Agriculture
வேளாண் பயிர் சாகுபடியில் களை மேலாண்மை
கரும்பு
முக்கிய களைகள்
Amaranthus spinosus Amaranthus viridis Brachiaria reptans
அமராந்தஸ் ஸ்பைனோசஸ் அமராந்தஸ் விரிடிஸ் ப்ராக்கியேரியா ரெப்டன்ஸ்
Cleome gynandra Coccinia indica Convolvulus arvensis
க்ளியோம் கைனான்ட்ரா காக்ஸீனியா இண்டிகா கன்வால்வுளஸ் அர்வென்சிஸ்
Cyperus rotundus Euphorbia hirta Ipomea sp
சைப்ரஸ் ரொட்டன்டஸ் யுபோர்பியா ஹிர்ட்டா ஐப்போமியா ஸ்பி
Parthenium hysterophorus Phyllanthus niruri Trianthema portulacastrum
பார்த்தீனியம் ஹிஸ்ட்டிரோபோரஸ் ஃபில்லான்தஸ் நிரூரி ட்ரையாந்திமா போர்ட்டுலோக்காஸ்ட்ரம்

 

கரும்பு நடவு பயிரில் களை நிர்வாகம்

  1. அட்ரசின் 2 கிலோ அல்லது ஆக்ஸிபுளுர்பென் 750 மில்லி, எக் என்ற அளவில் 500 லிட்டர் தண்ணீருடன் கலந்து நடவு செய்த 3ம் நாள் விசிறி அல்லது டிப்ளெக்டர்நாசில் பொருத்தப்பட்ட கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்கவும்
  2. களைச்செடிகள் முளைக்கும்முன் தெளிக்கப்படும் களைக்கொல்லிகள் தெளிக்காவிட்டால், களை முளைத்த பின்னர் தெளிக்கக் கூடிய கிரமாக்ஸோன் 2.5 லிட்டர் ரூ.24னு சோடியம் உப்பு 2.5 கி, எக் என்ற விகிதத்தில் 500 லிட்டர் தண்ணீரில் கலந்து கரும்பு நடவு செய்த 21ம் நாள் தெளிக்கவும்
  3. ஒட்டுண்ணி வகை களைச் செடியான சுடுமல்லி காணப்படும் இடங்களில் 2,4னு சோடியம் உப்பினை எக்டருக்கு 1.25 கிலோ அளவில் 500 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவும், கரும்புப் பயிருக்கு அருகில் பருத்தி மற்றும் வெண்டை போன்ற பயிர்கள் இருந்தால் 2, 4 னு சோடியம் உப்பு தெளித்தலை தவிர்க்கவும் 20 சத யூரியா கரைசலை சுடுமல்லி களையின் மேல் மட்டும் படுமாறு தெளித்தும் கட்டுப்படுத்தலாம்
  4. கரும்பு நடவிற்கு 21 நாள்முன்னர் கிளைபோசேட் களைக்கொல்லியை 20 கிலோ எக்டர் என்ற அளவில் 2 சத அமோனியம் சல்பேட் உரம் சேர்த்து கோரை களைகளின் மேல் தெளித்து பின்னர் கரும்பு நடவு செய்த 30 ம் நாள் கிளைபோசேட் 2கிலோ, எக் ரூ.2 சத அமோனியம் சல்பேட் கரைசலை மறைப்பான் பொருத்தப்பட்ட கைத்தெளிப்பான் கொண்டு கொரை களைச்செடிகளின் மேல் தெளிப்பதின் மூலம் கோரை களையின கட்டுப்படுத்தலாம்
  5. களைக்கொல்லிகள் பயன்படுத்த இயலாத சூழ்நிலைகளில் ஜீனியர் கலப்பை கொண்டு சால்மேடுகளில் கரும்பு நட்ட 25, 55 மற்றும் 85 நாட்களில் இடையழவு செய்வதன் மூலமாகவும் களைகளைக் கட்டுப்படுத்தலாம். கரும்புப் பயிரின் வரிசையில் உள்ள களைகளை களைகொத்து கொண்டு எடுக்க வேண்டும். இல்லாவிடில் பவர்டில்லரில் பொருத்தப்பட்ட இரும்பு கொழு கலப்பை கொண்டு இடை உழவு செய்ய வேண்டும்.
Sugarcane SugarcaneSugarcane Sugarcane

ஊடு பயிர்ட்ட கரும்பு வயலில் களை நிர்வாகம்
சோயாமொச்சை, உளுந்து மற்றும் மணிலா போன்ற ஊடு பயிர் சாபகுபடி செய்யப்பட்ட கரும்பு வயல்களில் களைக்ள முளைக்கும் முன் தெளிக்கக்கூடிய களைக்கொல்லியான தயோபென்கார்ப் 1.25 கிலோ, எக் என்ற அளவில் தெளிக்கலாம். கரும்பில் ஊடுபயிர்ட செய்வதால் பொதுவாக கரும்பின் மகசூல் மற்றும் சர்க்கரைக் கட்டுமானம் குறைவதில்லை

மண் அணைத்தல்
மூன்றாவது தவணையாக இரசாயன உரம் இட்ட 90வது நாட்களுக்குப் பிறகு விக்டரி கல்பை கொண்டு சால்மேடுகளை இருபுறமும் உடைத்து விடுவதின் மூலம் சீரிய முறையிலும் சிக்கனமாகவும் மண் அணைக்கலாம். கரும்பு நடவு செய்த 150வது நாள் மண்வெட்டி அல்லது விக்டரி கல்பபை கொண்டு மண் அணைக்கலாம்


புகைப்பட ஆதாரம் :
www.agritech.tnau.ac.in
Dr.R.ஜெகன்னாதன் ,
பேராசிரியர் உழவியல் துறை,
த.வே.ப.க , கோவை -3

 
Fodder Cholam