Agriculture

முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு | புகைப்படத் தொகுப்பு

களை மேலாண்மை :: தோட்டக்கலை பயிர்கள் :: காய்கறிகள்

தக்காளி

தமிழ்நாட்டில், தக்காளி மூன்று பருவங்களில் பயிரிடப் படுகிறது. அதாவது ஜூன்-ஜூலை, டிசம்பர்- ஜனவரி மற்றும் மார்ச்.

தக்காளியில் களை போட்டி முக்கியமான காலகட்டமான நடவு செய்த முதல் 30 நாட்களுக்கு இருக்கும். புற்களை கட்டுபடுத்த நடவுக்கு முன் மண்ணில் உட்புக செய்யும் முறையில் டிரைஃப்ளுரலின் 3 முதல் 5 கிலோ / எக்டர் அல்லது நைட்ரலின் 3 முதல் 5 கிலோ / எக்டர் அல்லது டைபெனமைத் 2 முதல் 4 கிலோ / எக்டர் சிறந்தது ஆகும்.

EPTC 2 - 3 கிலோ/ ஹெக்டர் நட்டு புற்களை கட்டுப்படுத்துகிறது. பயனுள்ள முன் களைக்கொல்லிகளான பென்டிமேதலின் 1.00 கிலோ / எக்டர், அளசோர் 1 முதல் 2 கிலோ / எக்டர், மேட்ரிபிசின் 0.75 கிலோ / எக்டர், ப்ளுகொரலின் 1.0 கிலோ / எக்டர் இதனை தொடர்ந்து 30 வது நாளில் ஒரு கைக்களை எடுக்க வேண்டும். பொதுவாக, முன் களைக்கொல்லி தொடர்ந்து ஒரு கைக்களை எடுக்கும்போது பின் பயிர் வளர்ச்சி காலத்தில் கட்டுபாட்டை கொடுகிறது.

முன்-தாவர களைக்கொல்லிகள் உட்புக செய்தல் தேவைப்படும்போது குறிப்பாக நாற்றங்காலுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

நடவு வயலில் நாற்றுகள் நடுவதற்கு 3 முதல் 4 வாரங்கள் முன் பயன்படுத்த வேண்டும்.


புகைப்பட ஆதாரம் :
www.agritech.tnau.ac.in

 
Fodder Cholam