குறிப்பு : தீவனச் சோளத்துடன் கோ – 5 மற்றும் கோ – எஃப் சி 8 இரக தட்டைப்பயறை சேர்த்து ஊடு பயிராக பயிர் செய்தால் சத்தான தீவனத்தைப் பெறலாம்.
பருவம் |
: |
ஆண்டு முழுவதும் இறவைப் பயிராகப் பயிர் செய்யலாம். ஒரு முறை விதைத்து பல முறை அறுவடை செய்யலாம். |
நிலம் |
: |
நீர் தேங்காத நல்ல வடிகால் வசதியுள்ள நிலத்தைத் தேர்வு செய்ய வேண்டும். |
நிலம் தயாரித்தல் |
: |
2 முதல் 3 முறை உழுது பண்படுத்தப்பட்ட நிலத்தில் 60 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்கவும். உழுவதற்கு முன் எக்டருக்கு 25 டன் தொழுவுரம் இடவும். |
விதை அளவு |
|
5 கிலோ / எக்டர் |
இடைவெளி |
: |
30 x 15 செ.மீ.(விதைகளை பார்களின் இருபுறமும் விதைக்க வேண்டும்)
60 x 15 செ.மீ.(விதை உற்பத்தி செய்வதற்கு) |
உரம்(எக்டருக்கு) |
: |
அடியுரம்
45:40:40 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து
மேலுரம்
விதைத்த 30 வது நாட்களில் 45 கிலோ யூரியா இட வேண்டும். ஒவ்வொரு ஆண்டு முடிவுக்குப்பின் 45:40:40 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து
இடவும். |
களை நிர்வாகம் |
: |
முதல் களை விதைத்த 25-30 நாட்களில் எடுக்கவும். பிறகு தேவைப்படும் போது ஒவ்வொரு அறுவடைக்குப்பின்பும் ஒரு முறை களை எடுத்து உரமிடவும். |
நீர்ப்பாசனம் |
: |
விதைத்தவுடன் நீர் பாய்ச்சி, மூன்றாம் நாள் உயிர்த்தண்ணீர் கொடுத்த பிறகு 7-10 நாட்களுக்கொருமுறை மண் வகை மற்றும் மழை அளவைப்பொறுத்து நீர் பாய்ச்ச வேண்டும். |
பயிர்ப்பாதுகாப்பு |
: |
பொதுவாகத் தேவையில்லை |
பசுந்தீவன அறுவடை |
: |
50 விழுக்காடு பூக்கும் தருணத்தில் அறுவடை செய்யலாம். முதல் அறுவடை விதைத்த 65 -70 நாட்களிலும் அடுத்த அறுவடைகள் 50 நாட்களுக்கொருமுறை |
விதை அறுவடை |
: |
விதைத்த 110-125 நாட்களில் அறுவடை செய்யலாம். |
பசுந்தீவன மகசூல் |
: |
192 டன்கள் / எக்டர்/ ஆண்டு (6-7 அறுவடைகளில்) |
விதை மகசூல் |
|
1000 கிலோ / எக்டர்/ ஆண்டு. ஆண்டுக்கு மூன்று முறை அறுவடை செய்யலாம். விதை உறக்க நிலை 45-60 நாட்கள். அதனால் அறுவடைக்குப் பிறகு 60 நாட்கள் கழித்து விதைக்க வேண்டும் |