Agriculture
வேளாண்மை :: தீவன பயிர்கள்

உலர் தீவனம்

தீவனப்பயிர்கள் இளமையாக இருக்கும்போதே , அதாவது பூவிடும் போது அதனை அறுத்து சூரிய ஒளியில் காயவைத்து உலர்ந்த புல்லாக மாற்றப்படுகிறது. இப்படி உலர்த்தப்பட்ட புல் சரியான முறையில் இருப்பின், நல்ல மணத்துடன் சத்து பொருட்கள் குறையாமலும் உள்ள சிறந்ததொரு தீவேனமாகும்.

உலர்த்தி காயவைக்கும்போது ஒரே சீராக பரப்பி காயவைத்தல் அவசியம். இப்படி காயவிட்ட புல்லை ஈரம் படாமல் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு பக்குவப்படுத்திய புல்லில் ஈரப்பசை 15 முதல் 20 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது, ஏனெனில் இதனை குவியல் செய்யும்போது ஈரம் அதிகம் இருப்பின், சூடேறி கெட்டுவிடும்.

தீவனபயிர்கள் முழுமையாக முதிர்ச்சி அடைவதற்கு முன் அதாவது 50 சதவீதம் பூக்கள் வந்தவுடன் அறுவடை செய்து உலரவைத்து சேமிக்க வேண்டும். உளர் தீவனம் இலையுடன் மண் மற்றும் களைச்செடிகள் இல்லாமலும், பூஞ்சாணம் தாக்காமல் நல்ல மெல்லிய வாசனையுடன் இருத்தல் அவசியம் .

 
Fodder Cholam