Agriculture
வேளாண்மை :: நார் பயிர்கள்

சணல் (கார்கோரஸ் ஒலிடோரியஸ்   & கார்கோரஸ் கேப்சுலாரிஸ் )

  arrow மத்திய சணல் மற்றும் சணல் சார்ந்த நார் ஆராய்ச்சி நிறுவனம், பாரக்பூர்‌
  arrow தேசிய சணல் மற்றும் சணல் சார்ந்த நார் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம், கொல்கத்தா
  arrow சணல் மேம்பாட்டு இயக்குநரகம்

பயிர் மேலாண்மை

சணலை சாகுபடி செய்ய தகுந்த மாவட்டங்கள் கோயம்புத்தூர், கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை மற்றும்  செங்கல்பட்டு மாவட்டங்களாகும். மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி  மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் சில பகுதிகளில் எங்கெல்லாம் நிச்சயமான நீர் நிலைகள் உள்ளனவோ, அங்கு சணல் சாகுபடி செய்யலாம்.

மண் வகைகள்

மணல் கலந்த வண்டல், களிமண் சார்ந்த இடைப்பட்ட மண்வகைகள் சணல் சாகுபடி செய்ய ஏற்றவையாகும். கேப்சுலாரில் சணல் வகை நீர் தேங்கும் நன்செய் நிலங்களிலும் வளரக்கூடியது. ஆனால் ஒலிட்டோரியல் சணல் வகை நீர் தேங்கும் பகுதிகளில் வளராது.

பருவம் : மாசி - வைகாசி (பிப்ரவரி).

இயற்கை மற்றும் செயற்கை உரமிடல்

ஐந்து டன் மக்கிய தொழு உரத்தை கடைசி உழவின்போது இடவேண்டும். எக்டருக்கு 20 கிராம் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை அடியுரமாக இடவேண்டும். நீர் நிலைக்கு ஏற்ப பாத்தி அமைக்கப்பட வேண்டும்.

இரகங்கள் :

சேப்சுலாரிஸ்  சணல் - ஜே.ஆர்.சி 212,321,7447.

ஒலிட்டோரியல் -ஜே.ஆர்.ஓ 524, 878, 7835.

வயது - 120-140 நாட்கள்

சணல் வகை விதையளவு (கி/எ) இடைவெளி (செ.மீ) ஒரு சதுர மீட்டருக்கு இருக்கவேண்டிய செடி எண்ணிக்கை

 

வரிசை விதைப்பு

தெளிப்பு

 

 

ஒலிட்டோரியல்

5

7

25 x 5

80

கேப்சுலாரிஸ்

7

10

30 x 5

67

களை மேலாண்மை

இரண்டு முறை அதாவது விதைத்த 20-25 நாட்களில் ஒரு முறையும், 35-40 நாட்களில் ஒரு முறையும் களை எடுத்து கட்டுப்படுத்தலாம். புளுகுளோரலின் களைக்கொல்லியை ஒரு எக்டருக்கு 1.5 கிலோ என்ற அளவில் விதைத்த மூன்றாம் நாள் தெளித்து, உடன் நீர்ப்பாய்ச்சவேண்டும். இதைத் தொடர்ந்து 30-35 நாட்களில் ஒரு கைக்களை எடுக்கவேண்டும்.

மேலுரம் இடல்

ஒவ்வொரு முறை களை எடுத்த பின்பும் அல்லது 20-25 நாட்கள் மற்றும் 35-40 நாட்களில் 10 கிலோ தழைச்சத்தை இடவேண்டும். வறட்சியான காலங்களில்  8 கிலோ யூரியாவை 2 சத கரைசலாக ஒரு லிட்டருக்கு 20 கிராம் யூரியா என்ற அளவில் 40-45 நாளிலும் மற்றும் 70-75 நாளிலும் தெளிக்கலாம்.

நீர் மேலாண்மை

சராசரியாக சணல் பயிருக்கு 500 மில்லி மீட்டர் நீர் தேவைப்படும். விதைத்தவுடன் ஒரு முறையும் நான்காம் நாள் ஒரு முறையும் நீர் பாய்ச்சவேண்டும்.

அறுவடை

சணல் சாதாரணமாக 100ல் இருந்து 110 நாட்களில் அறுவடைக்கு வரும். ஆனாலும் தேவைக்கேற்ப 135 நாட்கள் கழித்தும் அறுவடை செய்யலாம். அறுவடை செய்யப்பட்ட சணல் செடிகள் வயலில் 3-4 நாட்கள் பரப்பப்பட்டு இலையுதிரி வைக்கப்படவேண்டும். அதன் பிறகு மெல்லிய மற்றும் உருண்ட தண்டுகள் தனியாக பிரிக்கப்பட்டு கத்தைகளாக செளகரியத்திற்கேற்ப கட்டப்படவேண்டும்.

மகசூல்

ஒரு எக்டரில் அறுவடையாகும் செடிகள் 45-50 டன்கள் வரை எடை உள்ளது. இதிலிருந்து எக்டருக்கு சுமார் 20-25 டன் சணல் கிடைக்க வாய்ப்புள்ளது.

 
 

முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2021

Fodder Cholam