| 
        
          
            
              | பயிர் பாதுகாப்பு  :: ஆமணக்கு பயிரைத் தாக்கும் பூச்சிகள் |  
          
            | 
                
                  | ஆமணக்குசுருள்    பூச்சி, லைரோமைசா ட்ரைபோலி | அறிகுறிகள் | அடையாளம் | கட்டுப்பாடு |  
                  | ஆமணக்கு    காவடிப்புழு, அக்கேயா ஜனதா | அறிகுறிகள் | அடையாளம் | கட்டுப்பாடு |  
                  | மெல்ல    நகரும் பூச்சி, பாரஸா லெபிடா | அறிகுறிகள் | அடையாளம் | கட்டுப்பாடு |  
                  | ரோமப்புழு, யூப்ராக்டிஸ் ஃபிராட்டெர்னா | அறிகுறிகள் | அடையாளம் | கட்டுப்பாடு |  
                  | கம்பளி    ரோம புழு , பெரிகாலியா | அறிகுறிகள் | அடையாளம் | கட்டுப்பாடு |  
                  | ஆமணக்கு    முட்புழு, ஏர்கோலிஸ் மெரியோன் | அறிகுறிகள் | அடையாளம் | கட்டுப்பாடு |  
                  | சிகப்பு ரோமப்புழு, அமாஸ்க்டா    அல்பிஸ்ட்ரைக்கா | அறிகுறிகள் | அடையாளம் | கட்டுப்பாடு |  
                  | புகையிலை புழு, ஸ்போடாப்டிரா    லிட்டுரா | அறிகுறிகள் | அடையாளம் | கட்டுப்பாடு |  
                  | பீகார் ரோமப்புழு, ஸ்பைலோசோமா    ஆப்ளிகுவா | அறிகுறிகள் | அடையாளம் | கட்டுப்பாடு |  
                  | தண்டு  மற்றும் காய்த்துளைப்பான், கொனாகெத்தஸ் பங்க்டிஃபெரர்லிஸ் | அறிகுறிகள் | அடையாளம் | கட்டுப்பாடு |  
                  | தத்துப்பூச்சி, எம்போஸ்கா பிலோவெசன்ஸ் | அறிகுறிகள் | அடையாளம் | கட்டுப்பாடு |  
                  | வெள்ளை ஈ, ட்ரை அலிரோடஸ் ரிசினி | அறிகுறிகள் | அடையாளம் | கட்டுப்பாடு |  
                  | இலைப்பேன், ரெட்டிதிரிப்ஸ் ஸிரியகஸ்; ஸிரியோதிரிப்ஸ் டார்சாலிஸ் | அறிகுறிகள் | அடையாளம் | கட்டுப்பாடு |  
                
                  |  |  
                  | 1.	ஆமணக்கு சுருள் பூச்சி , லைரோமைசா ட்ரைபோலி  |  
                  |  தாக்குதலின்  அறிகுறிகள் 
                      புழு இலையை உண்டு சேதம் பண்ணும்.பாதிக்கப்பட்ட இலைகள் காய்ந்து இறுதியில்  கீழே விழுந்துவிடும்.    கட்டுப்படுத்தும்  முறை                   
                      வேப்பங்கொட்டை  சாறு 5 சதம் (அ) ட்ரைகோபாஸ் 2.5 மிலி மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும். | பூச்சியின்  அடையாளம்
 
                      புழு - சிறியதாக, ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறத்திலிருக்கும், தலை கிடையாது.சுருள் பூச்சி - மஞ்சள் நிறத்தில் இருக்கும். |  
                
                  |  |  
                  | 2. ஆமணக்கு காவடிப்புழு, அக்கேயா ஜனதா |  
                  | பூச்சியின்  அடையாளம் 
                      வளர்ச்சியடைந்த புழு கருமை நிற தலையைக்  கொண்டிருக்கும். உடலின் மேற்பரப்பில் சிகப்புநிற புள்ளிகள் காணப்படும்.அந்துப்பூச்சி சிகப்பு கலந்த பழுப்பு  நிறத்திலிருக்கும். இரண்டு இறக்கையிலும் பெரிய திட்டுகளும் மூன்று கரும்புள்ளிகளும்  காணப்படும். |  தாக்குதலின்  அறிகுறிகள்  
                      கட்டுப்படுத்தும் முறைபுழு இலையை உண்டு சேதம் பண்ணும். 
 
