இந்தியாவில் பார்த்தீனியம் 1950-ல் கண்டறியப்பட்டது. இக்களைச் செடியானது 1950 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் கோதுமை இறக்குமதி செய்தபோது ஊடுருவியதாகக் கருதப்படுகிறது. இச்செடியானது பெரும்பாலான இடங்களில் காணப்பட்டு, காட்டுத்தீ போல் இந்தியா முழுவதும் பரவியது. இதற்கு முக்கிய காரணிகளான.
- இயற்கை எதிரிகள் இல்லாததால் அதன் இனப்பெருக்கம் அதிகரித்தது.
- அதிக விதைகளை உற்பத்தி செய்தல்.
- விரைவாக பரவக்கூடிய தன்மை
- இக்களை உற்பத்தி செய்யும் நச்சுத்தன்மையால் ஏற்படக்கூடிய பாதிப்பு.
- கால்நடைகள் உண்ண விரும்பாத களை செடியாக உள்ளது.
- எல்லா பருவ காலங்களிலும் மற்றும் எல்லா மண் வகைகளிலும் நன்கு வளரக்கூடிய தன்மை உடையது.
|