பூ பூக்கும் முன் தேவையான பார்த்தீனியக் களைகளை சேகரித்து, அவற்றை 5-10 செ.மீ. நீளவாட்டில் சிறிதாக நறுக்கி, 10 செ.மீ.சுற்றளவில் 10 செ.மீ. உயரத்திற்கு கீழே இருந்து 5 செ.மீ. அவற்றை அடுக்க வேண்டும். இவற்றின் மேல் 10% மாட்டுச்சாணத்தை கரைச்சலாக கொண்டு சமமாக தெளிக்க வேண்டும். இவற்றை 10 நாட்கள் மக்குவதற்காக விட வேண்டும். ஐந்து நாட்கள் கழித்து 250-300 மண் புழுக்களை இந்த மக்கிய உரத்தில் விட வேண்டும். மேலும் பார்த்தீனியத்தின் களைகளை மக்குவதற்காக 45-60 நாட்கள் வரை தொடர வேண்டும்.
ஊட்டச்சத்துக்கள் சதவீதம் |
சத்துக்கள் |
பார்த்தீனிய மண்புழு உரம் |
தொழு உரம் |
தழைச்சத்து |
1.15 |
0.50 |
மணிச்சத்து |
0.44 |
0.45 |
சாம்பல்சத்து |
0.97 |
0.72 |
இவ்வாறாக பார்த்தீனிய செடியானது அனைத்து தரப்பு உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதால் இதனைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கிய பணியாகும். இச்செடியினை மேற்கண்ட முறைகளை சூழ்நிலைக்கு ஏற்றவாறு பயன்படுத்தி பார்த்தீனிய செடிகளின் பாதிப்பினை முற்றிலுமாக கட்டுப்படுத்தலாம். |