சாகுபடி வளர்ச்சி ஆலோசனைகள்
நெல்
- பிராசினோஸ்டீராயிருட்ஸ் தழை தெளிப்பான் 0.3பிபிஎம் ல் பூர்க்கும் பருவத்திற்கு முன் இதை தெளித்தால் தானிய உற்பத்தியை அதிகரிக்கும்
- 25 பிபிஎம் ஜபிஏ-வில், வேர்களை நட்டு வைப்பதுபோல் நனைத்து வைத்தால் வேர் பிடிப்பு அதிகரிக்கும்
- வேர் பிடிப்பு தொடங்கும் முன் தையமின் கரைசலில் 16 மணி நேரம் வேரை அந்தக் கரைசலில் மூழ்குபடி வைக்கவும்
தானியங்கள்
- தழை தெளிப்பான் பிராசினோஸ்டீராயிட்ஸ் 0.1 பி.பி.எம் யை முப்பதாவது மற்றும் ஐம்பதாவது நாட்களில் தெளித்தால் கம்பு தானிய மகசூலை அதிகரிக்கும்
- சைட்டோகையனின் 10 பிபிஎம் தழை தெளிப்பானை விதைத்த நாற்பதாவது மற்றும் ஐம்பதாவது நாட்களில் தெளித்தால் ராகி மகசூலை அதிகரிக்கும்
- யூரியா 2% தழை தெளிப்பானை நாற்பதாவது மற்றும் ஐம்பதாவது நாட்களில் தெளித்தால் ராகி தானிய மகசு{லை அதிகரிக்கும்
- மானாவாரி நிலையில் விதையை கடினமாக்க kcl 1% + cacl 2 1% - ல் போட்டால் ராகி தானிய மகசூலை அதிகரிக்கும்
பயிறு அல்லது பருப்பு வகைகள்
- மெப்பிக்குவேட் குளோரைடு 150 பிபிஎம் தழைத்தெளிப்பானை நாற்பது மற்றும் ஐம்பதாவது நாட்களில் தெளித்தால் தானிய மகசூலை அதிகரிக்கும், மற்றும் என்.ஏ.ஏ. 40 பிபிஎம்-ஐ தெளித்தால் துவரப்பருப்பு விதை உற்பத்தியை அதிகரிக்கும்
- டி.ஏ.பி 2 தழை தெளிப்பானை முப்பது மற்றும் நாற்பத்தி ஐந்தாவது நாட்களில் தெளித்தால் பச்சைப்பயிறு தானிய மகசூலை விரிவுபடுத்தும்
- பச்சைப்பயிறியை வெள்ளத்தைக் கட்டுப்படுத்த பிரேசிநோலிட் 0.1 பி.பி.எம். தழைத் தெளிப்பானை உபயோகித்தால் வெள்ளத்தின் அழுத்தத்தை சீர்படுத்தும்
- யூரியா 2 தழை தெளிப்பானை முப்பது மற்றும் நாற்பத்தி ஐந்தாவது நாட்களில் ளெித்தால் உளுந்துப்பருப்பு மற்றும் பச்சைப்பயிறு தானியங்களின் மகசூலை அதிகரிக்கும்
- 100 பிபிஎம் சாலிசிலிக் அமிலத் தழை தெளிப்பானை முப்பது மற்றும் நாற்பத்தி ஐந்தாவது நாட்களில் தெளித்தால் பச்சைப்பயிறு, உளுந்துப்பருப்பு மற்றும் சோயாபீன் தானியங்களின் மகசூலை அதிகரிக்கும்
- தட்டைப்பயிறு மற்றும் பச்சைப்பயிறு வெள்ளத்தைக் கட்டுப்படுத்த பிரேசினோலைடு 0.3 பிபிஎம் தழை தெளிப்பானை உபயோகமானது என்று அறிமுகப்படுத்தப்பட்டது
- Iron chloroisis-ஐ குறைக்க 0.5 பெரஸ் சல்பேட் தழை தெளிப்பானை உபயோகிக்கலாம்
