Agriculture
வேளாண்மை :: தீவன பயிர்கள்

இயந்திர முறைகள்

வேலி முறையில் காய வைக்கும் தளமானது, வலைகள் மற்றும் ஓரத்தில் இரும்புத்தூண்களைக்கொண்டு அமைக்கப்படுகின்றது. இந்த முறை பெர்சீம் மற்றும் குதிரை மசால் பயிர்களுக்கு உகந்தது. இதிலிருந்து தயாரிக்கப்படும் உலர் தீவனம் பசுமையாகவும் மற்றும் நறுமணம் உடையதாகும். இயந்திர சேமிப்பு முறையில் 2-3 சத புரத, இது காய வைக்கும் நோக்கத்துடன் நேர் விகித்த்தில் தொடர்பு கொண்டது. இந்திய தீவன ஆராய்ச்சி நிறுவனத்தால் கட்டாய காற்றுத்தொகுதி உலர் தீவனம் தயாரிப்பான உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு நாளைக்கு ஒரு டன் திறன் கொண்டது.

அறுவடைக்கப்பின் சுவாசத்தால் கரையும் சர்க்கரைகள், கார்பன்- டை –ஆக்சைடு மற்றும் நீராக பிளவு உடையும். இதன் விளைவாக சத்து இழப்பு மற்றும் செரிக்கும் திறன் குறைவது மட்டுமின்றி செல்லுலோஸ் மற்றும் விக்சின் வலியை அதிகரிக்க செய்கிறது. தாவர என்சைம்கள் புரத்த்தின் மீது வினைபுரிந்து புரோட்டியோலைசிஸ் மூலம் அமினோ அமிலங்கள் உற்பத்தியாகிறது. இதனால் மீண்டும் சத்துக்களின் அளவு மற்றும் சேமிக்கும் திறனைக்குறைக்கிறது. இதனால் சூரிய ஒளியில் விரைவாக காய வைக்கும் முறை பின்பற்றப்படுகிறது.

 
Fodder Cholam