                      கைகளினால் புழுக்களை சேகரித்து அழிக்கலாம்.வேப்பம்சாறு கொட்டை 5 சதம் தெளித்து  காவடிப் புழுவின் முட்டை மற்றும் புழு பருவத்தை அழிக்கலாம்.ட்ரைக்கோகிரைமா என்ற முட்டை ஒட்டுண்ணியை  எக்டர்க்கு 50,000 வெளியிட்டு காவடிப்புழுவின் முட்டை குவியலை அழிக்கலாம்.குவினால்பாஸ் அல்லது குளோர்பைரிபாஸ்  ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினை 2 மிலி மருந்தை 1 லிட்டர் தண்ணீரில்  கலந்து தெளிக்கவும்.பறவை இருக்கையை ஏக்கர்க்கு 10 வீதம்  அமைத்து காவடிப்புழுவின் தாக்குதலைத் தவிர்க்கலாம். |  
                
                  |  |  
                  | 3.  மெல்ல நகரும் பூச்சி, பாரஸா லெபிடா |  
                  | தாக்குதலின் அறிகுறிகள்: 
                      புழு  கலைகளை தொடர்ச்சியாக உண்டு சேதப்படுத்துகிறது.இறுதியாக  செடி முழுவதும் பரவி சேதத்தை ஏற்படுத்துகிறது.  கட்டுப்படுத்தும்  முறை: 
                      
                        
                        கைகளினால்  புழுவை சேகரித்து அழிக்கலாம்.குளோர்பைரிபாஸ்   2 மிலி மருந்து 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து அந்துப்பூச்சியின்  தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். | பூச்சியின்  அடையாளம்
 
                       புழு  - பச்சை நிறத்தில் இருக்கும். உடலின் மேல்பகுதியில் வெள்ளை நிறகோடும், கருப்பு அல்லது  சிகப்பு நிறங்களில் கொத்து கொத்தாக முடிகளும் காணப்படும். |  
                
                  |  |  
                  | 4. ரோமப்புழு, யூப்ராக்டிஸ் ஃபிராட்டெர்னா |  
                  | தாக்குதலின்  அறிகுறிகள் 
                      புழுக்கள்  இலையைத் தின்று சேதப்படுத்தும். பூச்சியின்  அடையாளம் 
                      யூப்ராக்டிஸ்  ஃபிராட்டெர்னா போர்த்தீசியா  சின்ட்டிலான்ஸ்  கட்டுப்படுத்தும்  முறை: 
                      ஆரம்ப  நிலையில்  ரோமப்புழுவின் தாக்குதலைக் கட்டுப்படுத்த  வேப்பம்சாறு கொட்டை 5 சதம் தெளிக்கவும்.குளோர்பைரிபரஸ்  அல்லது மோனோகுரோட்டாபாஸ் 2 மிலி மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும். |  
                
                  |  |  
                  | 5. கம்பளி ரோம புழு , பெரிகாலியா |  
                  |   தாக்குதலின்  அறிகுறிகள் 
                      புழு  இலையைத் தின்று சேதத்தை ஏற்படுத்தும். பூச்சியின்  அடையாளம்
 
                      புழு - கருமை நிறமுடையது, தலை பழுப்பு  நிறத்திலும் நீளமான பழுப்புநிற முடியையும் கொண்டிருக்கும்.அந்துப்பூச்சி - பழுப்பு நிறத்திலிருக்கும்  பின் இறக்கை இளம்சிவப்பாகவும் கருமை நிற புள்ளியைக் கொண்டிருக்கும். கட்டுப்படுத்தும்  முறை 
                      ஆரம்ப  நிலையில் ரோமப்புழுவின் தாக்குதலைக் கட்டுப்படுத்த வேப்பம்சாறு கொட்டை 5 சதம் தெளிக்கவும்.குளோர்பைரிபாஸ்  அல்லது மோனோகுரோட்டபாஸ் 2 மிலி மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும். |  
                
