ஒருங்கிணைந்த பார்த்தீனிய களை மேலாண்மை தான் பார்த்தீனியத்தைக் கட்டுப்படுத்த முறை என நம் ஆராய்ச்சி முடிவுகள் கூறுகிறது. இந்த ஒருங்கிணைந்த களை மேலாண்மை கடைப்பிடித்த இரண்டாம் வருடத்தில் இக்களைச்செடியின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டு, மூன்றாம் வருடத்தில் இருந்து இக்களையின் கட்டுப்பாடு முழுமையாகக் காணப்படும்.
ஒருங்கிணைந்த பார்த்தீனியம் கட்டுப்பாட்டு முறைகள ்:
-
பொது இடங்கள் அல்லது பயிரிடாத நிலங்களில் இருக்கும் பார்த்தீனிய செடிகளை இயற்கை சூழல் பாதிக்காமல் அகற்ற வேண்டும்.
-
ஆவாரை, அடர் ஆவாரை, துத்தி, நாய் வேளை, சாமந்தி ஆகிய செடிகளின் விதைகளை மழைக்காலங்களில் விதைக்க வேண்டும். இந்த செடியின் அதிக வளர்ச்சி பார்த்தீனிய செடியை வளரவிடாமல் தடுத்து விடுகிறது.
-
மழைப்பருவம் ஆரம்பிக்கும் காலமே மெக்ஸிகன் வண்டுகளின் உற்பத்திக்கு உகந்த காலமாகும். ஆகையால் மெக்சிகன் வண்டுகள் அதிக எண்ணிக்கையில் காணப்படும் போது வண்டுகளை சேகரித்து பார்த்தீனியம் மிகுந்த பகுதிகளில் விட வேண்டும்.
-
பூங்காக்களிலும், தோட்டங்களிலும், புல் தரைகளிலும் மற்றும் விவசாய நிலங்களிலும் பார்த்தீனியத்தினை ஆட்களைக்கொண்டு கையுரை அணிந்து கைக்களையாக அகற்றி விட வேண்டும். ஆட்களைக்கொண்டு அகற்றும் போது வேரோடு அகற்றுவதுடன் பார்த்தீனியத்தினால் ஏற்படக்கூடிய தோல் சம்பந்தமான உபாதைகளை ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
-
அதிகமாகவும், மீண்டும் மீண்டும் பார்த்தீனியம் வளரும் இடங்களில், உடனடியாகக் கட்டுப்படுத்த அட்ரஸின், 2,4-டி, கிளைபோசேட் மற்றும் மெட்ரி பூசன் போன்ற களைக்கொல்லிகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.
|