- 0.5% ஜிங்க் சல்பேட் தழை தெளிப்பானை ஜிங்க் பற்றாக் குறையை சரி செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது
- தழை வளர்ச்சியைக் கட்டுப்படுத்த நெல் பயிரிடப்படாத, 125 பிபிஎம் மெபிகுவேட்குளோரைட் தழை தெளிப்பானை உபயோகித்தால் நல்ல பயனைத் தரும்
எண்ணெய் வித்துக்கள்
- நில்கடலையின் விதை பிடிப்பை மற்றும் விதை மகசூலை உயர்த்த மெப்பிக்குவேட் குளோரைடு, 125 பிபிஎம் தலை தெளிப்பானை உபயோகிக்கலாம்
- நிலக்கடலையில் முளைவிடுதலை அதிகரிக்க 100 பிபிஎம் எத்ரலில் விதையை மூழ்குபடி வைக்கவும்
- நிலக்கடலையை அறுவடைக்கு முன் 5 % prosopsis pod
- பிரேசினோலைடு 0.5 பிபிஎம் தழை தெளிப்பானை பூர்க்கும் மற்றும் விதை உருவாகும் பருவத்தில் தெளித்தால் நிலக்கடலையின் விதை மகசூலை அதிகரிக்கம்
- பூர்க்கும் பருவத்திலும், capsule filling பருவத்திலும் சாலிசிலிக் அமிலத்தை 100 பிபிபஎம் தழை தெளிப்பானை தெளித்தால் எள்ளின் விதை பிடிப்பையும், விதை மகசூலையும் அதிகரிக்கும்
- தேங்காய் வேர் ஊட்டத்திற்கு 40 பிபிஎம் என்.ஏ.ஏ-வை தெளித்தால் button shedding குறைக்கும் மற்றும் பருப்பு மகசூலை அதிகரிக்கும்
- தேங்காய் ஊட்டத்திற்கு macro நுண்ணூட்டம், சாலிசிலிக் அமிலம் மற்றம் என்.ஏ.ஏ-வை பயன்படுத்தினால் தேங்காயில் பருப்பு உற்பத்தியை பெருக்கலாம்
பருத்தி
- பிரேசினோலைடு 0.1 பிபிஎம் தழை தெளிப்பானை தாவரம் வளரும் பருவத்தில் மற்றும் பருவத்திலும் தெளிப்பானை தெளிக்க வேண்டும்
சோளம்
- யூரிய 1% மற்றும் பிரேசினோலை 0.1 பிபிஎம் தழை தெளிப்பானை இருபத்தி ஐந்து மற்றும் நாற்பத்தி ஐந்தாவது நாட்களில் தெளித்தால் சோ மகசூலை அதிகரிக்கலாம்
பழப்பயிர்கள்
- 1000 பிபிஎம் சிசிசி தழை தெளிப்பானை நடவு செய்த பிறகு தெளித்தால் கொத்தின் எடை கூடும்
- ஜிங்க் சல்பேட் 0.5% தழை தெளிப்பானை வருடத்திற்கு இரு முறை தெளித்தால் குளோரோசிஸ் மற்றும் பழ மகசூலை அதிகரிக்கும்
கொய்யா
ஜிங்க், மேன்கனீசு, மெக்னீசியம் (0.5%அனைத்திலும்) மற்றும் தாமிரம், இரும்பு (0.25% யையும்) கலந்து தெளித்தால் கொய்யாவில் புது இலைகள் வளர உதவும்
சப்போட்டா
- % பேரிக் அமில தழை தெளிப்பானை ஜீன் மாதத்திற்கு இடை இடையில் நான்கு முறை தெளித்தால் சப்போட்டா பழ மகசூலை அதிகரிக்கும்
குறிப்பு
1% - 1 கிராம், 100 மில்லியில் கரையும் (100மில்லிக்கு கலக்கவும்)
1பிபிஎம் - 1 மில்லிகிராம், 1லிட்டரில் கரையும் (1லிட்டருக்கு கலக்கவும் |