                  |  |  
                  | 6. ஆமணக்கு முட்புழு, ஏர்கோலிஸ் மெரியோன் |  
                  |  தாக்குதலின்  அறிகுறிகள்: 
                      முட்புழு இலையைத் தின்று சேதப்படுத்தும் பூச்சியின்  அடையாளம்: 
                      புழு - பச்சை நிறத்திலிருக்கும், உடல்  முழுவதும் கொத்து கொத்தாக பிளவுபட்ட ரோமங்கள் காணப்படும்.அந்துப்பூச்சி -  பழுப்பு  வண்ணத்துடன் இறக்கைகளின் குறுக்காக அலை அலையால் வளைந்த கோடுகள் காணப்படும் கட்டுப்படுத்தும்  முறை: 
                      ஆரம்ப நிலையில் ரோமப்புழுவின் தாக்குதலைக்  கட்டுப்படுத்த வேப்பம் சாறு கொட்டை 5 சதம் தெளிக்கவும்குளோர்பைரிபரஸ் அல்லது மோனோகுரோட்டாபாஸ்  2 மிலி மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும் |  
              
                |  |  
                | 7. சிகப்பு ரோமப்புழு, அமாஸ்க்டா அல்பிஸ்ட்ரைக்கா |  
                |  தாக்குதலின் அறிகுறிகள்
                     
                    ரோமப்புழு இலையின் அடிப்பகுதியில் காணப்படும்.இலையைச் சுரண்டி பச்சையத்தை உண்ணும்.நன்கு வளர்ச்சியடைந்த புழு நரம்புபகுதியை மட்டும் விட்டுவிட்டு இடைப்பட்ட  பகுதிகளை உண்டு சேதப்படுத்துகிறது. பூச்சியின்  அடையாளம்: 
  புழு - பழுப்பு நிறத்திலிருக்கும், உடலின்  மேற்பரப்பில் நீளமான சிகப்பு கலந்த பழுப்புநிற முடிகள் உண்டு சேதப்படுத்துகிறதுஅந்துப்பூச்சி - அந்துப்பூச்சி வெண்ணிற  இறக்கைகளைக் கொண்டிருக்கும் | கட்டுப்படுத்தும் முறை 
                    முட்டைக்குவியலை சேகரித்து அழிக்கலாம்.கைகளினால் ரோமப்புழுவை சேகரித்து அழிக்கலாம்.கோடைக் காலத்தில் நிலத்தை உழவு செய்து அந்துப்பூச்சியின் கூட்டுப்புழுக்களை  அழிக்கலாம்.விளக்கு பொறி அமைத்து அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.காட்டாமணக்கு அல்லது ஐபோமியா ஆகியவற்றை கவர்ச்சிப் பயிராக அமைத்தால்  ரோமப்புழு இடம்விட்டு இடம் செல்வதைத் தவிர்க்கலாம்.கார்பரில் அல்லது குயினால்பாஸ் இவற்றில் ஏதேனும் ஒரு தூளை எக்டர்க்கு  25 - 30 கிலோ வீதம் தூவி இளம் ரோமப்புழுவைக் கட்டுப்படுத்தலாம்.டைகுளோரோபாஸ் 200 மிலி மருந்தை 400 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தால்  வளர்ச்சியடைந்த ரோமப் புழுவின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.டைமீத்தேயேட், (அ)  மோனோகுரோட்டாபாஸ் 2 மிலி மருந்தை 1 லிட்டர் தண்ணீரில்  கலந்து தெளிக்கவும்.நச்சு உணவை அமைத்து (10 கிலோ அரிசிதவுடு + 1 கிலோ பனங்கட்டி + 1 லிட்டர்  குயினால்பாஸ்) அந்துப்பூச்சியை அழிக்கலாம். |  
              
