப் பயன்படுத்தக் கூடாது.

Shiru pasari
ஸ்டிரைகா ஏசியாடிக்கா (கடு மல்லி)

அட்ரசைன் 1 கிலோ / ஹெக் பயிரிட்ட 3 வது நாள் களை முன் கொல்லியாக தெளிக்க வேண்டும். பயிரிட்ட 45 வது நாள் கையில் களை எடுத்து, பின் மண் அனைப்பு 60 வது நாளிலும், 2,4 – டி 6இ (0.6%) களை பின் கொல்லியாக இணைந்து + யூரியா 20 கிராம் (2%) / லிட்டர் தண்ணீரில் கரைத்து 90 வது நாளிலும் + தழைகளை 5 டன் / ஹெக் மண் மேலே மூடி ஈரமாகி வைத்தல் 120 நாளிலும் செய்ய வேண்டும்.

Striga asiatica   ஓரபாங்கி (புகையிலைக் காளான்)

வேப்பம் புண்ணாக்கு 25 கி / செடி என்ற அளவில் செடியில் துளை வழியே தெளிக்க வேண்டும். காப்பர் சல்பேட் 5% மண்ணில் அமிழ்த்துவதால் புகையிலைப் பயிரில் ஓரபாங்கியைக் கட்டுப்படுத்தலாம்.

Orabanche
 
 
Fodder Cholam