நஞ்சையில் சேற்று நெல்
முக்கிய களைகள்:
புற்கள் |
 |
 |
 |
எக்கினோகுளோவா கொலானா |
எக்கினோகுளோவா க்ரஸ்கலி |
க்ளோரிஸ் பார்பேட்டா |
 |
 |
|
பானிக்கம் ஸ்பி |
சைனோடான் டாக்டைலான் |
|
ஆதாரம்: www.agritech.tnau.ac.in |
அகண்ட இலை களைகள் |
 |
 |
 |
அம்மானியா பேஸிபெரா |
அஸ்ட்ரகாந்த லாங்கிபோலியா |
சென்டெல்லா ஏசியாட்டிகா |
 |
 |
 |
கேமலினா பெங்காலன்சிஸ் |
சையனோடிஸ் ஆக்ஸிலாரிஸ் |
எக்ளிப்டா ப்ராஸ்ட்ரேட்டா |
 |
 |
 |
மார்சீலியா குவாட்ரிபோலியா |
மோனோகோரியா வெஜினாலிஸ் |
நாஸ்ட்ரிடியம் இண்டிகம் |
 |
 |
 |
ஃபில்லா நோடிப்ளோரா |
ஃபில்லான்தஸ் நிரூரி |
ரொட்டாலா டென்ஸிஃப்ளோரா |
 |
 |
 |
ரூயல்லா ட்யுப்ரோஸ் |
சோன்ச்சஸ் ஓலரிக்சஸ் |
ஸ்பெரான்தஸ் இண்டிகஸ் |
ஆதாரம்: www.agritech.tnau.ac.in |
கோரைகள் |
 |
 |
 |
சைப்ரஸ் டிஃபார்மிஸ் |
சைப்ரஸ் இரியா |
ஃபிம்ரிஸ்டைலிஸ் மில்லியேசியா |
ஆதாரம்: www.agritech.tnau.ac.in |
நஞ்சையில் சேற்று நெல்
நாற்றங்கால்லில்களை நிர்வாகம்
விதைத்த மூன்றாம் அல்லது நான்காம் நாளில் களை முளைப்பிற்கு முந்திய களைக்கொல்லி பிரிடில்லாகளோர் ரூ சேஃப்பனர் 0.3 கிலோ ஒரு எக்டர் நாற்றுகளுக்குத் தெளிக்கப்பட வேண்டும் களைக்கொல்லி தெளிப்பதற்கு முன்னர் சிறிய அளவு தண்ணீர் நிறுத்தப்படவேண்டும். தேக்கப்பட்ட நீர் வடிக்கப்படலாகாது, மாறாக தானாகவே மண்ணில் மறைதல் நல்லது.

நடவு வயல்களை நிர்வாகம்
- களையைகைக்கட்டுப்படுத்த உருளைச்சக்கர களை எடுப்பானை நடவு நட்ட 15-ஆம் நாளும் அதன் பின்னர் 10 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறையும் பயன்படுத்தலாம். களை எடுக்கும் செலவு குறைக்கப்படுவதுடன் வேர்ப்பகுதிக்கு ஆக்சிஜன் கிடைப்பதுடன், வேரின் ஆற்றல் திறன் சீரமைக்கப்பட்டு உணவுப்பொருட்கள் சிறப்பாக மாற்றல் அடைந்து, நெல்லின் கதிர்மணிகள் அதிகம் பிடித்து மகசூல் அதிகமாக வாய்ப்புள்ளது.
- நெல்லுடன் அசோல்லா வளர்ப்பதாலும், நெல்லும்-பசுந்தாள் ஒன்றாக பயிரிடுவதாலும் (விளக்கத்திற்கு பகுதி 2.5 மற்றும் 2.6 யைப் பார்க்கவும்) களையின் ஆதிக்கத்தைக் குறைக்கலாம்.
- கோடை உழவு மற்றும் கோடை காலப்பயிர்கள் பயிர்த்திட்டத்தில் சேர்க்கப்படும்போது களையின் தீவிரம் குறைய வாய்ப்புள்ளது.
களை முளைப்பதற்கு முந்தி களைக்கொல்லிகள்
- பூட்டாக்குளோர் 1.25 கிலோ அல்லது அனிலோபாஸ் 0.40 கிலோ என்ற அளவில் பயன்படுத்தலாம். மாற்றாக களை முளைப்பிற்கு முந்திய களைக்கொல்லிகிளன் கலவையையும் பயன்படுத்தலாம். அவையாவன âட்டாக்குளோர் 0.6 கிலோ 0.75 கிலோ ரூ2இ4னுநுநு அல்லது அனிலோபாஸ் ரூ2இ4னுநுநு ‘தயார் – கலவை’. தெளிக்கப்பட்டு நட்ட 30-35 ஆம் நாளில் கைக்களை எடுத்தல் வே்ணடும்
- களைக்கொல்லி 50 கிலோ உலர்ந்த மணலுடன் கலக்கப்பட்டு, நட்ட 3 அல்லது 4-ம் நாளில் மண் மறையுமாறு சிறிய அளவு நீர் நிறுத்தி தூவப்படவேண்டும். நீர் வடித்தலோ, கட்டுதலோ அடுத்த இரண்டு நாட்களுக்குத் தவிர்த்தல் வேண்டும்.
களைமுளைத்தபின்னர் இடும் களைக்கொல்லிகள்
- களைகள் முளைப்பதற்கு முன்பே இடப்படவேண்டிய களைக்கொல்லிகள் இடப்படாத தருணத்தில், நட்ட 15-ஆம் நாளில் களைக்கொல்லிகள் இடப்படலாம்.