                |  |  
                | 8. புகையிலை புழு, ஸ்போடாப்டிரா லிட்டுரா |  
                | தாக்குதலின் அறிகுறிகள் 
                    வளர்ச்சியடைந்த புழு இலையைத் தின்று சேதப்படுத்தும்.சேதம் அதிகமாகும் நிலையில் புழு கணு மற்றும் கிளைகளைத் தவிர அனைத்து பாகங்களையும்  தின்று சேதப்படுத்தும். கட்டுப்படுத்தும் முறை:  
                    ஆரம்ப நிலையில் முட்டைக்குவியலையும்,  புழுக்களையும் கைகளால் சேகரித்து அழிக்கலாம்.கோடைக்காலங்களில் நிலத்தை  உழவு செய்து அந்துப்பூச்சியின் கூட்டுப்புழுக்களை அழிக்கலாம்.இனக்கவர்ச்சி பெரறியை ஏக்கர்க்கு  4 - 5 வீதம் அமைத்து ஆண் அந்துப்பூச்சியை கவர்ந்து அழிக்கலாம்.வேப்பஞ்சாறுக்கொட்டை 5  சதம் அல்லது குளோர்பைரிபாஸ் 2.5மிலி அல்லது மோனோகுரோட்டாபாஸ் 2 மிலி மருந்து இவற்றில்  ஏதேனும் ஒன்றினை தெளித்து இளம்புழுக்களின் தாக்குதலைத் தவிர்க்கலாம்.நச்சு உணவை (1 லிட்டர் மோனோகுரோட்டாபாஸ்  (அ) 1 கிலோ கரர்பரில் தூள் + 10 கிலோ அரிசிதவிடு + 1 கிலோ பனங்கட்டி + 1 லிட்டர்  தண்ணீர்) எக்டர்க்கு ஒன்று வீதம் அமைத்து வளர்ச்சியடைந்த புழுவை அழிக்கலாம். | பூச்சியின்  அடையாளம்: 
                    முட்டை - பெண் அந்துப்பூச்சி முட்டையை  குவில்களாக இடும். முட்டை பழுப்புநிறத்திலிருக்கும்.புழு - இளம் பச்சை நிறத்திலும் கருமை  நிறக்கோடுகள் உடலின் மேற்பரப்பில் காணப்படும். அந்துப்பூச்சி - அந்துப்பூச்சியின் முன்  இறக்கை பழுப்பு நிறத்தில் இருக்கும். வெள்ளை நிற கோடுகள் இறக்கையில் குறுக்கே காணப்படும்.  பின் இறக்கை வெள்ளை நிறத்திலும் இறக்கையின் ஓரத்தில் பழுப்புநிற திட்டுகள் காணப்படும்.     |  
              
                |  |  
                | 9. பீகார் ரோமப்புழு, ஸ்பைலோசோமா ஆப்ளிகுவா |  
                |  தாக்குதலின் அறிகுறிகள் 
                     முட்டையிலிருந்து வெளிவரும் புழு இலையின் அடிப்பகுதியை தொடர்ச்சியாக உண்டு சேதப்படுத்தும். பூச்சியின்  அடையாளம்: 
                    முட்டை - பெண் அந்துப்பூச்சி இலைகளின்  அடிப்புறத்தில் முட்டையைக் குவில்களாக இடும். புழு - ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.  உடலின் இரண்டு ஓரங்களிலும் மஞ்சள் நிற முடிகள் காணப்படும்அந்துப்பூச்சி - ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.  முன் இறக்கை பழுப்பு நிறமாகவும் இரண்டு கரும்புள்ளிகளைக் கொண்டிருக்கும் | கட்டுப்படுத்தும் முறை 
                    முட்டைக் குவியலையும் இளம் புழுக்களையும் சேகரித்து அழிக்கலாம்.வேப்பங்கொட்டை சாறு 5 சதம் தெளித்து இளம் புழுக்களை அழிக்கலாம். குயினால்பாஸ் அல்லது குளோர்பைரிபாஸ் 2 மிலி மருந்தை  1 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளித்து வளர்ச்சியடைந்த புழுவை அழிக்கலாம். |  
              
                |  |  
                | 10. தண்டு மற்றும்  காய்த்துளைப்பான், கொனாகெத்தஸ் பங்க்டிஃபெரர்லிஸ் |  
                | தாக்குதலின் அறிகுறிகள் 
                    புழு பூக்கும் தருணத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தும்.புழுக்கள் காய்களையும், காயின் தண்டுகளையும் துளைத்து உட்சென்று தின்று  அழிக்கும்.புழுக்கள் காய்களின் இடைப்பட்ட பகுதியில் நூலாம்படையின் அடிப்பரப்பில்  இருந்து சேதத்தை ஏற்படுத்தும். பூச்சியின்  அடையாளம்: 
                    புழு - புழு இளம்பச்சை நிறத்தில் இருக்கும்.  புழுவின் மேற்பகுதி இளஞ்சிவப்பு நிறத்துடனும் மெல்லிய ரோமங்களுடனும் காணப்படும்அந்துப்பூச்சி - மஞ்சள் நிறமுடையது,  முன் இறக்கையில் கரும்புள்ளிகள் காணப்படும் |  |  
                |  | கட்டுப்படுத்தும் முறை: 
                    தாக்கப்பட்ட  காய்களையும், தண்டுகளையும் சேகரித்து அகற்றிவிட வேண்டும்.புரப்னோபாஸ்  1.5 மிலி அல்லது மோனோகுரோட்டோபாஸ் 2 மிலி  மருந்தை  1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.பூக்கும்  தருணத்தில் மருந்துத் தெளித்தல் அவசியம். |  
              
