அட்ரசின் 50 சதம் நனையும் தூள், 500 கிராம், எக்டர் (900 லிட்டர் தண்ணீரில்) விதைத்த 3 நாட்கள் கழித்து பின் தெளிக்கவேண்டும். பிறகு 40-45வது நாளில் கைக்களை ஒன்று எடுக்கவேண்டும்.
களைக்கொல்லி மருந்தினை மண்ணில் போதுமான அளவில் ஈரப்பதம் இருக்கும்போது தெளிக்கவேண்டும்.
களைக்கொல்லி தெளித்த பிறகு மண்ணை எதுவும் செய்யக்கூடாது.
களைக்கொல்லி இடாதபோது விதைத்த 17-18வது நாளில் களைக்கொத்து கொண்டு களை எடுக்கவும்.
மானாவாரி மக்காச்சோளம் களை நிர்வாகம்: பூட்டாகுளோர் 2.5 லிட்டர் அல்லது பென்டிமெத்தலின் 2.5 லிட்டர் என்ற களைக்கொல்லியை ஒரு எக்டரில் விதைத்த 3 ஆம் நாளில் கைத் தெளிப்பானால் தெளிக்கவும்.