Agriculture

முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு | புகைப்படத் தொகுப்பு

களை மேலாண்மை :: தோட்டக்கலை பயிர்கள்

தேயிலை


களைக்கொல்லிகள் இப்போது தேயிலை சாகுபடிப் பகுதியில் 60% மேல் பயன்படுத்தப்படுகின்றன என்றாலும், கைக்களை முறைகளான சீலிங், சிக்க்ளிங் மற்றும் தழைகூளம் போன்ற முறைகளை இரசாயனமுறை களைகட்டிலும் தொழிலாளர்களுள்ள இடங்களில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. சீலிங் மேலே தரை மேலுள்ள களைகளை நீக்கி முன்களைக்கொல்லி தெளிக்க தளம் அமைக்கிறது.

சீலிங் மேலே தரை மேலுள்ள களைகளை நீக்கி முன்களைக்கொல்லி தெளிக்க தளம் அமைக்கிறது. சிக்க்ளிங் நீண்டநாள் களைகளின் உயரமான வளர்ச்சியை நீக்கி தரைமட்டத்தில் அதை வெட்டி இலைவழி களைக்கொல்லி தெளிப்பு பின்பற்ற வழிவகை செய்கிறது.

முன்தோற்ற களைக்கொல்லி ஆக்சிஃப்ளுரோபென் @ 0.40 கிலோ / எக்டர். இலைவழி தெளிப்பாக பாராகுவாட் (8ml / L) + 2,4 - டி (6 g / L) அல்லது கிளைபோசேட்டு (15ml / L) களை பரவலை பொறுத்து பயன்படுத்தபடுகிறது. மேலும் முன் களைகொல்லி தெளிப்பு வரை தேயிலையில் களை இல்லாமல் வைத்திருக்கிறது வருடத்திற்கு ஆக்சிஃப்ளுரோபென் @ 0.40 கிலோ / எக்டர்.

நாற்றங்கால் :
இளம் நாற்றங்காலில் களைக்கட்டுப்பாடு (2 முதல் 3 வாரங்கள் துண்டுகளை நடுவதற்கு முன் சிமாசைன் கிலோ/ ஹெக்டேர் பயன்படுகிறது. 6 மாதங்களுக்கு பிறகு சிமாசைன் அதே அளவில் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.

விதை நாற்றங்காலில் நடவுசெய்த 6 மாதங்களுக்கு பிறகு கைமூலம் களைகளை அகற்றுதல் வேண்டும் பின்னர் சிமாசைன் 2 கிலோ / எக்டர் பயன்படுத்த வேண்டும்.

இளம் தேயிலை (3 ஆண்டுகள் வரை)
சிமாசைன் 0.5 முதல் 1 கிலோ / எக்டர் அல்லது பாராகுவாட் 0.3 முதல் 0.4 கிலோ / எக்டர்முன்தோற்ற கலைகொள்ளியாக மற்றும் 2,4-D 0.5 - 1கிலோ / எக்டர் பின் கலைகொள்ளியாக பயன்படுத்தவேண்டும்.

முதிர்ந்த தேயிலை (3 ஆண்டுகளுக்கு மேல்)
சிமாசைன் 1.5 முதல் 2 கிலோ / எக்டர் அல்லது டியுரான் 2 கிலோ / எக்டர் முன்தோற்ற களைக்கொல்லிகள் பயன்படுத்துவது. பாராகுவாட் அல்லது 2,4 – டிஅல்லது பாராகுவாட் + MSMA அல்லது கிளைபோசேட்டு போன்றவை பின் களைகொள்ளிகளாக பயன்படுத்தப்படுகின்றன.

புகைப்பட ஆதாரம் :
www.agritech.tnau.ac.in

 
Fodder Cholam