                |  |  
                | 11. தத்துப்பூச்சி, எம்போஸ்கா பிலோவெசன்ஸ் |  
                | தாக்குதலின்  அறிகுறிகள்: 
                    குஞ்சுகளும்,  வளர்ந்த பூச்சிகளும் இலைகளின் சாறை உறிஞ்சி சேதப்படுத்தும்.தாக்கப்பட்ட  இலைகள் சேதம் அதிகமாகும் நிலையில் கருகி கீழே விழுந்துவிடும். பூச்சியின்  அடையாளம் 
    குஞ்சுகள் - பச்சை நிறத்தில் இருக்கும்தத்துப்பூச்சி - பச்சை நிறமுடையது |  
                |  | கட்டுப்படுத்தும்  முறை 
                    இமிட்குளோரோபிட் (அ) கரர்போசல்பான்  இவற்றில் ஏதேனும் ஒரு மருந்தினால் விதை நேர்த்தி செய்த பிறகு பயிரிடலாம்.மோனோகுரோட்டாபாஸ் மருந்தினை தண்டின்  மேல் தெளிக்க வேண்டும்.டைமீதேயேட் 0.05 சதம் (அ) மோனோகுரோட்டபாஸ்  0.05 சதம் தெளித்து சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். |  
  
                |  |  
                | 12.வெள்ளை ஈ, ட்ரை அலிரோடஸ் ரிசினி |  
                | தாக்குதலின்  அறிகுறிகள் 
                    குஞ்சுகளும்  வளர்ந்த பூச்சியும் இலைகளின் சாறை உறிஞ்சுகிறது.தேன்போன்ற  திரவத்தை இலைகளில் மேற்பரப்பில் குஞ்சுகள் உண்டுபண்ணும்.தாக்கப்பட்ட  இலைகள் கேப்னோடியம் பூஞ்சையினால் கவரப்பட்டு கருமை நிறமாக மாறிவிடும்.தாக்கப்பட்ட  செடிகள் வள்ர்ச்சிக்குன்றி காணப்படும். பூச்சியின்  அடையாளம் 
                    குஞ்சுகள்  - மஞ்சள் நிறமாக இருக்கும். | கட்டுப்படுத்தும்  முறை 
                    மஞ்சள்  கவர்ச்சி பொறி அமைத்து வெள்ளை ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம்.ட்ரைசோபாஸ்  2.5 மிலி அல்லது அசப்பேட் 2 மிலி மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.வேப்பங்சாறுக்  கொட்டை 5 சதம் (அல்லது) வேப்பம் எண்ணெய் 3 சதம் இவற்றில் ஏதேனும் ஒன்றினைத் தெளித்து  வெள்ளை ஈக்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். |  
  
                |  |  
                | 13. இலைப்பேன்	ரெட்டிதிரிப்ஸ் ஸிரியகஸ்; ஸிரியோதிரிப்ஸ் டார்சாலிஸ் |  
                | தாக்குதலின்  அறிகுறிகள் 
                    குஞ்சுகளும்,  வளர்ந்த பூச்சிகளும் இலைகளின் சாறை உறிஞ்சி சேதப்படுத்தும்.தாக்கப்பட்ட  இலைகளின் மேல் பகுதியில் மஞ்சள் நிறத் திட்டுகளும் கீழ் பகுதியில் பழுப்புநிறத் திட்டுகளும்  காணப்படும்.சேதம்  அதிகமாகும் போது தாக்கப்பட்ட இலைகள் சுருண்டு கருகிவிடும். பூச்சியின்  அடையாளம்
 
                    குஞ்சுகள் - இளம் சிவப்பு நிறத்தில்  இருக்கும்செதில் பூச்சி - கருமை நிறமுடையது சீப்பு  போன்ற முன் இறக்கையைக் கொண்டிருக்கும்.  | கட்டுப்படுத்தும்  முறை 
                    டைமீத்தேயேட்  (அ) மெதில் டெமட்டான் (அ) மோனோகுரோட்டபாஸ் 2 மிலி மருந்தை 1 லிட்டர் தண்ணீருடன் கலந்து  தெளிக்கவும்.மோனோகுரோட்டபாஸ்  320 மிலி + வேப்பம் எண்ணெய் 1 லி + காதி தூள் 1 கிலோ ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீருடன்  கலந்து தெளித்து செதில்பூச்சியைக் கட்டுப்படுத்தலாம். |  |    |