- 2,4 டி சோடியம் உப்பு (பெர்னாக்சோன் 80” நனையும் பொடி) 1.25 கிலோ 625 லிட்டர் நீருடன் கலந்து களை முளைத்த 3-4 இலைப்பருவத்தில் தெளிக்கப்படவேண்டும்.
செம்மை நெல்
களை நிர்வாகம்
நடவு வரிசையில் அமைக்கப்பட்டதால் களைகளை உருளைக் களை எடுப்பான் கொண்டு மண்ணினுள் அழுத்தி விடுதல் வேண்டும்.
- உருளைக் களை எடுப்பானை முன்னும் பின்னுமாய் அசைத்து களை எடுப்பானை உருட்டி களையைக்களைவதுடன் மண்ணினுள் காற்று புகுமாறு உருட்டுவது பயிரின் வேரிற்கு நல்லது.
- இவ்வாறு களை எடுப்பது நட்ட 10 நாட்களிலேயே ஆரம்பிக்பப்படலாம். 10 நாட்கள் இடைவெளியில் மீண்டும் மீண்டும் உருளைக் களை எடுப்பானைப் பயன்படுத்தி பலன் பெறலாம்.
- பயிர்களுக்கு இடையே வேரிற்கு அருகில் உள்ள களைகளைக் களைய கைக்களை எடுப்பதும் அவசியமாகின்றது.
 |

|
நட்டதிலிருந்து 10 நாட்களுக்கு ஒரு முறை களைக்கருவியை குறுக்கும் நெடுக்குமாக உபயோகித்தல் |
சேற்றுவயல் நேரடி விதைப்பு
களை மேலாண்மை
களை முளைப்பதற்கு முந்திய களைக்கொல்லிகளான பிரிடில்லாக்குளோர் 0.75 கிலோ நட்ட 8-ம் நாள் இடப்படவேண்டும் அல்லது பிரிடில்லாக்குளோர் சேஃபனருடன் கலந்த ‘சோபிட்’ எனில் 0.45 கிலோ என்ற அளவில், விதைத்த 3 அல்லது 4-ம் நாளில் இடப்படவேண்டும். கைக்களை 40-ம் நாளில் தேவைக்கேற்ப தரப்படவேண்டும்.
நஞ்சையில் புழுதிவிதைத்த மானாவாரி நெல்
களை மேலாண்மை
- முதல் கைக்களை பயிர் முளைத்த 15-21 நாட்களுக்குள் செய்யப்படவேண்டும்
- இரண்டாம் கைக்களை 30-45 நாட்களில் செய்ய ஏற்ற தருணம்
- களைக்கொல்லி கொண்டும் களைகளைக் கட்டுப்படுத்தலாம். அதற்கு பயிர் முளைத்த 5 தினங்களுக்குள் பென்டிமெத்தலின் 1.0 கிலோ அல்லது பிரிடிலாக்குளோர் ரூ சேஃப்னர் (சோபிட்) 0.45 கிலோ, விதை முளைக்கப்போதுமான மழை பெய்த உடனேயே அளித்தும் களையைக்கட்டுப்படுத்தலாம். களைக்கொல்லி இடப்பட்ட தருணத்தில் எஞ்சிய களைகளை களைய கைக்களை 30-35 நாட்களில் மேற்கொள்ளப்படவேண்டும்.
இறவையுடன் நஞ்சையில் புழுதிவிதைத்த மானாவாரி நெல்
களை மேலாண்மை
- முதல் கைக்களை பயிர் முறைத்த 15-21 நாட்களுக்குள் செய்யப்படவேண்டும்
- இரண்டாம் கைக்களை 30-45 நாட்களில் செய்ய ஏற்ற தருணம்
- களைக்கொல்லி கொண்டும் களைகளைக் கட்டுப்படுத்தலாம். அதற்கு பயிர் முளைத்த 5 தினங்களுக்குள் பென்டிமெத்தலின் 1.0 கிலோ அல்லது பிரிடிலாக்குளோர் 7 சேஃப்னர் (சோபிட்) 0.45 கிலோ விதை முளைக்கப்போதுமான மழை பெய்த உடனேயே அளித்தும் களையைக் கட்டுப்படுத்தலாம். களைக்கொல்லி இடப்பட்ட தருணத்தில் எஞ்சிய களைகளைக் களைய கைக்களை 30-35 நாட்களில் மேற்கொள்ளப்படவேண்டும்
நஞ்சையில் புழுதிவிதைத்த இறவை நெல்
களை மேலாண்மை
- முதல் கைக்களை பயிர் முளைத்த் 15-21 நாட்களுக்குள் செய்யப்படவேண்டும்
- இரண்டாம் கைக்களை 30-45 நாட்களில் செய்ய ஏற்ற தருணம்
- களைக்கொல்லி கொண்டும் களைகளைக் கட்டுப்படுத்தலாம். அதற்கு பயிர் முளைத்த 5 தினங்களுக்குள் ‘பென்டிமெத்தலின்’ 1.0 கிலோ அல்லது பிரிடிலாக்குளோர் ரூ சேஃப்னர் (சோபிட்) 0.45 கிலோ விதை முளைக்கப் போதுமான மழை பெய்த உடனேயே அளித்தும் களையைக் கட்டுப்படுத்தலாம். களைக்கொல்லி இடப்பட்ட தருணத்தில் எஞ்சிய களைகளைக் களைய கைக்களை 30-35 நாட்களில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
புழுதிவிதைத்த மேட்டுக்கால் நெல்
புழுதி விதைத்த மானாவாரி நெல் போன்றே களை மேலாண்மை செய்யப்படவேண்டும். |